From jayandgl@... Sat Sep 07 07:18:00 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 7 Sep 2002 14:17:43 -0000
Received: (qmail 9623 invoked from network); 7 Sep 2002 14:17:43 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 7 Sep 2002 14:17:43 -0000
Received: from unknown (HELO SMRP01.maa.sify.net) (202.144.76.10) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 7 Sep 2002 14:17:41 -0000
Received: (qmail 9359 invoked from 202.144.76.10 by SMRP01); 7 Sep 2002 19:45:53 +0530
Received: from 202.144.76.10 (HELO SMRP01.maa.sify.net) (202.144.76.10) by inbound3.maa.sify.net with SMTP; 7 Sep 2002 19:45:53 +0530
Received: (qmail 15589 invoked from 202.9.169.103 by SMRP01); 6 Sep 2002 22:21:55 +0530
Received: from 202.9.169.103 (HELO a.sify.com) (202.9.169.103) by inbound3.maa.sify.net with SMTP; 6 Sep 2002 22:21:55 +0530
Message-Id: <4.3.0.20020906215956.00aba270@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 06 Sep 2002 22:07:32 +0530
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Guru Namachivaayar #4
In-Reply-To: <3.0.6.32.20020907002332.0084ed60@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: njaanavettiyaan
X-Yahoo-Message-Num: 19982

அன்பு நண்பர் திரு.கிருட்டிணன் அவர்கட்கு,
வணக்கம்.
அன்னை கொடுத்த பாலுக்கே திருஞான சம்பந்தர் அத்தனை தேன்சொட்டும் பாடல்கள் பாடியிருக்க, அன்னை அமுது
கொடுத்ததால் இன்னும் எத்தனை வெண்பாக்கள் பாடியிருப்பரோ?
'' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே"
கோபுரத்தில் நுழைந்த சித்தருக்கு என்னஎன்ன பாக்கியம் கிட்டிட்றோ? இவ்வரலாறைத் தாங்கள் விளக்கும்
பாங்கு மிக அருமை.
இவ்வெண்பாக்கள் முழுமையும் அச்சேறியிருக்கிறதா?
ஆவலுடன்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
At 12:23 AM 9/7/02 +0800, you wrote:
>குரு நமச்சிவாய சுவாமிகள் #4
>``````````````````````````````````````
>
> என்று ஒரு வெண்பாவைவினால் சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து
> கொடுத்தார். அதனை உட்கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும்
> பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் சிவயோகத்திலிருக்கும் போது
> பசி அணுகிற்று. அப்போது,
> '' நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி
> என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
> நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
> மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''
> -என்ற வெண்பாவைப் பாடினார்.
> அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து,
> குரு நமச்சிவாயாரைப் பார்த்து,
> ''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி
> கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா?
> தண்ணீர் எடுக்க கூடுமோ?
> உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
> உடனே, குரு நமச்சிவாய தேவர்
>' 'அன்னையே! ஆண்ட கோடி ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!
> பாலகாசியில் பாலாம்ப்கை; இது விருத்தகாசி; நீர் பெரிய நாயகி;
> இங்குள்ள இங்குள்ள இறைவனும் பழமலை நாதர்;
> அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்'' என்றார்.
> அடியவர் கூறியன கேட்ட அம்பிகை
> '' என அருமை மகனே! நமச்சிவாயம்! உன்னுடைய இனிய
> வெண்பாவிலே என்னை இளமையாக வைத்துப் பாடுக!'' என்றார்.
> குரு நமச்சிவாய தேவர்,
> ''கருணை கடலே! இரண்டு அம்மையார் ஆககூடுமே'' என்று சொல்ல அம்மையார்
> ''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக! என்றார்.
> உடனே குரு நமச்சிவாயர் பின்வரும் வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.
>
> ''முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
> பத்தர் பணியும் பதத்தாளே!
> அத்தர் இடம்தாளே மூவா முலைமேல் எழிலார
> வடத்தாளே சோறுகொண்டுவா...''
> இவ்வெண்பாவைச் சொல்லியவுடன் அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு
> வந்து கொடுத்தார். அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு வந்து ஆனந்தத் திருநடனம்
> புரியும் ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில்
> கோபுரம் கண்டு வணங்கி,
> '' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
> தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்
> ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
> பார்க்கின்றார்க் கென்ன பலன்...''
> என்ற இவ்வெணெபாவைக் கூறிகொண்டே சிதம்பரம் சென்று திருக்கோயிலுட்புகுந்து,
> சிவகங்கையில் நீராடி,
> ''கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்
> கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை
> வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவாமித்
> தாயார் திருமஞ் சனம்....''
> என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே கனக சபைக்கு முன்சென்று பெருமானை
> வணங்கும் போது, கூத்தப் பெருமான்,அண்ணாமலையில் குகைக்கண் அமர்ந்திருக்கும்
> குகை நமச்சிவாயரைப் போலவே காட்சி கொடுத்தார். அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,
> ''திருவண்ணா மலையிற் குகை நம சிவாய
> தேசிக வடிவமா யிருந்து
> கரவனா மடியேன் சென்னிமே லுனது
> கழலினை வைத்தவா நுறுரேன்
> விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை
> வேண்டிய வேண்டிய தனைத்தும்
> பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
> பலவனே பரமா சிரியனே...''
> என்ற பாடலை முதலாக கொண்டு தொடங்கி, ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற
> இடத்திலேயே, உலகத்தை மறந்து நின்று, ''என்று வந்தாய் எனும் எம்பெருமான்'
> என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில்
> அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார்
>
>அன்பொடு,
>கிருஷ்ணன்
>சிங்கை
>S. Krishnan
>For Your Bookmark.
>```````````````````````````
>www.singaiinayam.com.sg
>http://www.geocities.com/singaikrish/
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/