From jaybee@... Sun Sep 01 08:38:34 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 1 Sep 2002 15:38:33 -0000
Received: (qmail 94931 invoked from network); 1 Sep 2002 15:38:33 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 1 Sep 2002 15:38:33 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Sep 2002 15:38:29 -0000
Received: from tmnet (sp-103-35.tm.net.my [210.186.103.35]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H1R00AKXJ0TFF@...> for agathiyar@yahoogroups.com; Sun, 01 Sep 2002 22:02:56 +0800 (SGT)
Date: Sun, 01 Sep 2002 22:00:27 +0800
Subject: Re: [agathiyar] Part #3 - Dhasaavadhaanam Raamaiyaa
In-reply-to: <003b01c25153$8b3c1060$c4f0c7cb@g9d6h9>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020901220027.0077a66c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020831152224.01c06ad8@...> <3.0.3.32.20020831131158.01b0480c@...> <3.0.6.32.20020823084502.009a0c10@...> <3.0.3.32.20020831162905.01c068ec@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19900


அன்புள்ள ஹரி,

அரிய நோக்கத்தைக்கொண்டு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்.
இவ்வாறு ஒவ்வோர் ஊரிலும் இலக்கிய மன்றங்கள் இயங்கி சிறு சிறு
அளவிலேனும் யாராவது வசதியற்ற அறிஞர்களுக்கு ஏற்றவகையில்
உதவினால் எவ்வளவோ நன்மைகள் நிகழும்.
வாழ்த்துக்கள்.
விவேகாநந்தர் சொல்வாராம், "என்னிடம் இரண்டாயிரம் இளைஞர்களும்
முப்பதுகோடி ரூபாயும் இருந்தால்மட்டும் போதும். இந்திய நாட்டின்
கஷ்டங்களையெல்லாம் போக்கிவிடுவேன்".
இப்போது இருக்கும் சூழ்நிலையில் அந்த இரண்டாயிரம் இளைஞர்களும்
சிறு சிறு குழாம்களாக ஆங்காங்கு செயல்பட்டுக்கொண்டிருந்தால் போதும்.
முப்பது கோடி ரூபாய் என்பது இக்காலத்தில் அற்பமான தொகை. உலகத்
தமிழ் மகாநாடு எட்டுக்கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது என்பார்கள்.
கௌசல்யா வீட்டில் ஆறுகோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது என்பார்கள்.
சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அடிக்கடி போட்டிபோட்டுக்கொண்டு
நடத்தப்படும் வரலாறு காணாத ஊர்வலங்களில் செலவழிக்கும் பணம் -
ஊர்வலங்கள் இல்லை - ஒரே ஊர்வலத்தில் மட்டிலும் செலவழிக்கும்
தொகையே கோடிக்கணக்கில் வந்துவிடும்.

அன்புடன்

ஜெயபாரதி


At 06:33 AM 9/1/02 +0530, you wrote:
>----------------------------------
>ராமையா சென்னையில் 1944-இல் ஜெயின் கல்லூரியில் தசாவதானம் செய்தார்.
>----------------------------------
>1944 இல்லை தலைவரே. 1974. 1973ல் நான் ஜெயின் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். 73
ஆகஸ்ட் என்று நினைவு. நாங்கள் நங்கநல்லூரில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நடத்திக் கொண்டிருந்தோம்.
அப்போதுதான் கவிஞர் குணசேகரன் இல்லத்தில் இராமையா அவர்களைச் சந்தித்தோம். (குணசேகரன் அவர்கள்
நங்கநல்லூர்க்காரர். சன் டிவி சமீபத்தில் 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியில் இவருடைய திருக்குறள்
பணியைப் பற்றி இவரை நேர்கண்டது. எங்களோடு சமவயதாகப் பழகிய, பழகிக்கொண்டிருக்கிற பெரியவர்.)
உடனே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.
>
>எங்கள் கல்லூரி ஆசிரியர்களையும் அழைத்தோம். என்னுடைய ஆசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி)
அவர்களும் வந்திருந்தார். இராமையா அவர்கள் அன்று எங்களுக்காக முதல் முறையாக தசாவதானம் செய்தார்.
மின்சாரம் வேறு தடைப்பட்டிருந்தது. 16 எண்களைப் படிக்க, 16 எழுத்துள்ள வாசகத்தைப் படிக்க, திருக்குறள்
புத்தகத்தைப் பார்த்துக் கேள்விகள் கேட்க நாங்கள்தான் பெரிய அளவில் சிரமப்பட்டோம். எத்தனை
ஈற்றடிகள். எத்தனைப் பாடல்கள். அவருக்கு எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டாகஇருந்தது. பெரிய அளவில்
பணம் திரட்டிக் கொடுக்க முயற்சித்தோம். வேலைவெட்டி இல்லாத, அப்போதுதான்படித்து முடித்திருந்த
எங்களால் என்ன செய்துவிட முடியும்? நூற்றுசொச்சம் தேறியது. ('அது இன்னாடா தசாவதாரம்' என்று
எங்களைக் கேட்டவர்களுக்கெல்லாம் நிகழ்ச்சியை விளக்கி விளக்கி, நிறைய பேரைத் தூண்டில் போட்டு
இழுத்திருந்தோம். இருந்தாலும் அவ்வளவுதான் முடிந்தது.)
>
>இராமையா அவர்களின் நிகழ்ச்சியைப்பார்த்தவுடன் எங்கள் ஆசிரியர் நாகநந்தி அவர்கள் ஜெயின்
கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ் மாணவர்கள்
மட்டும்தான் இருந்தனர். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாகப் பெரிதானது. தமிழே ஓரளவுக்குத்தான் தெரிந்த
ஜெயின் (செளகார்பேட்டை வாசிகள்) மாணவர்கள் ஏராளமாகக் கூடிவிட்டனர். திறந்த வாய் மூடாமல்
பார்த்தார்கள். அன்றைக்கு அவர்கள் அளித்த நிதி ஆயிரத்தைத் தாண்டியது. (பெரிய அதிகாரிகளின் மாத
சம்பளமே அப்போது அதில் பாதியிருக்காது.) 'நம்ம தம்பிங்க செஞ்சது' என்று நெகிழ்ந்தார் இராமையா
அவர்கள்.
>
>நல்லூர் இலக்கிய வட்டம் ஏதோ ஓரளவுக்கேனும் செய்ய முடிந்தது என்பதில் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. அதற்கு
மேல் என்ன இருக்கிறது? பெரியவர்களின் ஆசியைத் தவிர வேறென்ன வேண்டும்? வேறென்ன எதிர்பார்த்தோம்!
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.
> ----- Original Message -----
> From: JayBee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Saturday, August 31, 2002 1:59 PM
> Subject: [agathiyar] Part #3 - Dhasaavadhaanam Raamaiyaa
>
>
>
> ராமையா சென்னையில் 1944-இல் ஜெயின் கல்லூரியில்
> தசாவதானம் செய்தார். நிகழ்ச்சி நிர்ணயக்காலத்துக்கும் மேலும் நீடித்து,
> பத்துவிதமான செயல்களைக் கணிப்பதாக ஆரம்பித்து, உண்மையில்
> பதினாறாக (சோடச அவதானம்) அமைந்துவிட்டது.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> ==============================
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>