From mmanivannan@... Thu Jun 12 17:09:08 2003
Return-Path:
Received: (qmail 462 invoked from network); 13 Jun 2003 00:09:06 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2003 00:09:06 -0000
Received: from unknown (HELO n19.grp.scd.yahoo.com) (66.218.66.74) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2003 00:09:07 -0000
X-eGroups-Return: mmanivannan@...
Received: from [66.218.67.185] by n19.grp.scd.yahoo.com with NNFMP; 13 Jun 2003 00:09:07 -0000
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 25973 invoked from network); 12 Jun 2003 20:05:24 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2003 20:05:24 -0000
Received: from unknown (HELO n29.grp.scd.yahoo.com) (66.218.66.85) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2003 20:05:24 -0000
Received: from [66.218.67.175] by n29.grp.scd.yahoo.com with NNFMP; 12 Jun 2003 20:05:22 -0000
Date: Thu, 12 Jun 2003 20:05:19 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Fwd: Re: help please!. -- Unicode.
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6628
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "Mani M. Manivannan"
X-Originating-IP: 198.152.13.70
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-eGroups-Approved-By: jaybee555 via web; 13 Jun 2003 00:09:05 -0000
X-Yahoo-Message-Num: 24736

--- In agathiyar@yahoogroups.com, "Mugunth" wrote:
>[பி.கு. எதும் தவறான தகவல் சொல்லப்பட்டிருந்தால், சுட்டிகாட்டி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.]
>
> கணிணியில் ஒரு எழுத்தை(character) சேமிக்க, அதன் நினைவகம் 2 பைட்(8 பிட்) இடம்
> எடுத்துக்கொள்ளும். (பிட் என்பது 1 அல்லது 0 வை சேமிக்க தேவையான memory space -4 பிட்
> ஒரு பைட்).

4 பிட் = 1 நிப்பல் (nibble)
8 பிட் = 1 பைட் (byte)

> இந்த 8-பிட் அளவில் எழுத்துக்களை கணினியில் குறிப்பிடும் முறையில் ஒரு மிகப்பெரிய சிக்கல்.
> என்னவென்றால், இதில் மொத்தம் 256 வெவ்வேறு எழுத்துக்களை மட்டும் தான் ஒரே சமயத்தில்
> குறிப்பிடமுடியும். அந்த காலத்தில் ஆங்கிலம் இல்லாத மற்ற மொழிகள் கணினிக்குள் கொண்டுவருவது
> பற்றி நினைக்கவே இல்லை போலும். அதனால் 2 பைட் போதும் 256 characters க்கு மேல் எதுவும்
> கணினியில் பயன்படாது என்று நினைச்சிட்டாங்க போல.

அப்படி என்று இல்லை. தொடக்க காலத்தில் யுனிகோடு போன்ற அண்டா எழுத்துருக்களை எளிதில்
கையாளும் அளவுக்கு நினைவகமும் (memory) இயக்க ஆற்றலும் (processing power) பெரும்பாலான கணி
னிகளுக்கு இல்லை. இப்போதும், தனிமொழிக்குறியீடுகளோடு ஒப்பிடும்போது யூனிகோடு ஆவணங்கள்
குறைந்தது இருமடங்காக ஊதிப் பெருத்துப் பருத்து விடும். தமிழ் யூனிகோடு ஆவணங்கள் விம்மிப் புடைத்துப்
பெருத்து விடும். இவையெல்லாம் தமிழ் யூனிகோடு உருவாக்கும் சமயத்தில் யாரும் கண்டு கொள்ளவி
ல்லை. அவர்கள் நோக்கம் வேறு.

>[*** Internet == இணையம் என்ற வார்த்தையை
> வகுத்தவர் நம் ஜேபி ஐயா என்பதையும் இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்***]

ஒரு திருத்தம். இணையம் என்ற சொல் தமிழ்.நெட்டில் மலேசியத் தமிழர் கோ என்பவரால் உருவாக்கப் பட்ட
சொல். அறிஞர் ஜெயபாரதி world wide web என்ற சொல்லுக்கு வைய விரிவு வலை என்ற சொல்லை
உருவாக்கினார்.

