From govinda5@... Thu Jun 12 07:59:11 2003
Return-Path:
X-Sender: govinda5@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 38230 invoked from network); 12 Jun 2003 14:58:53 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2003 14:58:53 -0000
Received: from unknown (HELO smtp13.singnet.com.sg) (165.21.6.33) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2003 14:58:52 -0000
Received: from dory.singnet.com.sg (dory.singnet.com.sg [165.21.101.115]) by smtp13.singnet.com.sg (8.12.9/8.12.9) with ESMTP id h5CEwpmE014971; Thu, 12 Jun 2003 22:58:51 +0800
Received: (from cooluser@localhost) by dory.singnet.com.sg (8.11.6/8.11.2) id h5CEwpp30136; Thu, 12 Jun 2003 22:58:51 +0800
X-Authentication-Warning: dory.singnet.com.sg: cooluser set sender to govinda5@... using -f
To: Agathiyar , MailingGroups
Subject: ithu eppati iruggu (18)
Message-ID: <1055429930.3ee8952aefaa8@...>
Date: Thu, 12 Jun 2003 22:58:50 +0800 (SGT)
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo
Reply-To: govinda5@...
X-Yahoo-Group-Post: member; u=146319048
X-Yahoo-Profile: sgindfamily
X-Yahoo-Message-Num: 24730

இது எப்படி இருக்கு (18)
====================

தீபாவளி வந்து விட்டது. கணவன் கடன் வாங்கி பல விதமான மதுபானங்களையும் சேர்த்துவிட்டான். அதற்கேற்றார் போன்ற விதவிதமான கோழி, ஆடு, மீன் இன்னும் பல பிரட்டல்கள் தயார். எல்லா இனத்தவரும் விருந்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

கணவனுக்குத்தான் உண்மையான 'தீபாவளி', வருபவர்கள் ஒரு முறை குடித்தாலும் வரும் அத்தனை பேர்களுடனும் மீண்டும் மீண்டும் குடிக்கக் கொடுத்து வைத்தவன்.

மனவிக்கும் ஒரே ஆனந்தம். ஒவ்வொரு உறவினர், நண்பர் வீடாக தொலைபேசிமூலம் எத்தனை மற்ற இன விருந்தினர்கள் விருந்திற்கு வந்தனர் என்று (ஒன்றுக்கு பலவாகத் திரித்து)சொல்லிக் கொண்டிருப்பாள். எவ்வளவுக்கு எவ்வளவு மற்ற இனத்தவர்களின் எண்ணிக்கை கூடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அக்குடும்பத்தின் மதிப்பீட்டு எண் உயர்கிறது.

தீபாவளியன்று தமிழர்கள் தம் உறவினர் வீட்டிற்கோ, தமிழ் நண்பர்கள் வீட்டிற்கோ செல்வது மிக அரிது. தீபாவளி முடிந்து ஒரிரு வாரங்கள் கடந்துதான் அண்ணன் வீட்டிற்கோ, தாயார் இருக்கும் தமக்கை வீட்டிற்கோ தீபாவளி விருந்திற்கு வருவார்கள்.

சீனர்கள் அப்படியல்ல. அவர்களுக்கு முக்கியத்திருநாளான சீனப்புத்தாண்டின் முதல் நாள் உறவினர்களின் ஒன்று கூடல். அப்படி நேரமிருந்தால் இரண்டாம் நாள்தான் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நம்மவங்க வீட்டில பரிமாரப்படுற உணவு, 'தண்ணீ' அதெல்லாம் கிடையாது. 'கோச்சி' எனப்படும் வறுக்கப்பட்ட பரங்கி விதையைத் தின்றுவிட்டு வருவர்.

'என் வீட்டுக்காரர் ஏழெட்டு சீனப் பெரியவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்காரு' என்று மனைவி அங்கலாய்த்துக்கொண்டு இருப்பாள்.

அவள் கணவன் 'என்னடா, இந்த வருசம் எவனுமே என்னை வீட்டுக்கு அழைக்கல'னு எங்காவது திறந்திருக்கிற தமிழன் கோப்பிக் கடையில தலையில கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான்.

=========
மாகோ
சிங்கை