From jaybee@... Tue Oct 15 01:44:43 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 15 Oct 2002 08:44:43 -0000
Received: (qmail 45964 invoked from network); 15 Oct 2002 08:44:42 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 15 Oct 2002 08:44:42 -0000
Received: from unknown (HELO ipop9) (202.188.0.174) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Oct 2002 08:44:42 -0000
Received: from tmnet (localhost [127.0.0.1]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H4000MFELPW3T@...> for agathiyar@yahoogroups.com; Tue, 15 Oct 2002 16:46:47 +0800 (SGT)
Date: Tue, 15 Oct 2002 16:44:29 +0800
Subject: Re: [agathiyar] Re: Vandalism #9
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20021015164429.00772750@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
References: <3.0.3.32.20021001210139.0077f1e0@...>
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 20646

----------------------------------------- (on ipop9)

email-body was scanned and no virus found
---------------------------------------------------------

----------

At 05:54 AM 10/12/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., JayBee wrote:
>We have spoken about
an ancient temple called Sivapuri, The temple
>was
electrified.Theelectricianwanted to fit a lamp socket
>right in the centre
of the design.
>
>கடைகள்,குப்பை இவற்றை அகற்றிவிடலாம்..பல கோயில்கள் இருளில்
பாம்புகள்,வௌவால்கள்
>சரணாலயமாக இருக்கும் நிலையில் மின்சாரவிளக்குகள் தேவையாகவும்
இருக்கின்றனவே!
>இதற்கு வேறு என்ன வழி ?எங்கே எப்படி செய்வது..Europeல் இது போன்ற இடங்களுக்கு
மின்சாரமயமாக்கும்
>போது என்ன செய்தார்கள்.?


அரிய சிற்பங்களைச் சிதைக்காமலேயே சுவர்,சீலிங் போன்ற
இடங்களில் கவனமாக மின்கம்பிகளைப் பதிக்கலாம். விளக்குப்
பிடிப்பானையும்(Lamp Holder) அதேபோல் எதையும் மறைக்காமல்
கெடுக்காமல் பொருத்தலாம்.
மின்விளக்குகள் மிகவும் அவசியம். ஆனால் அவற்றைப்
பொருத்துவதில் அதிகக் கவனம் இருக்கத்தான் வேண்டும்.

