From jaybee@... Tue Oct 29 20:38:29 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 2 1); 30 Oct 2002 04:38:28 -0000
Received: (qmail 71005 invoked from network); 30 Oct 2002 04:38:28 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 30 Oct 2002 04:38:28 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 Oct 2002 04:38:28 -0000
Received: from tmnet (sp-103-55.tm.net.my [210.186.103.55]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0H4S00G8R281IP@...> for agathiyar@yahoogroups.com; Wed, 30 Oct 2002 12:38:27 +0800 (SGT)
Date: Wed, 30 Oct 2002 12:36:43 +0800
Subject: Halloween and PEy
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20021030123643.00789e78@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 20892


அன்பர்களே,

நாளைக்கு Halloween.
நாளைக்காவது எல்லேய் சாமா சார், ஏதாவது பேய்க்கதை
எழுதுவாரா?
உண்மையான பேய்க்கதைகள் ஜாவாக்குமாருக்குத்தான்
அத்துப்படி.
தமிழில் பேய்க்கதைகள் என்ற ஆராய்ச்சியை யாரும்
செய்திருக்கிறார்களா?
பழையனூர் நீலி கதையிலிருந்து ஆரம்பிக்கலாம்.
திருஞானசம்பந்தரே அதைக் குறிப்பிட்டுள்ளார் என்னும்போது
அக்கதை மிகமிகப்பழையது எனலாம்.
ஔவையாரை 'எற்றெற்று' என்று ஜாமத்துக்கு ஜாமம் வந்து
பயமுறுத்திப்பர்த்துப் பாட்டு வாங்கிக்கொண்ட பேயையும்
குறிப்பிடலாம். உண்மையிலேயே பாட்டுத்தான் வாங்கிக்கொண்டது.
ஒவ்வொரு 'எற்றெற்று'க்கும்' ஒவ்வொரு 'எற்றோமற்றெற்றோமற்றெற்று'
என்ற ஈற்றடியை வைத்து ஒவ்வொரு பாடலை ஔவையார் பாடினார்.
அதன்பிறகு அந்தப் பேய்க்கு 'தமிழறியும் பெருமாள்' என்ற
பெயரில் மறுபிறவி ஏற்படச்செய்து, அப்பிறவியில் பழைய காதலனையே
மணந்துகொள்வதற்கு ஔவையார் வரமளித்ததும் ஓர் இரட்டைக் கதை.
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லிய முப்பத்திரண்டு
கதைகள் இருக்கின்றன. காளிதாசன் கதையில்கூட ஒரு பேய்
வருகிறது.

அன்புடன்

ஜெயபாரதி

========================