From jaybee@... Wed Oct 02 05:31:03 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 1 1 4); 2 Oct 2002 12:31:03 -0000
Received: (qmail 88775 invoked from network); 2 Oct 2002 12:31:02 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 2 Oct 2002 12:31:02 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 2 Oct 2002 12:31:01 -0000
Received: from tmnet (sp-103-17.tm.net.my [210.186.103.17]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H3C0072GTDGR6@...> for agathiyar@yahoogroups.com; Wed, 02 Oct 2002 20:29:42 +0800 (SGT)
Date: Wed, 02 Oct 2002 20:29:31 +0800
Subject: Re: [agathiyar] திருத்தாண்டகம் 7
In-reply-to: <3D9A38D0.98B18549@...>
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20021002202931.0077d820@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 20417
At 08:07 AM 10/2/02 +0800, you wrote:
>திருச்சிற்றம்பலம்
>
>நாளும் ஒரு தேவாரம்
>
>திருவதிகை வீரட்டானம்
>போற்றித்திருத்தாண்டகம்
>
> மண்டுளங்க வாடன் மகிழ்ந்தாய் போற்றி
> மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
> விண்டுளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி
> வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
> பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
> பார்முழுது மாய பரமா போற்றி
> கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
> கார்க்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.
பதம் பிரித்துப்பார்த்தால் இந்தப் பாடல் நன்கு விளங்கும்:
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால் கடலு மால்விசும்பும் ஆனாய் போற்றி
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழத்து உரி மூடும் விகிர்தா பொற்றி
பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார் முழுதும் ஆய பரமா போற்றி
கண் துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலம் கொண்ட கபாலி போற்றி
அன்புடன்
ஜெயபாரதி
>
> (பொ-ரை) நிலம் அதிருமாறு மகிழ்ந்து ஆடுபவனே! வணக்கம்.
>பெரிய கடலும் இருவிசும்பும் ஆனவனே! வணக்கம். விண் அதிர
>மூன்று மதில்களையும் அழித்தவனே! வணக்கம்.யானைத் தோலைப்
>போர்த்திருப்பதன் வாயிலாக உலகியலினின்றும் வேறுபட்டவனே!
>வணக்கம். பண்ணமைதி கெடாதவாறு பாடுகின்றவனே! வணக்கம்.
>உலகமே உருவாக விளங்குபவனே! வணக்கம். திருக்கண்ணின்
>ஒளி விளக்கத்தால் மன்மதனை அழித்தவனே! வணக்கம். நீர்
>நிறைந்திருக்கும் கெடில நதிக் கரையின்கண் அமர்ந்து
>கபாலத்தைக் கையில் கொண்டவனே! வணக்கம் என்பதாம்.
>
> (கு-ரை) கார் - நீரின் மேற்று. 7
>
>திருச்சிற்றம்பலம்
>
>ஓதுவார்
>பினாங்கு.
>
==============