> என்று அழைக்கப்பட்ட
> தமிழ் மடற்குழுக்களின் தாய்குழு Tamil.net தான். Tamil.net ஐ தொடர்ந்து நடத்தி வரும்
> மதிப்பிற்குறிய பாலாபிள்ளைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

அதே போல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துக்கும் நன்றி கூறவேண்டும். அவர்கள் முதல் தமிழ் இணைய
மாநாட்டைத் தொடர்ந்து திரு. கோவிந்தசாமி, பேரா. ஹார்ட், பேரா. ஷிஃப்மன், பேரா. டான் டின்
வீ, போன்றோரையும், இந்தியாவில் கணினித் தமிழில் ஈடுபட்டிருந்த பலரையும் இணைத்து உருவாக்கிய
மடலாடற்குழுவைத்தான் பின்னர் தமிழ்.நெட்டின் உவெப்மாஸ்டர்ஸ் மடலாடற்குழுவோடு இணைத்து, அதன் கருத்துப்
பரிமாற்றங்களை ஆவணப் படுத்தினார்கள். இன்றும், பழைய உரையாடல்கள் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின்
வலைத்தளத்தில்தான் குடியிருக்கின்றன. தகுதரத்தின் உறைவகமாகத் தமிழ்.நெட் அன்று முதல் இன்று வரை
தொடர்ந்து வருகிறது. அதற்கு நாம் மதிப்பிற்குரிய பாலா பிள்ளைக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.

> ஆனால் மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்கவில்லை. என்னடா இது வெளிநாட்டில் இருக்க தமிழனுங்க
> சேர்ந்து என்னமோ என்கோடிங்க் அறிவிக்கிறானுங்க.. தமிழ் நாட்டில் இருக்கவன் என்ன
> இளிச்சவாயானா...என்று வேட்டிய மடக்கிகட்டிகொண்டு.(Standards என்ற வார்த்தைக்கே அர்த்தம்
> தெரியாதவர்களாக). ,.. சில என்கோடிங்களை போட்டிக்கு(மற்றும் அவரவர் சொந்த agenda
> உடன்) உருவாக்கப்பட்டது...அப்பரம் எதிர்பார்த்த மாதிரியே .. தமிழ் கணினியுலகில் ..
> என்கோடிங் குழப்பம்....அடிதடி...

அப்படி ஒரேயடியாகக் கொச்சைப் படுத்தவும் முடியாது. தகுதர உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் பொதுவாக
இணையத் தொடர்பு பரவலாக இருந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள். இந்தியாவில் எழுத்துருக்களை வைத்துக் கணி
த்தமிழ் முன்னோடியாக இருந்த பலருக்கு தகுதரக் கருத்துரையாடல்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவி
ல்லை. அவர்கள் ஆங்கிலமும் தமிழும் இரண்டும் ஒரே எழுத்துருவில் இருக்க வேண்டிய தேவையில்லை எனக் கருதி
னார்கள். எழுத்து வடிவத்தின் அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அவர்களுக்குத்
தேவைப் பட்டது ஒரு மொழிக் குறியீடான தாம் மட்டும்தான். இருமொழிக் குறியீடான தாப் பற்றி அவர்களி
ல் பலருக்கு அக்கறையில்லை. தாம், தாப், மற்றும் தகுதரம் பற்றி ஐ.ஐ.டி. சென்னையின் வலைத்தளத்தில்
நடுநிலையில் நின்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தரப்படுத்தல் என்பதில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கும்,
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால்,
போட்டிக்காக மட்டும் தனிக்குறியீடுகளை உருவாக்கினார்கள் என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால்,
சென்னையில் '99இல் நடந்த மாநாட்டின் முடிவில் தகுதரத்துக்கு இணையான தான்ஸ்கி என்ற குறியீட்டைத் தான்
பரிந்துரைத்தார்கள். தான்ஸ்கி எப்படி தாப் ஆயிற்று அதில் ஏன் வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு சிலர்
கருத்துகள் மட்டுமே மேலோங்கின என்பதெல்லாம் மிகவும் சிக்கலான செய்திகள். இந்த மூட்டையை முழுக்க
முழுக்கத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேல் மட்டும் ஏற்றி விட முடியாது.