இதே சிவபுரியில் உட்பிரகாரத்தில்ஓர் அரிய கல்வெட்டு
இருந்தது. 'அழகப்பெருமாள் துவராபதி வேளான்' என்னும் சிற்றரசர்
ஒருவர் சம்பந்தமான கல்வெட்டு. அதில் சில முக்கிய விஷயங்கள்
இருந்தன. அழகப்பெருமாள், அடுத்தடுத்து ஆண்ட இரு பாண்டிய
மன்னர்களை 'மச்சுன்னார்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சடையவர்மன் குலசேகர பாண்டியர், மாறவர்மன் சுந்தர பாண்டியார்
ஆகிய இருவரும் அவர்கள். இருவருக்கும் மைத்துனராக அவர்
இருக்கிறார் என்னும்பொழுது சடையவர்மன் குலசேகர பாண்டியரும்,
மாறவர்மன் சுந்தர பாண்டியாரும் அண்ணன் தம்பிகள் என்று அறிந்து
கொள்ளமுடிகிறது. மேலும் அந்த சிற்றரசரின் மரபு, அவருடைய
கோநகரம் ஆகியவற்றைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும்
வேறெந்தக் கல்வெட்டிலும் அகப்படாத விபரங்கள் எல்லாம்
கிடைக்கின்றன - அதாவது கிடைத்தன.
ஆனால் அந்தச் சுவற்றில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டும்
என்பதற்காக ஒரு கல்லைப்பெயர்த்து எடுத்துவிட்டார்கள்.
அந்தக் கல்லின்மீதுதான் முக்கிய சொற்கள், வரிகள் இருந்தன.
வெளிப்பிரகாரத்திலும் இருந்த இன்னொரு கல்வெட்டும்
பாழாகியது.
நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தக்கல்லை
ஓர் ஓரத்தில் அந்தக்கோயிலின் கல்யாண குருக்கள் பத்திரமாக
வைத்திருந்தார். இப்போது எப்படியோ?
பல படிக்கட்டுகளின் அலங்காரக் கைப்பிடிச்சுவர்களில்
மிக அழகிய சுழற்சியுடன் கூடிய அடிப்பாகமெல்லாமே உடைக்கப்
பட்டிருக்கின்றன.
ஏன்?
தரையில் காங்க்ரீட் போடுவதற்காக இடித்திருக்கிறார்கள்.
இந்தத் தரை காங்க்ரீட் இன்னொரு கேட்டையும் செய்துவிட்டது.
கிழவன் சேதுபதியின் கல்வெட்டு ஒன்றே ஒன்றுதான்
இருக்கிறது. அந்த ஒன்றும் இங்குதான் வெளிப்பிரகாரச் சுவற்றில்
இருந்தது. அது, தரைக்குச் சற்று மேலாக எழுதப்பட்டிருந்தது.
ஏனெனில் அதற்கும் மேல் உள்ள இடங்களில் ஏற்கனவே பழைய
மன்னர்கள் எழுதிவைத்துவிட்டனர். விக்கிர சோழரின் பன்னிரண்டாம்
ஆண்டிலிருந்து - (1132 AD) - தொடங்கி ஏகப்பட்ட மன்னர்கள்
கல்வெட்டுக்களை ஒன்றின்பின் ஒன்றாக பதித்துவைத்திருக்கிறார்கள்.
ஆகவேதான் ஆனானப்பட்ட கிழவன் சேதுபதிக்கு அந்த இடமே
கிடைத்தது. அவரும் ஒன்றும் காம்ப்லேய்ன் செய்ததாகத் தெரியவில்லை.
'இந்த இடமாவது கிடைத்ததே' என்று நினைத்திருப்பார். அதிக
பட்சம் ராமநாதபுரத்து ஸ்டைலில் கொஞ்சம் கெட்டவார்த்தைகளைப்
பாவித்து சோழபாண்டியர்களை வர்ணித்திருப்பார். என்ன செய்ய?
மண்வாசனை. யாரை விட்டது? அந்தக் காலகட்டத்தின் ஐரோப்பிய
பாணியில் ஐரோப்பியர்களால் பயில்விக்கப்பட்ட modern army
அவருடையது. கதைகளிலும் சினிமாக்களிலும் வருவது போல
வீரவேல் வெற்றிவேல் கோஷத்துடன் வேல்கம்பு அரிவாள் தூக்கிக்
கொண்டு ஓடுபவர்கள் இல்லை. அவருடைய படையில் மஸ்க்கெட்
துப்பாக்கி, பீரங்கி போன்றவையெல்லாம் இருந்தன.
கிழவன் சேதுபதியின் அந்தக் கல்வெட்டு இப்போது
காங்கிரீட்டில் மறைந்துபோய்விட்டது.
இவை போல இன்னும் அனேகம். கிட்டத்தட்ட எல்லாக்
கோயில்களிலுமே இந்தமாதிரியான காரியங்கள் நடந்துதான் வருகின்றன.


அன்புடன்

ஜெயபாரதி

>
>தொடரைப் படிக்கும்போது சம்பந்தமில்லாமல் சில
கேள்விகள்தோன்றின.கேட்டுவிடுகிறேன்..
>
>சோழர்காலம் பற்றிய ஒரு பெருமைமிக்க தோற்றம்தான்
வரலாற்றுப் பாடங்களில் கிடைக்கிறது.
>வெளிநாட்டவர்களின் வரலாற்றில் உள்ள objectivity
இல்லையோ என்று தோன்றுகிறது.சமீபத்தில் ஜான்
>கே அவர்களின் புத்தகத்தை புரட்டியபோது சோழர்கள்
இலங்கையில் உள்ள பல பௌத்தஆலயங்களை
>சூறையாடியதாக ஒரு குறிப்பு,மற்றும் படைகளின்

>சூறையாட்டம்,இழிவுபடுத்தியதாக கல்வெட்டுக்கள்..அவர் ராஜேந்திரசோழனை கஜினிமுகமதுடன்
ஒப்பிட்டு
>இருந்தார்! கங்கைகொண்டசோழபுரத்தையும் பல சோழர்கால ஆல்யங்களையும் இன்று
கேட்பாரில்லை .முற்பகல்
>செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ ? அல்லது irony of fate
?
>
>இன்னோரு துணைக்கேள்வி 10 கமாண்ட்மெண்ட்ஸ்படம் பார்த்தபோது:
>எகிப்தியர்களின் கோவில்கள்
அடிமைகளின் உழைப்பாலும் வியர்வையாலும் எழுந்தன.
>தமிழகத்துக் கோயில்கள் வெறும் யானைகளால்
கட்டப்பட்டனவா ?
>இல்லை படையெடுத்த நாடுகளிலிருந்து அடிமைகள் வந்தனரா?
>கனகவிசயர் கதை நாம்
அறிந்தது.கல்வெட்டுக்கள் என்ன சொல்கின்றன?
>
>
>வித்யா
>
>------------------------
>
>-------------
--------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>

[Non-text portions of this message have been removed]