From jaybee@... Mon Jun 16 04:18:10 2003
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 61162 invoked from network); 16 Jun 2003 11:18:09 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2003 11:18:09 -0000
Received: from unknown (HELO ipop3.tm.net.my) (202.188.0.170) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2003 11:18:09 -0000
Received: from tmnet (sp-103-70.tm.net.my [210.186.103.70]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HGK001KXNE6Z8@...> for agathiyar@yahoogroups.com; Mon, 16 Jun 2003 19:18:08 +0800 (SGT)
Date: Mon, 16 Jun 2003 19:18:02 +0800
Subject: interesting 'innilai'
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20030616191802.0192c4bc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 24786
அன்பர்களே,
பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது,
இன்னிலை என்னும் நூல்.
இதனை இயற்றியவர் பொய்கையார் என்னும் புலவர்.
இந்நூலில் நான்கு பகுதிகள் இருக்கின்றன- அறப்பால்,
பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் ஆகியவை. பாரதம்
பாடிய பெருந்தேவனார், இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்துப்
பாடியுள்ளார்.
விஷ்ணு பரமாகிய பாரதத்தைத் தமிழில் பாடியவர்.
ஆனால் அவர் சிவனையே பெருந்தேவனாகஅந்த வாழ்த்தில்
வழுத்தியுள்ளார்.
முருகனைத் தந்தவர்; விரிசடையை உடைய பெருமான்;
வேல் ஆயுதத்தையுடைய எமனைச் சினந்து கொன்றவர்; கொன்றை
மாலை புனைந்த சிவபெருமான் தமது இடப்பாகத்தில் உமை
அமர்ந்திருப்ப, அதனால் துணையாக எல்லா உலகங்களும் பெருகி
விளங்குகின்றன.
இந்த நூலில் எத்தனை பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தன
என்பது தெரியவில்லை. இப்போது உள்ள வடிவில் அது
நானூற்று ஐந்து பாடல்களைக் கொண்டிருக்கிறது.
படிக்கும்போதும், படித்தபின் அதனைக் கடைப்பிடிக்கும்போதும்
அது இனியநிலையைக் கொடுப்பதால் அதற்கு 'இன்னிலை' என்ற பெயர்
ஏற்பட்டது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
இந்நூலில் கவனத்தை ஈர்க்கும் சில செய்திகள் உள்ளன.
அவற்றில் ஒன்று:
அன்றமரில் அறிவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகை தேர்மின் - பொன்றா
அறமறிந்தோன் கண்ட அறம்பொருள் கேட்டு அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு
முற்காலத்தில் பாரதப்போரில் கீதையாகிய அறவுரையை
கேட்ட தீய பேய், உயர்ந்து, ஆன்றோர் அவையைச் சேர்ந்த
வகையை ஆராய்வீர். ஆதலால், அறிந்தோர் கூறிய அற நூலினையும்
பொருள் நூலினையும் நீங்கள் கேட்டு பாவங்களை நீக்குங்கள்.
பொருத்தமான நன்னெறி இதுதான்.