From jaybee@... Sat Sep 27 06:15:03 2003
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 44323 invoked from network); 27 Sep 2003 13:15:01 -0000
Received: from unknown (66.218.66.216) by m20.grp.scd.yahoo.com with QMQP; 27 Sep 2003 13:15:01 -0000
Received: from unknown (HELO ipop4.tm.net.my) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 Sep 2003 13:15:01 -0000
Received: from jaybee (pjc-72-6.tm.net.my [202.188.72.6]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 18 2002)) with SMTP id <0HLV0020WIXTDK@...> for agathiyar@yahoogroups.com; Sat, 27 Sep 2003 21:03:33 +0800 (SGT)
Date: Sat, 27 Sep 2003 21:02:45 +0000
Subject: Carver, Gandhi, and Groundnuts - #3
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20030927210245.00b30580@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 26786
அவ்வாறே ஒருநாள் ப்ராதக், உஷத் வேளைகளில் கார்வர்
தம் கல்லூரிக்கு வெளியில் உள்ள காட்டுக்குள் நடந்து சென்றார்.
அப்போது இறைவனுடன் மனம் கல்ந்து உறவாடி உரையாடினார்.
"இறைவா, இந்த உலகத்தை ஏன் படைத்தாய்?"
"இது மிகப்பெரிய கேள்வி. சிறியதாகக்கேள்."
"சரி. மனிதனை ஏன் படைத்தாய்?"
"இதுவும் பெரிய கேள்விதான். உன் அளவுக்கு ஏற்ற
கேள்வியாகக் கேள்."
"அப்படியானால் சரி. வேர்க்கடலையை ஏன் படைத்தாய்?"
"அப்படி வா வழிக்கு. சரி. என்னைப் பின்தொடர்ந்து
ஆராய்ச்சிக்கூடத்து வா".
ஆய்வுக்கூடத்துக்குள் கடவுளைப் பின்தொடர்ந்து சென்ற
கார்வர், கதை உட்புறமாக அடைத்துக்கொண்டார்.
மூன்று நாட்கள் கழித்தே வெளியில் வந்தார்.
அவ்வாறு வெளியில் வரும்போது வேர்க்கடலையிலிருந்து
முன்னூற்றுக்கும் மேலான பொருள்களைத் தயாரிக்கும் விதத்தைக்
கண்டுபிடித்திருந்தார். எண்ணெய், வெண்ணெய், பால், பலவகை
உணவுப்பொருட்கள், வார்னிஷ், இன்னும் பல.வேர்க்கடலை
தோலிலிருந்து செயற்கைப் பளிங்குக்கல்கூட செய்திருந்தார்.
இது ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்தியது.
புக்கர் முதலிய பெரிய மனிதர்களை அழைத்து ஒரு
பெரிய விருந்து ஒன்றைப் படைத்தார். அதில் சாஸேஜ் முதல்
பேக்கன், ஆட்டுக்கால் ஸூப், ஸ்டீக், ரொட்டி என்று பல
அயிட்டங்கள். ஆனால் அவை அத்தனையுமே வேர்க்கடலையிலிருந்து
செய்யப்பட்டவைதாம்.
வேர்க்கடலக்கு உலகமுழுவதும் தனி மவுசு ஏற்பட்டது.
மகாத்மா காந்திக்கு ஒருமுரை கார்வர் கடிதம் எழுதினார்.
அடிக்கடி உபவாசத்தையும் பத்தியத்தையும் கடைப்பிடிக்கும் காந்திக்கு
ஏற்றதொரு சத்து நிறைந்த உணவு வேர்க்கடலை என்று ஆலோசனை
கூறியிருந்தார்.
அதனை அப்படியே கடைப்பிடித்த மஹாத்மா கந்தி, தம்முடைய
உணவாக வேர்க்கடலை, வேப்பிலைச்சட்டினி, ஆட்டுப்பால்,
ஆட்டுத்தயிர் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டார்.