From arull@... Sun Jun 15 02:52:12 2003
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 84180 invoked from network); 15 Jun 2003 09:52:11 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2003 09:52:11 -0000
Received: from unknown (HELO ipop1.tm.net.my) (202.188.95.15) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2003 09:52:11 -0000
Received: from tm.net.my (bth-203-25.tm.net.my [219.92.203.25]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with ESMTP id <0HGI00IIBOQXK9@...> for agathiyar@yahoogroups.com; Sun, 15 Jun 2003 17:52:10 +0800 (SGT)
Date: Sun, 15 Jun 2003 17:40:39 +0800
Subject: (no subject)
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3EEC3F17.66BD9CFD@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Profile: sathiv
X-Yahoo-Message-Num: 24764

திருச்சிற்றம்பலம்

தந்தையர்தின வாழ்த்துக்கள்

ஓதுவரர்
பினாங்கு.

திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர் தேவாரம்

பண் : 2-ஆம்
திருமுறை
கொல்லி
24.திருக்கழுமலம்

3052.
மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.1

3053.
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவலொடும் பெருந்தகை யிருந்ததே. 2

3054.
தொண்டணை செய்தொழிற் றுயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.3

3055.
அயர்வுளோ மென்றுநீ யசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.4

3056.
அடைவிலோ மென்றுநீ யயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.5

3057.
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குற் றிருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.6

3058.
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.7

3059.
அரக்கனா ரருவரை யெடத்தவ னலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளரள் செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே .8

3060.
நெடியவன் பிரமனு நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி யாஅழ லுருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.9

3061.
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.10

3062.
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.11

சுவாமி பெயர் : தேவி:
பிரமபுரீசுவரர் திருநிலைநாயகி
தோணியப்பர்
திருச்சிற்றம்பலம்