From harikris@... Thu Jul 25 11:34:37 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 25 Jul 2002 18:34:36 -0000
Received: (qmail 19836 invoked from network); 25 Jul 2002 18:34:35 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 25 Jul 2002 18:34:35 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jul 2002 18:34:34 -0000
Received: (qmail 2226 invoked by uid 7002); 26 Jul 2002 00:03:47 +0530
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by webmail1.maa.sify.net with SMTP; 26 Jul 2002 00:03:47 +0530
Received: (qmail 1713 invoked from 210.214.128.194 by webmail1); 26 Jul 2002 00:03:27 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.128.194) by webmail1.maa.sify.net with SMTP; 26 Jul 2002 00:03:27 +0530
Message-ID: <00e301c2340a$c2911300$4483d6d2@g9d6h9>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: Uvamai #14 plus plus plus plus
Date: Fri, 26 Jul 2002 00:09:20 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 19223


பொருள் சொல்லுன்னு சொன்னப்புறம் வாயமூடிக்கிட்டு இருக்கிறவன் புலவனே ஆக மாட்டான். நாம பெரிய புலவனில்லாட்டாலும் புளுவன் இல்லியா? அந்தப் பேரக் காப்பாத்திக்க வாணாமா?

பகையகத்துப் பேடி கை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன் கற்ற நூல்

அப்படின்னு வள்ளுவரே சொல்லிப் போட்டாரு. 'என்னா படிச்சு என்னடா? சபையிலேகேட்ட கேள்விக்குப் பதில் சொல்லன்னா, நீ படிச்ச படிப்பு, பேடி கையில இருக்கற பளபளக்கிற கத்தி மாதிரிதான்.' இங்க பகையில்லை. அன்பு அண்ணனே கூப்பிட்டிருக்காரு. 'அண்ணன் காட்டிய வழியம்மா.... இது அன்பால் விளைந்த .... என்னாங்கண்ணே சொல்றது.... பழி இல்லியே....ஆங்... மொழி அம்மா.....'

பொருள் சொல்லிப் போடுதேன். நாம சகாதேவன் மாதிரி. யுத்தத்துல செயிக்க நாள் குறிச்சுக் கொடுக்கச் சொல்லி துரியோதனன் கேட்டானாம். ரொம்ப சரின்னு குறிச்சுக் கொடுத்தானாம். (அய்யிய்யே.. இதானே வேணாம். நம்ம டாக்டரை துரியோதனன்னு எப்ப சொன்னேன்? அவரு சூத்திரதாரி. கிஸ்டன். நாம பேர்லதான் கிஸ்டன். அவரு மெய்யாலுமே கிஸ்டன். பெரிசு பாரதம், பெரிசு கீதை எல்லாம் சொல்லியிருக்காரு. வேண்ணாக்க இணையத்தில் செய்பியைப் பாத்துக்கோங்க.) மூல ஏட்டில் கண்டபடி எழுதப்பட்டிருக்கிறது என்னு சொல்றாரே, தெரிஞ்சுக்க வேணாம்? ஆமாம் 'கண்டபடி'தான் எளுதிப் போட்டிருக்கான் பய மவன். புலவனச் சொல்றேங்க.

இனிமே, பொருள். என் கோழி மூளைக்கு எட்டின அளவுக்கு.


"வாரிட்டு விம்மிப் புடைத்து இறுகி இளகி மார்பு இடம் எலாம்
கவர்ந்து"

கச்சு அணிந்து, அதனால் விம்மிப் புடைத்தும், இறுகியும் ஆனால் உண்மையில் மென்மையானதாகவும், மார்பின் முழுப்பரப்பையும் 'இடம் இல்லை' என்னும்படியாக ஆக்கிரமித்துக் கொண்டும்,

"வட்டம் இட்டு அடியிட்டு நாளுக்கு நாள் மேல்வளர்ந்து பூரித்து, "

வட்ட வடிவம் பெற்றும், கீழ்ப்பக்கம் திண்மை கொண்டும் (சாயாமல்), ஒவ்வொரு நாளும் கொஞ்சம் பெரிதாகிப் பூரித்தும்,

"முத்து
மாலையிட்டு, இறுமாந்து பட்டவர்த்தனயானை மத்தகத்தோடு எதிர்த்து
வாதிட்டு, "

முத்து மாலையால் அலங்கரிக்கப் பட்டும், திமிர்ந்து நிற்பதால் கர்வம் கொண்டவரை ஒத்தும், யானை மத்தகமா, நானா எது பெரிதானது எது அழகானது என்று வாதத்திற்குக் கிளம்புவது போன்றும்,

"மல்லிகைப் பூச்செண்டினைத் தினம் வாட்டப்படுத்தி, வரையைப்
போரிட்டு, "

