From govinda5@... Wed Jun 11 08:16:25 2003
Return-Path:
X-Sender: govinda5@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 85635 invoked from network); 11 Jun 2003 15:16:24 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2003 15:16:24 -0000
Received: from unknown (HELO smtp16.singnet.com.sg) (165.21.6.36) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2003 15:16:23 -0000
Received: from pike.singnet.com.sg (pike.singnet.com.sg [165.21.101.112]) by smtp16.singnet.com.sg (8.12.9/8.12.9) with ESMTP id h5BFGMqe001712; Wed, 11 Jun 2003 23:16:23 +0800
Received: (from cooluser@localhost) by pike.singnet.com.sg (8.11.6/8.9.3) id h5BFGMx16769; Wed, 11 Jun 2003 23:16:22 +0800
X-Authentication-Warning: pike.singnet.com.sg: cooluser set sender to govinda5@... using -f
To: Agathiyar , Tamil-Ulagam
Subject: ithu eppati iruggu (14)
Message-ID: <1055344582.3ee747c6b1e55@...>
Date: Wed, 11 Jun 2003 23:16:22 +0800 (SGT)
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo
Reply-To: govinda5@...
X-Yahoo-Group-Post: member; u=146319048
X-Yahoo-Profile: sgindfamily
X-Yahoo-Message-Num: 24714

இது எப்படி இருக்கு (14)
====================
பெண்களின் உணர்ச்சி..தொடருகிறது

ஆண்கள் ஒரு மூளையைக் கொண்டிருப்பதால் எதையும் சட்டுபுட்டுண்ணு முடிவு எடுத்துடுவாங்க. பெண்கள் அப்படியல்ல முதல்ல இடப்பக்க மூளை சொல்லுறதைக் கேக்கணும். அதுக்கு வலதுபுற மூளை இடப்பக்க மூளை சொல்வது சரியில்லைண்ணு சொல்லும். இந்த குழப்பம் தான் பெண்களைப் பாடாய்ப் படுத்துகிறது.

பெண்களை யாரும் புகழ்ந்து விட்டால் கேட்கவேண்டுமா ? அன்று அவர்களுக்குத் தூக்கமே வராது. யாரும் கோபமாகக் கடிந்து விட்டாலும் அப்படித்தான், அந்தக் கவலையில் தூக்கமும் போய் கண்ணீரும் மல்கிவிடும்.

அக்காலத்தில் அதிகாலையில் வீட்டுமுன் அழகான கோலம் போடும் பெண்கள் மகிழ்வான, நிறைந்த மனதுடன் அன்று முழுதும் பவனி வருவர். கோலம் போடுவதில் செலுத்தும் கவனம் ஒரு 'குட்டி' தியானம் செய்வதற்கு ஈடானதாம். போட்ட கோலம் அழகாக அமைந்துவிட்டால் அவர்களின் ஆனந்தம் அன்று இரவு முழுதும் அலைமோதும்.

'கோலம் போடுவது இயலாது அது மத சார்பானது' என்று (தவறாகக்) கருதினாலும், கோலம்போட இடமில்லவிட்டாலும், அல்லது நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை. அதிகாலையில் அன்பான கணவன் மனைவியைப் பார்த்து ஆசையாக இரண்டு வார்த்தைகள் பேசினாலே போதும்*.

*என்ன பேசுவது என்று தெரியாத சில "@#?" கணவர்களுக்கு, உ-ம்: இன்னைக்குக் காப்பி பிரமாதம் (உண்மையாக அது காப்பியா தேனீரா என்று தெரிந்துகொள்ளவும்) , உன்னோட பொட்டு அழகாயிருக்கு (பொட்டு வைக்காத மனைவியிடம் சொல்லி வைக்காதீர்கள், அப்புறம் நான் தான் சொல்லிக் கொடுத்தேன்னு தெரிஞ்சு போயிடும்).

=========
மாகோ
சிங்கை