From naga ganesan@... Sun Sep 08 16:23:22 2002
Return-Path: Received: (qmail 32570 invoked from network); 8 Sep 2002 23:23:13 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 8 Sep 2002 23:23:13 -0000
Received: from unknown (HELO n6.grp.scd.yahoo.com) (66.218.66.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 8 Sep 2002 23:23:13 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.160] by n6.grp.scd.yahoo.com with NNFMP; 08 Sep 2002 23:23:12 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 0 1); 8 Sep 2002 17:30:11 -0000
Received: (qmail 83871 invoked from network); 8 Sep 2002 17:30:11 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 8 Sep 2002 17:30:11 -0000
Received: from unknown (HELO n26.grp.scd.yahoo.com) (66.218.66.82) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 8 Sep 2002 17:30:11 -0000
Received: from [66.218.67.135] by n26.grp.scd.yahoo.com with NNFMP; 08 Sep 2002 17:30:06 -0000
Date: Sun, 08 Sep 2002 17:30:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Maduraip paaTTu (Vairamuttu)
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4472
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naa ganesan" X-Originating-IP: 209.144.230.49
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naa ganesan
X-eGroups-Approved-By: jaybee555 via web; 08 Sep 2002 23:23:02 -0000
X-Yahoo-Message-Num: 20007
எனக்குத் தமிழ்நாட்டின் ஊர்களைப் பற்றி உருவாகியுள்ள
நல்ல கவிதைகளைத் தாருங்கள். பரிபாடலில் தாமரைப்பூப்
போன்ற மதுரை என்பதும், தண்டியலங்கார மேற்கோள் வெண்பாவில்
காஞ்சியை மயிலாகக் கொள்வதும் அரிய நயங்கள்.
கவிஞர் கண்ணதாசன் கோயம்புத்தூரைப் பாடிய கவிதை மனத்தை
ஈர்த்தது. அது பி.டி.எ'வ் (pdf) இணைப்பாக உள்ள இடம்:
http://groups.yahoo.com/group/S_India/message/55
அது தேவையில்லாவொன்று. உகர உகார உயிர்மெய்களுக்குத்
தனிஎழுதுரு அமைத்துக் கோவைப் பாட்டு எழுதியுள்ளேன்
(pdf கோப்பை இறக்குமதி செய்ய):
http://groups.yahoo.com/group/S_India/message/58
தமிழில் உலகாயதக் கொள்கை தந்த கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டாரும்
மதுரையையே களமாக அமைக்கிறார். அந்நாளில் மதுரையைச்
சோழச் சக்ரவர்த்திகள் ஆண்டனர். காராணை விழுப்பரையன் மடல்
- [வையைக் கரையில் வஞ்சியின் காட்சி] என்ற பகுதியில் காண்க,
((மதுரை முனையல் (=Project Madurai) நூல்எண் 60)).
மதுரையைப் பாடிய பாடல்களில் வெகு அழகானவற்றுள்
கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்றாகும். சந்தம் துவளும்
பாட்டைச் சுவைப்பீர்!
. . . . . . . . மதுரை
. . . . . . . கவிஞர் வைரமுத்து
பாண்டியர் குதிரைக் குளம்படியும் - தூள்
. பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
. தோகை யர்தம் மெல்லடியும்
. . மயங்கி ஒலித்த மாமதுரை - இது
. . மாலையில் மல்லிகைப் பூமதுரை . . . . (1)
நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்
. நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்
. அழுந்தப் பதிந்த சுவடுகளும்
. . காணக் கிடைக்கும் பழமதுரை - தன்
. . கட்டுக் கோப்பால் இளமதுரை . . . . (2)
மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய்
. மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி - இவை
. கொள்ளை அடித்த வையைநதி
. . நாளும் ஓடிய நதிமதுரை - நீர்
. . நாட்டிய மாடிய பதிமதுரை . . . . (3)
தென்னவன் நீதி பிழைத்ததனால் - அது
. தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள்
. கந்தக முலையில் எரிந்ததனால்
. . நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று
. . ஜாதிக் கஞ்சு தென்மதுரை . . . . (4)
தமிழைக் குடித்த கடலோடு - நான்
. தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி - நீர்
. ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
. . மானம் எழுதிய மாமதுரை - இது
. . மரபுகள் மாறா வேல்மதுரை . . . . (5)
மதுரை தாமரைப் பூவென்றும் - அதன்
. மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை
. எம்குடி மக்கள் திரளென்றும் - பரி
. . பாடல் பாடிய பால்மதுரை - வட
. . மதுரா புரியினும் மேல்மதுரை . . . . (6)
மீசை வளர்த்த பாண்டியரும் - பின்
. களப்பிரர் பல்லவர் சோழர்களு - மண்
ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த
. அந்நிய ரில்சில கண்ணியரும்
. . ஆட்சி புரிந்த தென்மதுரை - மீ
. . னாட்சியினால் இது பெண்மதுரை . . . . (7)
மண்ணைத் திருட வந்தவரைத் - தம்
. வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட வந்தவரை - ஊர்
. பொசுக்கிப் போக வந்தவரைத் - தன்
. . சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
. . தாயாய் வணங்கிய தூய்மதுரை . . . . (8)
அரபு நாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு
. அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் - ஒரு
. மண்டபம் திருமலை கட்டியதால்
. . கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
. . கவிதைத் தமிழின் தலைமதுரை . . . . (9)
வையைக் கரையின் சோலைகளும் - அங்கு
. வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம்
. மேனி கறுத்த மறவர்களும்
. . மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ்
. . மெச்சி முடிக்கும் தென்மதுரை . . . . (10)
போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும்
. பூசை மணிகளின் ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை
. நிறுத்திப் போகும் வளையொலியும்
. . தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண்
. . தூங்கா திருக்கும் தொழில்மதுரை . . . . (11)
ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும்
. அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம்
. வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
. . பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று
. . பட்டப் பகலில் பாழ்மதுரை . . . . (12)
நெஞ்சு வறண்டு போனதனால் - வையை
. நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் - நதியைப்
. பட்டாப் போட்டுக் கொண்டதனால்
. . முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
. . மூச்சில் வாழும் பதிமதுரை.