From naga ganesan@... Sun Aug 18 08:25:45 2002
Return-Path:
Received: (qmail 29835 invoked from network); 18 Aug 2002 15:25:42 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 18 Aug 2002 15:25:42 -0000
Received: from unknown (HELO n15.grp.scd.yahoo.com) (66.218.66.70) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 18 Aug 2002 15:25:42 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.129] by n15.grp.scd.yahoo.com with NNFMP; 18 Aug 2002 15:25:42 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 18 Aug 2002 15:25:40 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 18 Aug 2002 14:52:11 -0000
Received: (qmail 79161 invoked from network); 18 Aug 2002 14:52:11 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 18 Aug 2002 14:52:10 -0000
Received: from unknown (HELO n6.grp.scd.yahoo.com) (66.218.66.90) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 18 Aug 2002 14:52:10 -0000
Received: from [66.218.67.132] by n6.grp.scd.yahoo.com with NNFMP; 18 Aug 2002 14:52:10 -0000
Date: Sun, 18 Aug 2002 14:52:09 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: A Biographical Sketch on Maayuuram Munsiff VEdhanaayagam PiLLai -#1
Message-ID:
In-Reply-To: <5.1.0.14.0.20020804002004.029ab970@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3876
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naa ganesan"
X-Originating-IP: 216.88.65.217
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naa ganesan
X-Yahoo-Message-Num: 19617

--- In agathiyar@y..., "Mani M. Manivannan" wrote:
> என்னிடம் இருக்கும் "தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்" என்ற நூலில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும்
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பற்றிய சுவையான செய்தி ஒன்று உள்ளது.
>
> "சீர்காழியில் நீதிபதியாக வீற்றிருந்த வேதநாயகர் மகா வித்துவான் அவர்களைச் சீர்காழிப் பதியின் மீது ஒரு
கோவை நூலை இயற்றும் படி கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றி மகா வித்துவான் அவர்கள்
தண் தமிழ்ச் சீகாழிக் கோவை நூல் ஒன்றை எழுதி சீர்காழிச் சிவன் கோவிலில் அரங்கேற்றி
னார். அரங்கேற்றத்துக்குத் தலைமை ஏற்ற வேதநாயகர் நீதிபதிக்கே உரிய தோரணையில், திருக்கோயிலில்
எழுந்தருளியுள்ள ஈசனைச் சாட்சிக் கூண்டில் ஏற்றி, 'சத்தியமாகச் சொல்கிறேன்... நான் கூறுவது உண்மையைத்
தவிர வேறில்லை' எனக் கூற வைப்பது போல ஒரு பாடலைச் சொல்லி, கோவையைப் பற்றிக் கருத்துக் கேட்டார்.
>
> விதி எதிரில் அரிமுதலோர் புகல் புகலி ஈசரே! விண்ணோர் மண்ணோர்
> துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சிச் சுந்தரப் பேர்
> மதிமுதியன் கோவையைப்போல் பெற்றீர்கொல் இக்காழி வைப்பின் நீதி
> அதிபதி நாம் என அறிவீர்! நம்முன்னம் சத்தியமா அறைகுவீரே!
>
> அரங்கேற்றம் நிறைவு பெற்ற அக்கணமே, அறம் கூறும் திருவாயினின்றும் வெளிப்பட்ட பாடல் இது.
>
> சீகாழிப் பதியின் ஈசனே! உம்மை மண்ணில் வாழும் மனிதர்களும் விண்ணில் இருக்கும் தேவர்களும் பல
பாமாலைகள் சூட்டிப் புகழ்ந்திருப்பர். எங்கள் மீனாட்சி சுந்தரனின் இப்பாமாலை பற்றிய உமது கருத்தைச் சத்தி
ய வாக்காக உரைப்பீர்! இதனை நீதிபதி என்ற முறையில் உம்மை நான் கேட்கின்றேன்" என்ற பொருளி
ல் அமைந்திருந்த இந்தப் பாடலைக் கூடி இருந்தோர் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்."
>
> குன்றக்குடி பெரிய பெருமாள் அவர்கள் எழுதி காமதேனு பப்ளிகேஷன்ஸ் வெளியுட்டுள்ள இந்த நூலில் தமிழ்
வளர்த்த நல்லறிஞர்களில் நூறு அறிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் காணப் படுகின்றன. இதில்
வேதநாயகனார் முதல் இந்திய நீதிபதி நும் முதன்மை புகழ் பெற்றார் என்ற குறிப்பும் உள்ளது.
>

