From mugunth@... Mon Jun 16 09:06:20 2003
Return-Path:
X-Sender: mugunth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 19143 invoked from network); 16 Jun 2003 16:06:18 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2003 16:06:18 -0000
Received: from unknown (HELO pride.valuablehost.net) (66.227.34.106) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2003 16:06:17 -0000
Received: (qmail 24256 invoked from network); 16 Jun 2003 16:06:14 -0000
Received: from unknown (HELO thamizha.com) (210.186.194.129) by pride.valuablehost.com with SMTP; 16 Jun 2003 16:06:14 -0000
Message-ID: <3EEDEAF1.8040706@...>
Date: Tue, 17 Jun 2003 00:06:09 +0800
User-Agent: Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.0; ta-MY; rv:1.3b) Gecko/20030210
X-Accept-Language: ta-my, ta
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Regarding Tamil Unicode..
References: <1055520043.393.27514.m12@yahoogroups.com> <3EED83F0.000004.22939@ibm>
In-Reply-To: <3EED83F0.000004.22939@ibm>
Content-Type: text/plain; charset=ISO-8859-1; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Mugunth
X-Yahoo-Group-Post: member; u=135399300
X-Yahoo-Message-Num: 24795

Murugapandian Barathee ????????:
>
> அன்பிற்கினிய நண்பர் முகுந்தராஜ்,
>
> யுனிகோட் முறை பற்றி மிக கோர்வையாக எழுதியிருந்தீர்கள். நன்றி. நண்பர் மணிவண்ணன் கூறுவது போல்,
> தற்போதுள்ள தமிழ் யுனிகோட் முறையில் என்ன பிரச்சினை இருக்கிறது? யுனிகோட் முறைக்குத் தாவலாம் என்று
> முடிவில் இருக்கும்போது, இத்தகைய தகவல்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கொஞ்சம் தெளிவாகக்
> கூறமுடியுமா?
>
அன்பின் முருகபாண்டியன்,
தற்போதைக்கு எனக்கு எந்த சிக்கலும் தெரியவில்லை என்பதே உண்மை!! இது என் அறியாமையினால் கூட
இருக்கலாம்.
ஆனால் மின்னஞ்சல், இனையப்பக்கங்கள், என் மடிக்கணினியின் கோப்புகள், அடைவுகள்(folders)
பெயர்கள் கூட யூனிகோட் கொண்டு தமிழ் பெயரிட்டு வருகிறேன். தற்போது தரவுத்தளங்களில் யூனிகோட்
எழுத்துக்களை உள்ளிடும் சோதனைகளிலும் இறங்கியிருக்கிறேன்.
தமிழா! உலாவியை முழுக்க யூனிகோட் எழுத்துக்கள் கொண்டுதான் தயாரித்துள்ளோம்.
இதுவரை எனக்கு பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

திரு மணிவண்ணன் அவர் மடலில் குறிப்பிட்டது போல், தமிழ் யூனிகோட்டில் உள்ள பிரச்சனைகளை
பட்டியலிட்டு சொன்னால் உதவியாக இருக்கும்.
(இந்த குழுவில் எதற்கு பட்டியலிட வேண்டும் இதற்கென்று இருக்கும் டெக்னிக்லல் லிஸ்டில் சொல்கிறேன் என்று
எல்லாம் சொல்லாதீர். தொழில் நுட்பத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் பக்குவம் வந்துகொண்டிருக்கிறது.
மேலும் கடந்த காலத்தில் திறைக்குமறைவில் மூடி மூடி சில காரியங்களை செய்து தமிழ் கணினி
வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியாகிவிட்டார்கள் சில புன்னியவான்கள். அது போல் இல்லாமல் எப்போதும்
வெளிப்படையாக பேசுவோம் செய்வோம் இனி வருங்காலங்களில்.)

திரு மணிவண்ணன் குறிப்பிட்டது போல் ஏகப்பட்ட சொத்தைகள் யூனிகோடில் இருக்கலாம் ஆனால் அதுதான்
இனி தமிழர்கள் பயன்படுத்த போகும் எழுத்துக்குறியீடு. எந்த கொம்பனாலும் மாத்த முடியாது.
(மாற்றுவதற்கு நானே விடமாட்டேன்.)
மேலும் கணினியுலகில் ஒரு வகையில் சொத்தையாக தெரிவது இன்னொரு கோனத்தில் பார்க்கும் நல்லதாக
படும். அதே போல் ஒருவிதத்தில் நன்மையாக தெரிவது இன்னொரு விதத்தில் சொத்தையாக படும்.

என் 6 வருட கணினித்துறை அனுபவத்தில், கணினியில் எதையும் சாதிக்கலாம். எந்த தொழில்நுட்பப்
பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது.

மணிதர்கள் Ego வால் உருவாகும் பிரச்சனைக்குதான் தீர்வே கிடையாது.


>
>
> கடந்த நாட்களின் உரையாடல்களிலிருந்து....
>
> மதுரைத் திட்ட நண்பர்கள் கூட யுனிகோட் முறைக்கு மாறுவதற்கான சோதனைகளைச் செய்துள்ளனர். ஆனால்,
> எக்கச்சக்கமாக இருக்கும் கோப்பின் அளவைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றுநினைக்கிறேன்.
>

கண்டிப்பாக கோப்பின் அளவு பெரியதாகத்தான் இருக்கும் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது ஒரு
பிரச்சனையே இல்லை இந்த காலத்தில். வட்டுப்பரப்பு என்பது பிரச்சனையே இல்லையே. இப்போது ஒரு
சாதரண கணினி வாங்கினால் கூட 20 GB வட்டுப்பரப்பு கிடைக்கிறதே!!!


அன்புடன்,
முகுந்தராஜ்


>
>
> மேலும்,
>
> திறந்தவகை எழுத்துருக்கள் (opentype fonts) தமிழுக்கு உருவாக்குவதில் ஏதேனும் புதிய செய்திகள்
> இருக்கின்றனவா?
>
>
>
> நன்றிகள்!
>
> அன்புடன்,
>
> பாண்டியன்,
>
> புதுக்கோட்டை.
>
>