From jayandgl@... Fri Dec 13 22:38:37 2002
Return-Path: X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 3 0); 14 Dec 2002 06:38:37 -0000
Received: (qmail 34492 invoked from network); 14 Dec 2002 06:38:37 -0000
Received: from unknown (66.218.66.218) by m14.grp.scd.yahoo.com with QMQP; 14 Dec 2002 06:38:37 -0000
Received: from unknown (HELO SifyMail1.1) (202.144.76.42) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 14 Dec 2002 06:38:34 -0000
Received: (qmail 18505 invoked by uid 7002); 14 Dec 2002 12:04:28 +0530
Received: from 202.144.76.10 (HELO SifyMail1.0) (202.144.76.10) by 0 with SMTP; 14 Dec 2002 12:04:28 +0530
Received: (qmail 18315 invoked by uid 7002); 14 Dec 2002 12:04:23 +0530
Received: from 202.9.169.139 (HELO a) (202.9.169.139) by 0 with SMTP; 14 Dec 2002 12:04:23 +0530
Message-Id: <3.0.5.32.20021214060319.007aa530@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sat, 14 Dec 2002 06:03:19 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Agaththiyar Panjsapatsi - 1 (Uraiyutan)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: njaanavettiyaan X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: jayandgl
X-Yahoo-Message-Num: 21818
அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்
**************************
மெய்கண்டார் நண்பர் திரு.உலகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி வழக்கொழிந்துள்ள அரிய நூல்களின்
வரிசையில் ஒன்றான நுண்கலைக் காவியமாம் "ஐம்புள் நூல்" தருகிறோம். பிரளயம் மெய்யோ? பொய்யோ?
தெரியாது. இருப்பினும் பல பழய நூல்கள் குறித்துள்ளபடி பிரளயம் வந்தபின் மிஞ்சியிருக்கும்
அறிவுசீவிகளுக்கு நம் முன்னோர் எந்தவகையிலும் அறிவில் குறைந்தவரல்லர் என்று எடுத்துக்காட்டும்
சாற்றிறங்களை விட்டுச்செல்லும் நோக்குடனே, எம்முடைய கைப்படியிலிருந்து தருகிறோம்.
"பட்சி அறிந்தவனைப் பன்னிப் பகைத்து நிதம்
கட்சி புரிவோர் கருத்தழிவர் - குட்சி
எறியக் குலைத்துக் கெடுவர்காண் மண்ணில்
வறியராய் நொந்தலைவர் மற்று."
தகவிலர் யாரேனும் இதை அரைகுறையாகப் புரிந்துகொண்டு பாவித்தால், இதன் பின் விளைவுகள் மிக
மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தபின் தந்தோம். நேர்வழியில் பாவிக்க வாழ்வு வளமாகும்.
"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு."
இவ்வுலகே ஐந்து பூதங்களால் ஏற்பட்டது. அவை:நிலம்,நீர்,அக்கினி,வாயு,ஆகாயம் ஆகும். பெரும்பாலானவைகள்
இவ்வைந்து கூறுகளாகவே பிரிக்கப்பட்டுள்ளன.
சித்தாந்த சிகாமணி கூறுகிறது:
"ஐம்பூதம் ஐம்பொறிக ளோடைம் புலனமர்ந்த
ஐந்தெனுங் கர்மேந்திரிய மைவர்கா ரணராம்
ஐந்தெனுந் தொழிலைம் பெரும்பிரமங்களனைத்தும்
ஐந்தெழுத்தில் உணர்த்துவர் அறிவ ரறிந்தவரே."
ஆக, ஐம்பூதம், ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்தொழில், ஐந்தெழுத்து
ஆகியவைக்கு ஐவர் காரணராம். இதன் சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.
இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய
பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகும். ஆக,
எப்பறவையின்கீழ் ஒருவன் பிறந்தானோ அவனுக்கு அப்பறவையின் குணநலன்கள் இருக்கும். பறவைகள் உருவகமே.
பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும்
இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான். வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும்
தொழில்கள் மாறும். அவையாவன: உண்ணும்,நடக்கும், தூங்கும், அரசாளும், இறக்கும். இதை, ஊண், நடை,
நித்திரை, அரசு, மரித்தல் என்பர். இவை மறைமுகமாக, அப்பறவைக்கும் அதைன்கீழ் பிறந்த மனிதனுக்கும்
அப்பொழுதுக்கு உள்ள பலத்தைக் குறிக்கும். அரசு என்றால் பலம்கூடியும், மரிக்குமெனில் பலமிழந்த நிலையில்
உள்ளது எனவும் கொள்ளவேண்டும். எவ்வளவு நேரத்திற்கு இது நிலைத்திருக்கும்? என்னும் வினாவெழுகிறது அல்லவா?
ஒரு மாதத்திற்கு 2 பட்சங்கள். அவை: பூர்வபட்சமாகிய வளர்பிறையும், அமரபட்சமாகிய
தேய்பிறையுமாம். ஒவ்வொரு பட்சத்திற்கும் 15 திதிகள் (அதாவது 15 நாட்கள்). ஒரு நாளைக்குப் பத்து
சாமங்கள். ஒவ்வொரு சாமத்திற்கும் 6 நாழிகைகள். ஒரு நாளைக்கு, பகல் 30 நாழிகை; இரவு 30
நாழிகை; ஆக மொத்தம் 60 நாழிகை. ஆக, பகல் 5 சாமம், இரவு 5 சாமம். சாமம் ஒன்றுக்கு நாழிகை
6. பகல் 12மணியை 30ஆல் வகுக்க வரும் 24 நிமிடங்கள். இவ்வாறாக, நாழிகை ஒன்றுக்கு 24 நிமிடங்கள்
எனக் கணக்கிடல் வேண்டும்.