மேலே அலங்கரித்துக் கொண்டிருக்கும் மல்லிகைச் செண்டை, விரகத்தினால் ஏற்படும் சூட்டினால் வாடச் செய்து கொண்டும், மலையா, இதுவா - எது பெரிதோ என்று வாதப் போரை ஏற்படுத்திக் கொண்டும்,

"மைந்தர்கண் மனம் சூறையிட்டு, மேற்புளகித்து, வச்சிர
ரத்னப் புதுச் செப்பினைத் தோழமைக்கொண்டு, "

பார்க்கும் இளைஞர்கள் மனங்கள் (அல்லது மனமும் கண்ணும்) சூறாவளியில் சிக்கித் தவிக்கும்படிச் செய்தும், கிளுகிளுப்பில் அத்தனைப் பேருக்கும் மயிர்க்கூச்சம் உண்டாக்கியும், உறுதியானதும், ரத்தினங்கள் இழைத்ததானதும் ஆன புதிய கலசத்தைப் போன்று வடிவம் கொண்டும்,

"பொன்னினைப் பொடியாய் அராவி மீதிற் பொட்டு இட்டது எ(ன்)னவே தேமல் படர்ந்து"

தங்கத்தைக் தூளாக்கி, மேலெல்லாம் பொட்டாக இட்டிருக்கிறதோ என்று ஐயம் கொள்ளும்படி (காதல் நோயால்) பசந்து (தேமல் கொண்டு)

"செம்பொற் சரிகை வேலை இட்டுப் புனைதரு ரவிக்கையை இறுக்கிக் கிழித்துப் புறப்பட்டு,"

தினத்தந்தியில் 'இந்தப் படத்திற்கு விளக்கம் தேவை இல்லை' என்று அடிக்குறிப்புடன் வெளிவரும் கார்ட்டூன் போல இந்த வாக்கியம். ;-)

"வாசனைப் பூந்தாரிட்டு, "

வாசனை மிகுந்த மலர்களால் ஆன மாலையை அணிந்து (அதுதான் மல்லிகை மலர் மாலையை வாட வைத்தாகிறதே, இந்த லட்சணத்தில் இது வேற வேண்டுமாக்கும்.)

"வரவரப் பளபளப்பாகி உயர்தங்கக்கி(ண்)ணத்தை ஒத்துச் "

ஙப்பாடி. இருக்க இருக்க ஜோதி ஏறுதாம். தங்கக் கிண்ணத்தைப் போல பளபளப்பாக இருக்கிறதாம்.

"சந்தனம் புனுகு கஸ்தூரி கர்ப்பூரம் ச(வ்)வாது குங்குமம் அணிந்து "

அதான். அந்த வாசனைத் திரவியங்களைப் பூசி.

"சந்த்ரகாவிச் சேலை வல்லவாட்டுக்"

சந்திர காவிச் சேலை. சிவப்பான சேலை போலிருக்கிறது. வல்லவாட்டு. வல்லவேட் என்றும் சொல்வார்கள். முந்தானை.(வல்லவேட் ஒரு கெளரவ அணியாக அணியப்படும் துணி. ஆண்கள் அணிவது. அதற்கு அரசனுடைய அனுமதி வேண்டும். 'கோவணத்தஅவுத்து வல்லவேட் போட்டான்' என்று நக்கலடிப்பார்கள்.) சரி. சேப்பு சேலை. முந்தானை இருக்கிறது. வல்லவாட்டுன்னா மொத்தமா மறைக்காது. கொஞ்சமா பூணூல் போட்டாப்பல, அதும் பாட்டுக்கு நானும் இருக்கேன்னு இருக்கும். (ஏம்பா கவிராயா, உன் கண்ணுதான் எக்ஸ்ரே கண்ணா இருக்கே, முந்தானை இருந்தா என்ன, இல்லாட்டி என்னப்பா?)

"குட்ட தும்பி அண்ணாந்து இடையினிற் தாங்காது எனக் கனத்து ஓங்கி, "

கொஞ்சம் குழப்புது. இப்புடிச் சொல்லலாமா? குட்ட - சின்ன, தும்பி - வண்டு. அதாவது மலர் மாலை மேல உட்கார ஒரு சின்ன வண்டு வருது. அண்ணாந்து பாக்குது. 'ஏற்கெனவே பெரிய பெரிய பாரமெல்லாம் இங்ஙன இருக்கு. நாம வேற இது மேல உக்காந்தா, இந்தச் சின்ன இடுப்பு தாங்காது என்றுஅப்புடி வந்து குந்துதாம். அப்புறம் மேல கிளம்புதாம். மறுபடியும் வந்து குந்துதாம். மறுபடியும் மேல கிளம்புதாம். (நான் சொல்றது சரியானா, குட்டத் தும்பின்னு த் இருக்கணும். குட்ட தும்பி? அது என்ன? வண்டுக்குக் கூட குஷ்டம் வருமா?)

