From buhari2000@... Mon Oct 28 10:37:16 2002
Return-Path:
X-Sender: buhari2000@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 28 Oct 2002 18:37:15 -0000
Received: (qmail 22757 invoked from network); 28 Oct 2002 18:37:15 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 28 Oct 2002 18:37:15 -0000
Received: from unknown (HELO hotmail.com) (209.185.241.94) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 28 Oct 2002 18:37:15 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Mon, 28 Oct 2002 10:37:15 -0800
Received: from 199.243.72.6 by lw3fd.law3.hotmail.msn.com with HTTP; Mon, 28 Oct 2002 18:37:14 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Re: Tamils and the Death Railway - and on Japanese psyche
Date: Mon, 28 Oct 2002 13:37:14 -0500
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 28 Oct 2002 18:37:15.0473 (UTC) FILETIME=[0992EC10:01C27EB1]
From: "Buhari Asan"
X-Originating-IP: [199.243.72.6]
X-Yahoo-Group-Post: member; u=78160330
X-Yahoo-Profile: buhari2000
X-Yahoo-Message-Num: 20855



இந்தக் கட்டுரை தந்த இறுக்கத்தை
எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை!

வரலாற்றில் மனிதன் அதிகமாக உட்கொண்டது
மனிதனைத்தான்.

மகா கேவலப்பிறவி!

யுத்தகாலத்தில்தான் மனிதனின் உண்மையான இயல்புகள்
வெளிப்படுகின்றன போலும்.

இன்றெல்லாம் கூட எல்லா மனிதர்களுமே
முகமூடிகள்தான்!

ஏதோ ஒன்றுள் சிக்கி
பொய்யைச் சாதுர்யமாய் நிஜமாக்கும்
நல்லவர்கள்.

சந்தர்ப்ப நாயகர்கள்!

அவன் இவனைப் படைத்தானா? கழித்தானா?

அன்புடன் புகாரி


===============================================
From: "eramurug"

குமுதம் ஜங்க்ஷன் பத்திரிகையில் ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி காவபாத்தா பற்றி நான் எழுதியிருந்த
கட்டுரை மரண ரயில்வே அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக அச்சில்
இடம்பெற முடியாமல் போன அந்தப் பகுதி -
-------------------------------------

எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பி
டித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல்
இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில்
பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க
உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை செய்ய
முடியாமல் போனால் சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்கிறார்கள் பாவிகள்.

அந்த அமெரிக்க ராணுவ வீரனுக்கும் அவன் போல் சிறைப் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகளுக்கும் உடம்பில் வலு
வேண்டும். வேறு எதற்குமில்லை. வேலை செய்ய. இல்லாவிட்டால் அடித்தே கொன்று விடுவார்கள் அவனைக் கைதி
யாக்கியவர்கள்.

அமெரிக்க ராணுவ வீரன் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறான். கையில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட். அதில்
கொஞ்சம் தண்ணீர். இன்னொரு கையில் குவளை. மெல்ல நடக்கிறான். நடப்பது அவனைச் சிறைப் பிடித்தவர்களி
ன் கூடாரங்களுக்குப் பின்புறமாக. அவர்களின் கழிவறைகளில் ஒவ்வொன்றாகப் புகுந்து வாடையைத் தாங்கி
க்கொண்டு, சிதறிக் கிடக்கும் கழிவில் ஏதோ தேடுகிறான். கிடைக்கிறது.

அது ஒரு மொச்சைப் பயிறு. எல்லாச் சத்தும் கொண்ட பெரிய மொச்சை. அவனை அடைத்து வைத்தவர்களின் நி
த்திய உணவில் தவறாமல் இடம் பெறுவது. சாப்பிடக் கிடைத்த நேரத்தில் அவர்கள் அவசரமாக விழுங்குவதால்
ஜீரணமாகாமல் வயிற்றிலிருந்து கழிவோடு அப்படியே வெளியேறிக் கழிவறையில் மனிதக் கழிவுக்கு இடையே
வி
ழுந்து கிடப்பது.

அமெரிக்க ராணுவ வீரன் தன்மானம், அருவறுப்பு, தன்னுடைய நிலை குறித்த சோகம் எல்லாவற்றையும் ஒதுக்கி
வைத்து விட்டு அந்த மொச்சைப் பயறைக் குனிந்து எடுத்து, பிளாஸ்டிக் வாளித் தண்ணீரில் கழுவி அதைக்
குவளையில் போடுகிறான். குவளையில் இன்னும் சில மொச்சைகள்.

பாதி வரையாவது குவளை நிறைய வேண்டும். அவனுக்கு இன்று பகலில் அரைகுறை சாப்பாட்டுக்கு அப்புறம்
இந்தக் குவளையில் இருந்துதான் சத்துணவு கிடைக்கப் போகிறது.

இழிந்த பன்றி போல் அடுத்த கழிவறை தேடி நடக்கிறான் அவன்.

இது கதையில்லை. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நடந்தது.

போர்க்காலத்தில் தாய்லாந்தில் அயூத்யா பக்கம் க்வாய் நதிக்குக் குறுக்கே பாலம் அமைத்து போர்க்கைதிகள்
இருப்புப்பாதை போட்ட இடத்தில் ஒரு போர்க்கால நினைவு அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. அங்கே
நான் சுற்றியலைந்து கொண்டிருந்தபோது கண்ணில் நீரை வரவழைக்கும் இந்தச் செய்தியையும் இது போல் சக
மனிதனுக்கு மனிதன் இழைத்த குரூரத்தையும் சொல்லும் எத்தனையோ ஆவணங்களையும் புகைப்படங்களையும் பார்க்க
நேர்ந்தது.

அடிப்படை மனித நேயத்தைத் துடைத்தெறிந்து இந்தக் கொடுமைகளை அரங்கேற்றிய தேசத்தில் இருந்து தான்
இயற்கையை நேசிக்கும், அன்பு, பாசம், நேசம் என்ற அடிப்படை மனித இயல்புகளை மெல்லத் தொட்டுக் காட்டி
இதயத்தை வருடும் இந்தக் கவிதையும் வந்திருக்கிறது.

பனி மூடிய நாள்.

குழந்தைகளோடு பந்து விளையாடியபடி

அது நீண்டு நகர்ந்து முடிவதைப்

பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதமான காற்று.

தூய்மையான நிலா காயும் இரவு.

வா, நாம் நடனமாடியபடி

வாழ்வின் கடைசி தினங்களைக்

கழிப்போம்.


அந்த நாடு ஜப்பான்.


ஜப்பானியர்களின் மன இயக்கத்திற்கும், இலக்கியத்துக்கும், இயந்திரங்கள் போன்ற செயல்பாடுகளுக்கும் இடையே
தெரியும் இடைவெளி பிரமிப்பூட்டுவது.


அன்புடன்,
இரா.முருகன்


_________________________________________________________________
Protect your PC - get McAfee.com VirusScan Online
http://clinic.mcafee.com/clinic/ibuy/campaign.asp?cid=3963