From jayandgl@... Thu Dec 12 22:41:29 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 3 0); 13 Dec 2002 06:41:28 -0000
Received: (qmail 51526 invoked from network); 13 Dec 2002 06:41:28 -0000
Received: from unknown (66.218.66.218) by m2.grp.scd.yahoo.com with QMQP; 13 Dec 2002 06:41:28 -0000
Received: from unknown (HELO SifyMail1.1) (202.144.76.26) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Dec 2002 06:41:27 -0000
Received: (qmail 9721 invoked by uid 7002); 13 Dec 2002 12:07:22 +0530
Received: from 202.144.76.26 (HELO SifyMail1.0) (202.144.76.26) by 202.144.76.26 with SMTP; 13 Dec 2002 12:07:22 +0530
Received: (qmail 9570 invoked by uid 7002); 13 Dec 2002 12:07:19 +0530
Received: from 210.214.178.153 (HELO a) (210.214.178.153) by 202.144.76.26 with SMTP; 13 Dec 2002 12:07:19 +0530
Message-Id: <3.0.5.32.20021213061100.0079e2c0@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Fri, 13 Dec 2002 06:11:00 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Agaththiyar Panjsapatsi - 9
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: jayandgl
X-Yahoo-Message-Num: 21800
அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்
**************************
பகுதி 9
---------
81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
நல்லாருங்காக நடுமருதம் - மெல்லியரே
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
ஆரணத்தோர் சொல்லா லறி.
82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
நல்ல திறலாந்தையது நாற்காலாம் - சொல்லக்
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.
83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் - பொல்லாத
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
வாழி மடவார் வகை.
84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் - மெல்லியரே
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
நாழிகையிலே வருவா னாடு.
85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.
86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் - பொல்லாத
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.
87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
விரையங் கருங்காக மேற்காம் - புரைதீரக்
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
மத்திபத்தி னிற்கு மயில்.
88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
மிக்ககிழக்காகும் வல்லூறு - மெச்சு நல்ல
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
பொற்கோழி மத்திபமாம் போற்று.
89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
உற்றநிதி கிழக்கேயொண் காகம் - சற்றிடமே
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.
90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
காணுஞ் சிரசாந்தை கைகாகம் - பேணிக்
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ
பி.கு: இத்துடன் மூலம் நிறுத்தி, உரையுடன் ஆரம்பிக்க எண்ணித் தொடருவாம்.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)