From arull@... Sat Oct 26 19:14:12 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 27 Oct 2002 02:14:12 -0000
Received: (qmail 80603 invoked from network); 27 Oct 2002 02:14:12 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 27 Oct 2002 02:14:12 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 Oct 2002 02:14:12 -0000
Received: from tm.net.my (bth-200-162.tm.net.my [219.92.200.162]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with ESMTP id <0H4M00MHDBJKZN@...> for agathiyar@yahoogroups.com; Sun, 27 Oct 2002 10:14:10 +0800 (SGT)
Date: Sun, 27 Oct 2002 10:11:35 +0800
Subject: நாளும் ஒரு தேவாரம் 1
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3DBB4B57.324E61EC@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 20827

திருச்சிற்றம்பலம்

திருக்காளத்தி
திருத்தாண்டகம்

[இப்பதிகத்தில் 5 ஆவது பாடல் நீங்கலாக ஏனையவை 'காண்'
என்னும் முடிவை உடையவாய் உள்ளன. பதினொரு பாடல்களும்
'களத்தியான் அவன் என் கண்ணுளானே' என நிறைவு பெறுகின்றன.]

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

(பொ-ரை.) திருக்காளத்தி மலையின்கண் காணப்படும் கண
நாதன் என்னும் இறைவன், விற்றுண்ணுதற்குரிய உடைமை யாதும்
இல்லாதவன். இடமகன்ற கச்சியில் ஏகம்பனாய் விளங்குபவன்.
பிச்சை ஏற்றுண்பதன்றி வேறுணவு இல்லாத சதுரப்பாடுடையவன்.
இடுகாட்டில் வாழும் வலிமையுடையவன். குற்றம் தீர்ந்த
பொன்னாலாய தூணாக விளங்குபவன். நல்ல மாணிக்க மலை
போல்பவன். உலகம் ஏழினையும் தானேயாய்த் தாங்கி நிற்கும் கல்
தூணாக விளங்குபவன். இவ்வாறெல்லாம் காண்டற்குரியனாக
விளங்கும் அவன் என் கண்ணுள்ளும் நுண்ணிதாக வுள்ளான்
என்பதாம்.

(கு-ரை.) உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக இலகு
பேர் இச்சா ஞானக் கிரியை உட்கரணமாக விளங்குபவன் இறைவன்.
இந்நிலையில் அவனின்றும் வேறாக அவனது உடைமை எனப் பிரித்தற்
கில்லை. ஆதலின் விற்றூண் ஒன்றில்லாதவன் எனக் குறித்தார்.
ஊண் - உணவு. ஈண்டு அதற்கு ஏதுவாய பொருளைக் குறித்தது.
பாடுவார் பசி தீர்த்தும் பரவுவார் பிணி களைந்தும் நிற்கும் நிலையினன்
ஆயினும், தன்னளவில் ஓடுநன் கலனாக உண்பலிக் குழலும் தன்னல
மற்றவனாய் உள்ளான் என்பார் 'பிச்சையல்லால் மற்றூண் ஒன்றில்லாதவன்'
என்றார். இப்பெருந்தன்மை அவனது வல்லமையாகும் என்பார் 'சதுரன்'
என்றார். மைந்தன் - வலிமையுள்ளவன். பொழில் - உலகம். கண்ணுள்
புகுந்து தம் கருத்தில் இருப்பது பற்றி 'என் கண்ணுளானே' என்றார்.
'கண்ணுள்ளார் காத லவராக' என்னும் வழக்கும் காண்க. 1

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.