From ashok tm@... Mon Aug 04 03:53:54 2003
Return-Path:
Received: (qmail 70683 invoked from network); 4 Aug 2003 10:53:54 -0000
Received: from unknown (66.218.66.217) by m15.grp.scd.yahoo.com with QMQP; 4 Aug 2003 10:53:54 -0000
Received: from unknown (HELO n15.grp.scd.yahoo.com) (66.218.66.70) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 4 Aug 2003 10:53:53 -0000
X-eGroups-Return: ashok tm@...
Received: from [66.218.67.188] by n15.grp.scd.yahoo.com with NNFMP; 04 Aug 2003 10:53:53 -0000
X-Sender: ashok tm@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 3358 invoked from network); 4 Aug 2003 10:14:59 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 4 Aug 2003 10:14:59 -0000
Received: from unknown (HELO n32.grp.scd.yahoo.com) (66.218.66.100) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 4 Aug 2003 10:15:02 -0000
Received: from [66.218.67.171] by n32.grp.scd.yahoo.com with NNFMP; 04 Aug 2003 10:15:02 -0000
Date: Mon, 04 Aug 2003 10:15:01 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: கட்டடக் கலை: 5
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1262
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "Ashok"
X-Originating-IP: 138.89.155.176
X-Yahoo-Group-Post: member; u=37367929
X-Yahoo-Profile: ashok thangamuthu
X-eGroups-Approved-By: jaybee555 via web; 04 Aug 2003 10:53:52 -0000
X-Yahoo-Message-Num: 25860

அன்பர்களுக்கு வணக்கம்,

பாறைக் கோயில்கள்
கி.பி.7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் மகேந்திர வர்மன்
என்னும் பல்லவ அரசன் அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி.பி.600-630 முதல் ஆட்சி செய்தான்.
இவன் காலத்தில் திருநாவக்கரசு சுவாமிகள் இருந்தார். இவ்வரசன் கோயிற் கட்டட அமைப்பில் புதிய
முறையை ஏற்படுத்தினான். பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான குகைக் கோயில்களை அமைந்தான்.
பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழிகையையும் (கருப்பக்
கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான்.

கற்றளிகள்
கி.பி.7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன்
காலத்தில் கற்றளிகள் அமைக்கும் முறை ஏற்பட்டது. கற்ற்ளி என்றால் கற்கோயில் என்பது பொருள்.
கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டடங்களூக்குக் கற்றளி என்பது
பெயர். சுண்ணம் சேர்காமலே இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன.
மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும், காஞ்சிபுரத்தில் கயிலாசநாதர் கோயில்
என்று இப்போது பெயர் வழங்கப்படும் இராஜசிம்மோச்சரம் என்னும் கற்றளியும், பனைமலை என்னும்
ஊரிலுள்ள கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக் கற்றளிகள் 1200
ஆண்டுகளாகியும், அவை இப்போதும் உள்ளன.

நன்றி
அன்புடன்
அசோக் தங்கமுத்து