From jayandgl@... Thu Jul 25 09:47:46 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 25 Jul 2002 16:47:46 -0000
Received: (qmail 9858 invoked from network); 25 Jul 2002 16:47:43 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 25 Jul 2002 16:47:43 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 25 Jul 2002 16:47:42 -0000
Received: (qmail 29015 invoked by uid 7002); 25 Jul 2002 22:16:50 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 25 Jul 2002 22:16:50 +0530
Received: (qmail 28948 invoked from 202.9.169.178 by webmail2); 25 Jul 2002 22:16:48 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.178) by webmail2.maa.sify.net with SMTP; 25 Jul 2002 22:16:48 +0530
Message-ID: <3D40295D.C0B63ED3@...>
Date: Thu, 25 Jul 2002 22:07:49 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com, meykandar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: njaanametti - 3
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19222

ஞானமெட்டி
பாயிரம்

3. நிலவுபொழியிரவிமதி யருளினாலே
நின்றிலங்குநாதவிந்தி னிருவிகாப்பு
வலமிடமாய்சூழ்ந்துவருங் காரசாரம்
வழலையெனுமாமதுர வாணிகாப்பு
உலகமதிற்கடில்சூழ்ந்த புவனைவாலை
யோங்காரமூலகண பதியேகாப்பு
தவமதிதசனகாதி ரிஷிகள்பாதஞ்
சடாதாரசூக்ஷமசடா தாரங்காப்பாம்.
உரை:
கிரணங்களை வீசுகின்ற சூரிய சந்திரர்களின் கிருபையால் விளங்குகின்ற
நாதமும், விந்துவும், உடலினுள்ளே வலமிடமாகச் சுற்றிவருகின்ற
கரசாரமெனவும், வழலையெனவும் உருவகிக்கப்படும் சரசுவதியும், ஆழிசூழ்
உலகத்தோரால் வணங்கப்பெறும் வாலையும், பிரணவமயமான ஓங்கார கணபதியும்,
மிகவும் மேம்பாடுடைய முனிபுங்கவர்களான சனகாதி முனிவர்களின் பாதங்களும்,
தூல சடாதாரமும் (ஆறு ஆதாரங்கள்), சூக்கும ஆதாரங்கள் ஆறும் இந்நூல் இனிதே
முடிய காப்பாம்.
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)