> என்ன குழப்பம் இருந்தாலும் தமிழர்கள் அன்றாட தேவைகளுக்கு(மின் அஞ்சல், மடலாடல்கள் உட்பட..)
> பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டிருப்பது TSCIIயை தான் என்பதை அனைவரும் (அந்த குழப்பங்களை
> உருவாக்கியோரும்) ஒத்துகொள்வர்.

அதே நேரத்தில் தற்காலத்தில் தமிழ்நாடு அரசு ஆவணங்களும், பல தமிழ்நாட்டு வலைத்தளங்களும் தாம் குறி
யீட்டைப் புழங்கத் தொடங்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும். தாம்-தகுதர வேறுபாட்டில் சிக்காமல், யூனி
கோடு வரும் என்ற எதிர்பார்ப்பில் தகுதரத்தைப் பரப்புவதில் தகுதரக் குழுவினர் அக்கறை காட்டவில்லை.

> தமிழர்கள் யூனிகோடை சீக்கிரம் தழுவுவது தமிழ் கணினி வளர்ச்சிக்கு நல்லது. யூனிகோட் உலகில்
> என்கோடிங்க் குழப்பம் இருக்காது - ஆனால் சில தமிழர்(வில்லாதி வில்லர்களப்பா நம்ம ஆட்கள்),
> தற்போது உள்ள யூனிகோட் தமிழ் பகுதி சரியில்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. யூனிகோட்
> தமிழ்பகுதியை மாற்றி அமைக்கவேண்டும் என்று மீண்டும் ஒரு என்கோடிங் குழப்பத்திற்கு வழி வகுக்க
> முயற்சி செய்வதாக தெரிகிறது.

தமிழ் யூனிகோடு குறியீட்டு முறையில் சீர்கேடுகள் உள்ளன என்பதைப் பலர் உணர்கிறோம். யூனி
கோடு அமைப்பு மாற்றத்துக்கு இணங்கவில்லை என்பதாலும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் யூனிகோடு முறையை
மாற்ற முடியாது என்று பெருநிறுவனங்கள் சொல்லியிருப்பதாலும், தமிழ் யூனிகோடு குறியீட்டு முறையில்
எவ்வளவு சொத்தையிருந்தாலும், தலைவிதி என்று ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான். ஆனால், இன்றைய தமிழ் யூனி
கோடு குறியீட்டு முறையை எதிர்ப்பவர்களை வில்லாதி வில்லர்கள் என்று மட்டம் தட்டி விட முடியாது. கடந்த
பதினைந்து ஆண்டுகளாக ஏனைய்யா தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று மட்டும்தான் வேதனைப்பட வேண்டும்.

> யூனிகோட் உதவியுடன் தமிழ் கணினி வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் எனபது உறுதி.

பார்க்கலாம். யூனிகோடு பிளவுபட்டிருக்கும் குறியீட்டு முறைகளை ஒருங்கிணைத்து எல்லா இயக்குதளங்களிலும் தமி
ழ் எழுத்துகளை அமைக்கத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால், செய்ய வேண்டிய பல வேலைகள்
காத்துக் கொண்டிருக்கின்றன. இனிமேலாவது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் கொள்ளாமல், எல்லோருமே ஒரே
திசையில் நடப்பவர்கள்தாம் என்று உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கெது வேண்டும்?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்