From azad ak@... Tue Oct 29 06:24:53 2002
Return-Path: X-Sender: azad ak@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 29 Oct 2002 14:24:52 -0000
Received: (qmail 58572 invoked from network); 29 Oct 2002 12:21:34 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 29 Oct 2002 12:21:34 -0000
Received: from unknown (HELO web41012.mail.yahoo.com) (66.218.93.11) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 Oct 2002 12:21:34 -0000
Message-ID: <20021029122134.70334.qmail@...>
Received: from [212.138.47.12] by web41012.mail.yahoo.com via HTTP; Tue, 29 Oct 2002 04:21:34 PST
Date: Tue, 29 Oct 2002 04:21:34 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Yeththunaikkaalam Iththaakam!
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: AbulKalam Azad X-Yahoo-Group-Post: member; u=84814348
X-Yahoo-Profile: azad ak
X-Yahoo-Message-Num: 20877
இனிய புஹாரி,
நீங்கள் அவசியம் ஞானியார் அப்பாவின் காவடிச்சிந்துகளைப் படிக்கவேண்டும்.
எங்காவது கிடைக்குமா என்று நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
இறைநகர் மறைமணி கூட சில நல்ல சந்தங்களை எழுதியுள்ளார். தொகுப்பின்
பெயர் 'சாந்திவயல்'. இதற்கு அணிந்துரை அளித்தவர் நீதியரசர் மு. மு.
இஸ்மாயில். நினைவிலிருக்கும் சில வரிகள்.
நாடுனக்கு என்னசெய்த தென்று நீயும் கேட்கும் - பாயும்
கூடுகொண்ட கொள்கை தனைக் கை விடுதல் ஊக்கம்!
நாடும் இந்த நாட்டிற்கேது நன்று செய்தாய் என்று - நீயும்
ஆடுகின்ற உந்தன் நெஞ்சை அலசிடுவாய் இன்று!
இந்த வகை சிந்துகளைப்பற்றி அப்துல் ரகுமான் குறிப்பிடுவார். "வார்த்தைகள்
சதங்கை கட்டிக்கொண்டு ஆடும் ஆவேச நடனம்" என்று. அவரது ஒரு வரி,
வீரக் களத்தில் - ரத்த
ஈரக் குளத்தில் - தினம்
வெற்றி பெறுவதிவன் வாடிக்கை - வாளைச்
சுற்றும் தொழிலொரு வேடிக்கை
இதைப்போல் நிறைய உங்களிடமிருந்து வர என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆசாத்
===============================================
--- Buhari Asan wrote:
> ====================
> எத்துணைக் காலம் இத்தாகம்!
> ====================
>
> சின்னஞ்சிறு
> கன்னி வாழை
> தங்கப் பேழை
> புதுத் தாழை - எந்தன்
> அந்தப்புறம்
> வரும் நாளை! - அந்தத்