"மன்மதனும் சலாமிட்டு நிற்கவும்,"

வண்டு வந்தாச்சு. மன்மதன் வரவேணாமா? கரும்பு வில்லும் சுரும்பு நாணும் ஆச்சே. வண்டு தேன் உறிஞ்சும் குழல்தான் மன்மதன் வில்லுக்கு நாண். மன்மதன் வந்தாரு. அட்ச்சாரு ஒரு சல்யூட்டு.

"தான் சீரிட்டு நின்று, "

சல்யூட் அடிச்சா என்ன பண்ணனும்? நிமிர்ந்து நின்னு ஏத்துக்கணும். ஏற்றுக் கொள்ளப்பட்டது.

"தன் தலை வணங்காமல் "

ஆனா, சலாம் அடிச்சா குனிஞ்சு தலை வணங்கும்னு மட்டும் நினைச்சுறாதீங்க. இறுமாந்து நிற்பது என்று அப்பவே சொல்லிட்டார்.

"திரண்ட பூண்முலைகள் "

மறுபடியும் தினத்தந்தி கார்ட்டூன்.


"உன்றன்
திருமார்பில் அணைய ஓர் ஊசி மேலே தவம் செய்கின்றது
ஒக்குமென்னும்
சிறு ரோமரேகையாள் வந்தாள்;"

அத்தானே. அத்தானே கேட்டேன். அங்க வறீங்க. வடுக நாத துறை மெச்சுகின்ற பிரதானி சிவசுப்ரமணிய ராசனே, இப்படிப்பட்ட மார்புகள் என்ன பண்ணுகின்றன தெரியுமா? அங்க பாரு. தொப்புள் பிரதேசத்திலிருந்து மெல்லிய மயிர்க்கால் கிளம்புதா? ஊசி மாதிரி மெல்லிசா கோடு போட்டாப்புல தெரியுதா? (அம்மிணி லோஹிப் கட்டியிருப்பாங்களோ? சிம்ரன், மும்தாஜ் எல்லாரும் கேட்டுக்குங்க. நீங்க சொல்றாப்புல 'கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் நடுவுல ஒரு சின்ன இழைதான் இருக்கு'. அதுதான் அம்மிணி வயிற்றிலிருந்து கிளம்பி மேலே செல்லும் ரோமாபுரி ரேகை. :-P) இந்த ரெண்டும் என்ன பண்ணுதாம், இந்த ரோமக் கோடு ஊசிமாதிரி இருக்குல்ல, ஊசி மேல நின்னு தவம் செய்யுதாம். எதுக்கு? ஐயா வரமாட்டாரா, வந்து தன் மார்போட சேத்துக் கட்டிக்க மாட்டாரான்னு.

"பராக்' என்று சேவித்து
நிற்கிறாள் பார்! திகழ் வடுகநாததுறை மெச்சு ப்ரதானி சிவசுப்ரமண்ணிய ராசனே!

பராக் என்று சொல்லி நிற்கிறாங்களாம். (பான்பராக் போட்டிருப்பாங்களோ?) எப்புடி? குனிஞ்சு, கும்பிட்டு. (அதுக்கு மேலஎன்னான்னு நாஞ் ஜொல்லணுமாக்கு?)

ஙப்பா பாரதி. நீ என்னா காரியம் செஞ்சுருக்கன்னு இப்பல்ல விளங்குது. இந்த மாதிரிப் பாட்டயெல்லாம் ஒரேடியா ஒழிச்சுக் கட்டிட்டியேப்பா. எட்டயாபுரம் சமீன்ல நீ சின்னப்புள்ளயா இருந்தப்ப இந்த மாதிரி எல்லாம் எழுதினியே, ஒரேடியா எல்லாத்தயும் தலகுப்புறக் கவுத்துப்போட்டுட்டுப் போயிட்டியே! நீ நல்லாயிருப்பியா?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

அண்ணே! சபை இனி உங்களுது. உவமை நேர்த்தியச் சொல்லிப் போடுங்க.

----- Original Message -----
From: jaybee555
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, July 25, 2002 2:53 PM
Subject: [agathiyar] Re: Uvamai #14 plus plus plus plus


அன்பர்களே,

கீழே கண்ட படிவமே மூல ஏட்டில் கண்டபடி எழுதப்பட்டது.
அதனை அடுத்துள்ள சந்தி பிரிக்கப்பட்ட படிவம்.
முதலில் உவமை சொல்லும் நேர்த்தியையும் அதன் அடுக்கான
சீரான ஓட்டத்தையும் நயத்தையும் ரசிப்போம்.
அதன் பின்னர் கூட்டாகச்சேர்ந்து அதன் பொருளுணரப்
பார்ப்போம்



[Non-text portions of this message have been removed]