குன்றக்குடி பெரியபெருமாள் அமைதியாகத் தமிழை வளர்த்துவரும் பெரியாருள் ஒருவர்.
நல்ல எழுத்தாளர். தமிழ்ச் சமூகம் அவரைக் கண்டுகொள்ளுமா?

வேதநாயகம் பிள்ளை பாடலில், விதி என்பது பிரமனைச் சுட்டிநிற்கிறது.

இறைவனைக் கேட்பது என்பது பலநாளாக உண்டுபோலும். பாண்டியனைக் கண்ணகி கேட்டாள்.

வேளாளர் பெருமை என்று ஒரு 1000 பழைய தமிழ்ப் புத்தகத்திலாவது பழையனூர் நீலி கதை வருகிறது.
நெல்லைச்சீமையில் கொடை விழாக்களில் கொண்டாடப்படும். மறைந்த காஞ்சிப் பெரியவர்
அடிக்கடி வெள்ளாளர் முன் சொல்லுவார்கள்.

பழையனூர் என்பது மணிமன்றம் (ரத்தினசபை) உள்ள திரு-ஆலங்காட்டின் ஊர்.
ஆலங்காடு காடு. ஊர் பழையனூர்தான். அங்கே சொன்ன சொல் தவறாமைக்காக
70 ஊரார் தீக்குளித்த இடம் மிகப்பழைய சிற்பங்கள் உண்டு.

கதை: காஞ்சிபுரம் வணிகம் செய்யச் செட்டி செல்கிறான். அவனைப் பேயொருத்தி (பழைய பிறவியில்
ஏமாற்றமுண்ட மனைவி??)
மனைவி வடிவில், கள்ளிக் கொம்பை உடைத்துக் குழந்தை ஆக்கி, சேர்ந்து இருக்கச் சொல்கிறது.
"இது பெண்ணல்ல, பேய்" என்று இவனுக்குத் தெரிகிறது. மந்திர வாளை ஊரார் வாங்கிவைத்து,
எழுபது ஊராரும் கோயில் சத்திரத்தில் தம்பதியரை இரவு படுக்கவைக்கின்றனர்.
பேய் உயிரை வாங்கிவிட, மறுநாள் சத்தியம் காக்கத் தீயில் இரையாகின்றனர் பழையனூரார்.

இது மிகப் பழையகதை. பழைய சிற்பங்களும், ஏராளமான பேர்களும் இதைப் பாடியுள்ளனர்.
ஞானசம்பந்தர் பழையனூர்- ஆலங்காட்டருகே போகையில், தேவர்பிரானைப் பாட மறக்க
இறைவன் இரவில் வந்து ஞாபகப்படுத்திக் கேட்டுப் பெற்றாராம் தேவாரம்.

அதனைச் சொல்லி, இறைவனை நீதி கேட்டால், அஞ்சுகிறான் என்று நீலி கதையையும் சொல்வார்.
இது துன்பியற்கதை: நீலி, வணிகன், ஊரார் அனைவரும் இறக்கின்றனர்.
இறைவன் அஞ்சாமல் என்ன செய்வான்?

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்பாரும்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் *முனை நட்பாய்
வஞ்சப் படுத்து ஒருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே*

. . . . . . . . . சம்பந்தர் தேவாரம்.

அன்புடன்,
நா. கணேசன்