From jayandgl@... Mon Nov 11 02:56:42 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 3 0); 11 Nov 2002 10:56:42 -0000
Received: (qmail 47758 invoked from network); 11 Nov 2002 10:56:42 -0000
Received: from unknown (66.218.66.216) by m12.grp.scd.yahoo.com with QMQP; 11 Nov 2002 10:56:42 -0000
Received: from unknown (HELO SifyMail1.1) (202.144.76.42) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Nov 2002 10:56:40 -0000
Received: (qmail 32459 invoked by uid 7002); 11 Nov 2002 16:23:17 +0530
Received: from 202.144.76.10 (HELO SifyMail1.0) (202.144.76.10) by 0 with SMTP; 11 Nov 2002 16:23:17 +0530
Received: (qmail 32290 invoked by uid 7002); 11 Nov 2002 16:23:14 +0530
Received: from 202.9.169.40 (HELO a) (202.9.169.40) by 0 with SMTP; 11 Nov 2002 16:23:14 +0530
Message-Id: <3.0.5.32.20021111162547.007aa100@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Mon, 11 Nov 2002 16:25:47 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Agathiyar Panchapatchi - 1
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: jayandgl
X-Yahoo-Message-Num: 21158

அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்
**************************
நண்பர் சிலர் வேண்டுகோளுக்கிணங்கி வழக்கொழிந்துள்ள அரிய நூல்களின் வரிசையில் ஒன்றான நுண்கலைக்
காவியத்தின் மூலத்தை மட்டும் தருகிறோம். பிரளயம் மெய்யோ? பொய்யோ? தெரியாது. இருப்பினும் பல
பழய நூல்கள் குறித்துள்ளபடி பிரளயம் வந்தபின் மிஞ்சியிருக்கும் அறிவுசீவிகளுக்கு நம் முன்னோர்
எந்தவகையிலும் அறிவில் குறைந்தவரல்லர் என்று எடுத்துக்காட்டும் சாற்றிறங்களின் மூலத்தைமட்டுமாவது
விட்டுச்செல்லும் நோக்குடனே, எம்முடையகைப்படியிலிருந்து தருகிறோம். தகவிலர் யாரேனும் இதை
அரைகுறையாகப் புரிந்துகொண்டு பாவித்தால், இதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என
எச்சரிக்கை விடுத்தபின் உரையின்றித் தந்தோம். நேர்வழியில் பாவிக்க வாழ்வு வளமாகும்.
************************
காப்பு
-------
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து - வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதை காவியப் பொருலே காப்பு.
2.துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் - வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்.
3.ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே - நன்று
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.
********
முதலதிகாரம்.
---------------
1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து - வழிபெறவே
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
ஆராய்ந்து சொல்வ தறி.

2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
உகரங் கருங்காக முன்னிப் - பகரில்
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
ஒகார முயர் மெய்யாந் துரை.

3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.

4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
நன்றாக விவ்வாறு நாழிகையுங் - குன்றாத
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)

5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் - குறித்திடுங்கா
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
வண்டனைய கண்ணாய் மதி.

6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே - பண்பாகத்
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
பாங்குடைய பட்சி பலன்.

7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.

8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.

9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.

10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.
(தொடரும்)
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)