From jayandgl@... Thu Jul 25 08:25:58 2002
Return-Path: X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 25 Jul 2002 15:25:57 -0000
Received: (qmail 67562 invoked from network); 25 Jul 2002 15:25:57 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 25 Jul 2002 15:25:57 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jul 2002 15:25:56 -0000
Received: (qmail 28656 invoked by uid 7002); 25 Jul 2002 20:55:09 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 25 Jul 2002 20:55:09 +0530
Received: (qmail 28592 invoked from 202.9.169.15 by webmail2); 25 Jul 2002 20:55:07 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.15) by webmail2.maa.sify.net with SMTP; 25 Jul 2002 20:55:07 +0530
Message-ID: <3D40163B.2B68D9E3@...>
Date: Thu, 25 Jul 2002 20:46:11 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com, meykandar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: Awwaik kuRaL (211 - 220)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19221
ஒளவைக் குறள்
III. தன்பால்
2. அங்கியில் பஞ்சு (211 - 220)
211. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேனினையில்
சங்கிக்க வேண்டாஞ் சிவம்.
சிதாகாயத்தில் நினைவில் மூலாக்கினியைப் பாய்ச்சினால், அனலிற்
பஞ்சுபோல் உடனே சிவம் சோதியாய் வெளிப்படும். சந்தேகப்பட வேண்டாம்.
212. மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்.
சீவனை அறியும் உள் மெய்த் தத்துவத்தை அறியாதவர் மனதில் தெய்வ சக்தி
இல்லாது சிவம் நீங்கியிருக்கும். மனன சத்தியே குடியிருக்கும்.
213. நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
உந்திக்கமலத்தில் மனதை உதிக்கவிடாது செய்து சிவத்தைக் கருத்தில் நிலைத்து
நிறுத்திச் சிந்திக்காதவர்களுக்குச் சிவம் அபயக்கரம் நீட்டாது.
218. துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
மரணம் = உற்பத்தி; பிறப்பு = லயம்;
உடலில் துரியங் கடந்த துரியாதீதத்தில் சோதி கண்டால் பிறப்பு இறப்பு
(எண்ணங்களின் உற்பத்தி, மறதி) இல்லை.
219. மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும்.
உடலினுள் நினைவில் சந்திரகலை பரிணமிக்க, விதிக்கப்பட்ட கால அளவுகளை
எளிதாகக் கடக்கலாம்.