From mugunth@... Fri Sep 26 23:48:26 2003
Return-Path: X-Sender: mugunth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 78649 invoked from network); 27 Sep 2003 06:48:26 -0000
Received: from unknown (66.218.66.218) by m18.grp.scd.yahoo.com with QMQP; 27 Sep 2003 06:48:26 -0000
Received: from unknown (HELO pride.valuablehost.net) (66.227.34.106) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 27 Sep 2003 06:48:26 -0000
Received: (qmail 2802 invoked from network); 27 Sep 2003 06:48:17 -0000
Received: from unknown (HELO thamizha.com) (202.151.196.4) by gb.isykal.com with SMTP; 27 Sep 2003 06:48:17 -0000
Message-ID: <3F7532D3.9080208@...>
Date: Sat, 27 Sep 2003 14:48:51 +0800
User-Agent: Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.0; ta-MY; rv:1.4) Gecko/20030624
X-Accept-Language: ta-my, ta
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: An Appeal for sponsoring eKalappai Upgrade!
Content-Type: text/plain; charset=windows-1252; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Mugunth X-Yahoo-Group-Post: member; u=135399300
X-Yahoo-Message-Num: 26779
அன்புடையீர்,
தற்போது உள்ள எகலப்பையை செம்மைபடுத்தி யூனிகோட் வசதியுடன் அடுத்த பதிப்பு வெளியிட வேண்டும்
என்று நினைக்கிறேன்.
எகலப்பையை மேம்படுத்த மேலும் உள்ள காரணங்கள்:
1. தற்போது எ-கலப்பையை வியாபார பயன்பாட்டுக்கு பயன்படுத்துவோர், கீமேன்
நிறுவனத்திடம்(tavultesoft) லைசன்ஸ் வாங்கவேண்டும். அது கிட்டதட்ட 60 அமெரிக்க டாலர் ஒரு
பயனர்க்கு.
2. தற்போது எ-கலப்பை யூனிகோட் ட்ரைவர்கள் எதுவும் லைசன்ஸ் பெற்ற செயலியில் செய்யவில்லை.
அதனால் அதனை தற்போது எ-கலப்பையில் இனைத்து வெளியிடமுடியாது. அவற்றை செய்ய கீமேன்
டெவலப்பர் 6.0 லைசன்ஸ் வாங்கவேண்டும். என்னிடம் இருப்பது 5.0 லைசன்ஸ் தான்.
3. தற்போது எ-கலப்பையில் ஆவரங்கள் என்ற ஒரே எழுத்துரு மட்டும்தான் உள்ளது. தற்போது வந்துள்ள
திறந்த நிரல் இலவச யூனிகோட் எழுத்துருக்களையும்(கிட்டதட்ட 10 க்கு மேல்)யு சேர்த்து வெளியிட்டால்
பயனுள்ளதாக இருக்கும்.
4. தற்போது உள்ள எகலப்பையை மற்ற திறந்த நிரல் செயலிகள் செய்வோர், இனைத்து வெளியிட
முடியாது. இதன் லைசன்ஸ் அதனை அனுமதிக்காது. இதற்கான லைசன்ஸை கீமேன் நிறுவனத்திடம் இருந்து
வாங்கிவிட்டால் , யாரும் எந்த தடையும் இல்லாமல் எகலப்பையை பயன்படுத்தலாம்,மேலும் வேறு இலவச
செயலிகளிலும் இதனை இனைத்து வெளியிடலாம்
மேலேயுள்ள 4 விசயங்களில் 1 , 2 மற்றும் 4 ஐ செயல்படுத்த, பணம் செலவு செய்யவேண்டும்.
நான் கீமேன் நிறுவனத்திடம் கடந்த சில நாட்களாக பேசிகொண்டிருக்கிறேன். அவர்கள் கடைசியாக
கீமேன்6.0 வை கொண்டு புதிய எகலப்பையை முழு லைசன்ஸ்உடன் வெளியிட 1000 அமெரிக்க டாலர்
விலை சொல்கிறார்கள். அதற்கான quotationஐயும் அனுப்பியுள்ளனர்.
நான் இதனை தனியாக செலவு செய்வதைவிட மற்ற தமிழார்வலர்கள் உதவியையும் நாடலாம் என்று முடிவு
செய்துள்ளேன்.
இந்த திட்டத்திற்கு பொருள் உதவி செய்ய அகத்தியர்/தமிழுலகை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள்
முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு பொருள் உதவி செய்பவர்கள் பெயர்கள், புதிய எகலப்பையின் flash screen இலேயே
எழுத்தப்படும். ஒவ்வொரு முறை எகலப்பையை உபயோகிப்போர், இதற்கு யார் யாரெல்லாம் sponser
செய்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்வர்.
தற்போது ஏற்கணவே தமிழுலக/அகத்தியர் நன்பர்கள் சிலரிடம் இருந்து மொத்தம் 500 டாலர்
தொகைக்கு உத்தரவாதம் வந்துவிட்டது. இன்னும் 500 டாலர் தேவைபடுகிறது.
நீங்களும் புதிய எகலப்பை வெளியிட உதவ/sponser செய்ய விருப்பப்பட்டால் எனக்கு எழுதவும். நான்
தனி அஞ்சலில் எவ்வாறு பணம் அனுப்புவது போன்ற விபரங்களை தெரியப்படுத்துகிறேன்.