உலகில் அண்டம் பிண்டம் உண்டல்லவா? அதிலும் பிண்டத்திலும், சூக்கும, அதிசூக்கும,காரண உடல்களும்
உண்டல்லவா? அதுபோல ஒரு பறவை உண்ணுவதற்கு 6 நாழிகை எடுத்துக் கொண்டாலும், அதில் சூக்குமமாக
உண்ணுதற்குக் கொஞ்சம் காலமும், நடப்பதற்குக் கொஞ்சம் காலமும், அரசாளக் கொஞ்சம் காலமும் எடுத்துக்
கொள்ளும். இதையே, பஞ்சபட்சி சாற்றிறத்தில், ஊணில் நடை, ஊணில் அரசு, என்றும் கூறுவதியல்பு. இதை,
சாதக ரீதியாக விளக்கினால், சூரிய திசையில் சந்திர புத்தி என்றும், குருதிசையில் கேது புத்தி
என்றும் கொள்ளலாம். சோதிடம் அறிந்தவர்கள் இன்னுமொரு வினாவெழுப்பலாம்.அதாவது, சூரிய திசையில்
சந்திர புத்தி; அது சரி; ஆனால் என்ன அந்தரம்? என வினவினால் இன்னும் சற்று ஆழமாகச் சென்று, 24
நிமிடங்களையும் கூறிடல் வேண்டும். இதையே, ஊணில் நடையில் அரசு, ஊணில் அரசில் நித்திரை என்றும்
பிரிக்கலாம். இன்னும் குழப்பாமல் மேலே செல்வோம்.
இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில், திதிப் பிரிவு, அட்சரப் புணர்ச்சி, பட்சிப் புணர்ச்சி, அட்டயோனிப்
பொருத்தம், எழுத்தலங்காரப் பொருத்தம், நாமயோனிப் பொருத்தம், வெற்றி தோல்விநிலை, அருக்கனிலை,
பட்சியின் வலிமை, படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்), பட்சிகளின் செயல்கள், பட்சி பாகம் இவ்வாறு
பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.
இதை முறையாகக் கற்றுணர, சாற்றிறப் பூட்டுக்களை உடைக்க, இறையருளும், நல்ல விவரங்களறிந்த குருவும்
நிச்சயம் வேண்டும். கற்றபின், நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகித்தல் வேண்டும். இதனால், நாம் இந்த
நொடியில் என்ன நிலயில் உள்ளோம்?, நம் பலம் யாது?, செய்யும் செயல்களினால் நமக்கு நன்மை
கிடைக்குமா?, வெற்றி கிட்டுமா?, தோல்வியாகுமா? எனவறிந்து, "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு"
காத்திருந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். இதன் சூக்குமத்தை நன்குணர்ந்தவர்கள், இதனால்
அந்நொடியில் என்ன சரம் ஓடுகிறது எனத் தெரிந்துகொண்டு, அதை மாற்றிக் கொள்ளுவர். அது யோகத்திற்கும்
பலனளிக்கும். ஞானம் கிட்டும். இதுவே இச்சாற்றிறத்தின் தலையாய பயன்.
எனக்குத் தெரிந்தவரை யாரும் பஞ்சபட்சி சற்றிறத்தைக் கரைத்துக் குடித்தவரில்லை.
என் குருபிரான் கூறியது:" சுட்டிக் காட்டிவிட்டேன். தவத்தில் (தவம் செய்யும் முறை ஒளவைக் குறளில் காண்க)
இருந்து அன்னை வாலாம்பிகைகையை அழைத்துக் கொள்; அவள் கருணையைப் பெற முயலு; கிட்டிடின் கிட்டிடும்
பேறு. இல்லையேல் கிட்டாதாயின் வெட்டென மற." இதையே, உங்களுக்கும் கூறி அகத்தியரின் பஞ்சபட்சி
சாற்றிறத்திற்கும் உரை தருகிறேன். அகத்தியரும், மெய்கண்டாரும் ஒருசேர உரை கேட்டதால் தந்தோம்.
தயவுசெய்து, அரைகுறையாகப் புரிந்துகொண்டு சோதனை செய்து தீங்கை விலைக்கு வாங்க வேண்டாம் எனத்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
************************
காப்பு
-------
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து - வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதைகா வியப்பொருளே காப்பு.
உன்னி = தியானித்து, கவனத்துடன்
பன்னி = பண்ணி = அமைத்து
வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு
நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன்
உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம்
தென்கிழக்கில் உதிக்கும் பட்சிகளின் உண்மையை உரைக்க இக்கலை கதையெனினும் காவியமெனினும்
அதனுள்ளிருக்கும் மெய்ப்பொருளே காப்பு.
(யோக விளக்கம்):
ஒருவனாகிய ஆடவல்லான் உரைத்த முதலெழுத்தாம் குத்தெழுத்தைக் கவனமுடன் தியானித்து (உன்னி), அதை ஆன்ம
பட்சியாக அமைத்துக் (பன்னி) குண்டலியாம் அங்கியில் உதிக்கும் பட்சியை (சரத்தை) உள் மெய்யில்
(உண்மை) ஒலிக்க (உரைக்க) உதவும் கதைகாவியப் பொருளே காப்பாம்.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)