From jayandgl@... Wed Jul 24 10:17:00 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 24 Jul 2002 17:17:00 -0000
Received: (qmail 65349 invoked from network); 24 Jul 2002 17:17:00 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 24 Jul 2002 17:17:00 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 24 Jul 2002 17:16:59 -0000
Received: from smtp2.eth.net ([202.9.178.23]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 24 Jul 2002 22:53:17 +0530
Received: from 202.9.169.10 by smtp2.eth.net (InterScan E-Mail VirusWall NT); Wed, 24 Jul 2002 22:55:48 +0530
Message-Id: <4.3.0.20020724222913.00a7d9f0@localhost>
X-Sender: jayandgl/pop3.eth.net@localhost
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Wed, 24 Jul 2002 22:29:37 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: njaanametty - paayiram
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: jayandgl@...
X-OriginalArrivalTime: 24 Jul 2002 17:23:17.0296 (UTC) FILETIME=[CC8EDB00:01C23336]
X-eGroups-From: Njaanavettiyaan
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19212
திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய
ஞானமெட்டி
**********
(ஞானம் + எட்டி = ஞானமெட்டி)
பாயிரம்
######
சித்திரபானு (கி.பி.2002) ஆண்டு ஆடி மாதம் 24ஆம் நாள், குரு
பவுர்ணமியில் இந்நூல் நமது தமிழ் இணையங்களில் (அகத்தியர், மெய்கண்டார்,
தமிழ் உலகம்), திருவருள் ஆணையின் பேரில், குருவின் ஆசியுடன் அடியேனால்
மின்வலை ஏற்றப்பட்டது. மூத்தோர் ஆசி கூறுக. இளையோர் இறையை வணங்கிப்
பலன் பெறுவீராக.
##############
காப்பு:
1.அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால்போற்றி
யகண்டபரிபூரணத்தி னருளைப்போற்றி
மண்டலஞ்சூழிரவிமதி சுடரைப்போற்றி
மதுரதமிழோ துமகத் தியனைப்போற்றி
எண்டிசையும்புகழுமெந்தன் குருவைப்போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம்போற்றி
குண்டலிக்குளமர்ந்த விநாயகனைப்போற்றி
குகமணியின் தாளிணையைப் போற்றிபோற்றி.
அண்டமாகிய வெளியிலும், பிண்டமாகிய உடலினுள்ளும் நிறந்து நிற்கும்
பிரும்மா, விட்டுணு ஆகியோர் போற்றி. அகண்ட பரிபூரணமாகிய இறையின்
அருள் போற்றி. இப்பூவுலகம்சூழ் சூரிய, சந்திரர் ஆகியோரின் சுடர்
போற்றி. இனிய தமிழோதும் அகத்தியனைப் போற்றி.
எட்டுதிக்குகளும் போற்றும் என் ஞானாசிரியனாகிய சுவாமி போற்றி.
இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகியவை சந்திக்குமிடமாம் கமலம் போற்றி.
யோகநூல்களில், குண்டலினி எனப்படுமிடத்தில் அமர்ந்திருக்கும் விநாயகன்
போற்றி. அத்துடன், குகமணியாம்(குகை + மணி) சுப்பிரமணியம் போற்றி.
பிரம்ம விட்டுணுக்கள் அண்டத்திற் செய்வது போலவே பிண்டத்திலும் தத்தம்
செயல்களை செய்யவேண்டியது மிக அவசியமாகிறது. ஆதலால், அவர்களை,
அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால்போற்றி என்றார். சர்வவியாபகத்
திருவருளையே இந்நூல் உட்கிடையாகக் கொண்டிருத்தலின் அகண்டபரிபூரணத்தி
னருளைப்போற்றி என்றார். இந்நூல் தேமதுரத் தமிழில் இயம்பப்பட்டிருப்பதால்,
அத்தமிழுக்குரியவனாகிய குருமுனியாம் அகத்தியனைப் போற்றினார். குருவருள்
இல்லையெனில், இம்மாகாவியம் இனிதேஉலகத்தோருக்குக் கிடைக்காதென்பதால்,
எண்டிசையும்புகழும் குருவைப் போற்றினார்.
இந்நூல் முழுவதும், பிண்டக் கருத்துக்கள் அண்டக் கருத்துக்களில் மறைவாக
இயம்பப்பட்டிருப்பதால், முக்கலையின் மூலாதாரமாம் விநாயகனைப் போற்றினார்.
அத்துடன், (கபாலக்)குகை மணியையும் போற்றினார்.
தொடரும்
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)