From jaybee@... Tue Sep 16 00:59:44 2003
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 39248 invoked from network); 16 Sep 2003 07:59:44 -0000
Received: from unknown (66.218.66.172) by m16.grp.scd.yahoo.com with QMQP; 16 Sep 2003 07:59:44 -0000
Received: from unknown (HELO ipop4.tm.net.my) (202.188.0.248) by mta4.grp.scd.yahoo.com with SMTP; 16 Sep 2003 07:59:39 -0000
Received: from jaybee (pjc-72-119.tm.net.my [202.188.72.119]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HLA002WDRFJG7@...> for agathiyar@yahoogroups.com; Tue, 16 Sep 2003 15:57:22 +0800 (SGT)
Date: Tue, 16 Sep 2003 15:56:49 +0000
Subject: Balaji's question - Regarding rAmappaiyyan ammAnai -#4
In-reply-to: <3.0.3.32.20030915214013.00b6edb0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: balaji
Message-id: <3.0.3.32.20030916155649.00be4928@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20030915161149.00c80748@...> <3.0.3.32.20030914225817.00b9b228@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 26612


அன்பர்களே,

இந்த 'இராமப்பய்யன் அம்மானை' என்னும் நூலைப்பற்றி
எழுத நேரிட்டதே பாலாஜி ஸ்ரீநிவாஸ் கேட்டதொரு கேள்விதான்.
அவர் கேட்டதற்கு விவரம் அம்மானையின் இந்தப் பகுதியில்
இருக்கிறது.
கவனமாகப் படிக்கவேண்டியது.

போகலூர் என்பது இராமநாதபுரம் நகருக்கு அருகில் இருக்கிறது.
இதன் காவல் தலைமையில் இருந்த குமாரனையும் அவனுடைய
மகனாகிய அழகனையும் இராமப்பய்யனின் ஆட்கள் பிடித்துவிட்டார்கள்.

இராமப்பய்யனிடம் அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

"என்னோடே நீயும் எதிர்த்துப்போர் செய்வாயாடா?"
என்று சொல்லி அய்யன் இருகண்ணும் நெருப்பென்ன
காமுட்டி சாத்தனைக் கடுக அழைக்கச்சொன்னான்.
கட்டி அடித்தார்கள் கனகோபம்கொண்டெழுந்து.

கோபவெறிமேலிட்ட இராமப்பய்யனின் ஆணையைமேற்கொண்டு
அவர்களை முதலில் கட்டி அடித்தார்கள்

இந்தக் கட்டம்தான் பாலாஜி கேட்ட கேள்விக்குச் சம்பந்தமானது.

தச்சனைக் கூட்டிவரச்செய்தான் இராமப்பய்யன்.

அழகனையும் குமாரனையும் குப்புறக்கிடத்தி முதுகுத்தோலைச்
செதுக்கி உரிக்கச்சொன்னான்.
அவ்வாறே தோலை ஆசாரி உரித்தான். பழக்கம் இல்லாத ஆசாரி
போலும். மயங்கிவிழுந்துவிட்டான்.

அதன் பின்னர் ஒவ்வொரு கணுக்கால், முழங்கால், இடுப்பு,
மணிக்கட்டு, முழங்கை, தோள், முதலியவற்றை முட்டு முட்டாக எலும்பை
வெட்டச் சொன்னான்.

அவ்வாறே ஆசாரி வெட்டினான்.

வெட்டிய எலும்பையெல்லாம் கூடையில் வாரிப்போடச்சொன்னார்.
அழகன் குமாரன் ஆகியோரின் மனைவிமாரை வரச்சொன்னான்.

அவர்கள் தலைகளில் அந்த எலும்புகள் கொண்ட கூடைகளை
ஏற்றி வைத்து பறையடித்துக்கொண்டு, இராமப்பயன் தன்னுடைய
படைவீட்டைச் சுற்றி வரச்செய்தான். படைத்தலைவர்களையெல்லாம்
பார்க்கச்சொல்லி இராமப்பய்யன் உத்தரவிட்டான்.

தச்சனை அழைக்கச்சொன்னான் தார்வேந்தன் ராமய்யனும்.
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்

மதியனழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புறவே கிடத்தி கூறி மன்னர் பார்த்து இறுக்கி
முதுகுதோல் தன்னை முரமுரவே செதுக்கச்சொன்னான்
அந்தப் படியே ஆனதொரு ஆசாரி
தோலையறுத்தான் துடித்துத் திடித்துவிழ
செதுக்கினான் ஆசாரி தியங்கியங்கேதான் விழுந்தான்
முட்டுமுட்டாக முழு எலும்பை வாங்கச்சொன்னான்
அந்தப்படியே ஆனதொரு ஆசாரி
முட்டு முட்டாக முழு எலும்பைத் தான் தரித்தான்
தரிச்ச உடலையெல்லாம் தான் வாரிக்கூடையிலே
மதியான் அழகன் தேவி மன்னன் குமாரன் தேவி
கூட்டிவரச்சொன்னான் கோலாகல ராமய்யன்
கூட்டிவந்துவிட்டார்கள் கோலாகலன் கொலுவில்
"இருவர் தலையிலேயும் எடுத்துவை", என்றான் கூடைதனை
பாளையத்தைச் சுற்றி பறையடித்துவரச்சொன்னான் காண்
படைத்தலைவரைப் பார்த்துப், "பாரும்" என்றானே வீரன்.


ஆரம்பத்தில் இந்தியா வந்த மேற்கத்தியர்கள் இந்தியப்
பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றனர். அவ்வாறு
உருவாகியவர்களை Eurasian என்று சொல்வார்கள். தமிழில்
'சட்டைக்காரர்' என்று சொல்வார்கள்.

சட்டைக்காரர்களிடம் அழகன் குமாரன் மனைவியரை விட்டு
கற்பழிக்கவிட்டான். ஆனால் அவர்களோஉயிரை விட்டனர். அவர்களைக்
கௌரவமாக அடக்கம் செய்வித்தான் இராமப்பய்யன்.

மதியாரழகன் மனையாட்டி தன்னையுந்தான்
குமாரன் அழகனுடைய தேவியைக் கூட்டிவந்து
சட்டக்காரரைவிட்டுக் கையைப் பிடிக்கச்சொன்னான்
மற்றவன் பிடிப்பானோவென்று பார்த்தந்த மென்கொடியாள்
விடுத்தாளவருயிரை விண்ணுலகம் போய்ச்சேர்ந்தாள்
மன்னன் புலிராமய்யற்கு வந்து சொன்னானந்நேரம்
அவ்வார்த்தை கேட்டு அய்யனும்தான் அப்போது
வாய்த்ததொரு பெண்கொடியை மனமகிழ்ந்து கொண்டாடி
பச்சைவடங்கொடுத்து பாங்குடனே அடக்கச்சொன்னான்
அந்தப்படியே ஆனதொரு பெண்கொடியை
எடுத்தடக்கச் சொன்னார்கள் எல்லோரும்கொண்டாட
அந்நேரந்தன்னில் அலைகதிரோன் போய்மறைந்தான்.

பார்த்துக்கொண்டீர்களா, பாலாஜி?

அன்புடன்

ஜெயபாரதி

==================================