From jaybee@t... Sun Feb 29 04:51:53 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 76001 invoked from network); 29 Feb 2004 12:51:52 -0000
Received: from unknown (66.218.66.167)by m11.grp.scd.yahoo.com with QMQP; 29 Feb 2004 12:51:52 -0000
Received: from unknown (HELO ipop3.tm.net.my) (202.188.0.162)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 29 Feb 2004 12:51:51 -0000
Received: from av4 ([172.20.0.21])by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HTU006BNJQEIR@i...> foragathiyar@yahoogroups.com; Sun, 29 Feb 2004 20:51:50 +0800 (SGT)
Received: from tmnet ([210.186.103.84])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 182002)) with SMTP id <0HTU0086KJQ8PY@i...> foragathiyar@yahoogroups.com; Sun, 29 Feb 2004 20:51:50 +0800 (SGT)
Date: Sun, 29 Feb 2004 20:51:34 +0800
In-reply-to: <3.0.3.32.20040229080651.01334f6c@p...>
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040229205134.00e27648@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <403FD996.000001.90533@U3M8U5>
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Continued#1-Gokul's letter - Re: [agathiyar] Re: Detective work inArcheology - own experience - #8
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 08:06 AM 2/29/04 +0800, you wrote:
>
>அன்புள்ள கோகுல்,
>
>At 03:53 PM 2/28/04 +0000, you wrote:
>>அன்புள்ள ஜேபி ஐயா அவர்களுக்கு
>>
>>இந்த கட்டுரைத்தொடரை சற்று தாமதமாகத்தான் படிக்க
>முடிந்தது.
>>மிகப் பயனுள்ள சுவாரஸ்யமான கட்டுரை.கல்வெட்டுகளை படிக்க
>>தாங்கள் எடுத்த முயற்சிகள்
>அசாத்தியமானவை. Work of sheer
>>dedication and interest / obsession.
>>600 கல்வெட்டுக்களை படியெடுத்து வைத்திருக்கிறீர்களா ?
>>அசாத்தியமான முயற்சி.
>
>
> ஆம். ஆனால் அதெற்கெல்லாம் உதவிகள் இருந்திருந்தால்
>எத்தனையோ வசதியாக இன்னும் நிறையச் செய்திருக்கலாம்.
> நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போதே எங்கள் பக்கத்து
>ஆட்களுக்கு மிகவும் உதவியிருக்கிறேன். அவர்கள் எனக்கு வேண்டியவர்களாக
>இருக்கவேண்டும் என்பதில்லை. அந்த உதவிகள் எனக்கு ஓரளவுக்குச்
>செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தன. ஆகவே அங்காங்கு செல்லும்போது
>யாராவது துணைக்கு வந்து வழி காட்டுவார்கள்.
> எங்கு போனாலும் சைக்கிள்தான். பல இடங்களில் சைக்கிளைத்
>தள்ளிக்கொண்டு செல்லவேண்டும்.
> ஒற்றையடிப் பாதையிருந்தால் பெரிய வசதி:-)
> பெரும்பாலும் இருப்பதில்லை.
> ஒரு Singapore Airlines Air-bag-இல் கல்வெட்டுப் பதிவுப்புத்தகம்.
>பிரிட்டா பிஸ்கட். ஃபிலாஸ்க்கில் காப்பி, துண்டு, செங்காவிச்சாயம், பிரஷ்
>முதலியவைதான்.
> மதிய உணவே அந்த பிரிட்டாதான்.
> பெரும்பாலும் போகும் இடங்களில் இருப்பவர்கள் காப்பி போன்றவை
>கொடுப்பார்கள்.
> ஹார்லிக்ஸ்கூட கொடுத்திருக்கிறார்கள்.
> அவர்களுக்கு இருந்த பரிவும் பாசமும் ஈவும் இரக்கமும் பண்பும்
>இப்போதெல்லாம் காணக்கிடைப்பதில்லை.
>
> பூஜையைச் செய்துவிட்டு தொடர்கிறேன்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி


வயல் வரப்புகளில் சைக்கிள் ஓட்டுவது தனி அலாதிதான். வண்டிப்
பாதையின் தடத்தில் நடுவில் பார்த்து ஓட்டவேண்டும். 'இட்டரை' எனப்
படும் பாதைகள் இரு வேலிகளின் நடுவே செல்லும் ஒடுக்கமான பாதை
வகையைச் சேர்ந்தவை.
இதில் செல்லும்போதுதான் அசாத்திய ஜாக்கிரதை தேவை.
ஏனெனில் திடீரென்று எதிர்த்தாற்போல ஏதாவது மாடுகள் வந்துவிடும்.
அதுவும் 'குத்துக்காளை' என்ற வகையாக இருந்தால் சிரமம்தான்.
சில மாடுகளுக்குக் குத்தப் பழக்கிவைத்திருப்பார்கள். அல்லது
இயற்கையிலேயே மிரட்சி சுபாவம் கொண்டவையாக இருக்கும்.
வேலிகள் 'கிலுவை' எனப்படும் முட்செடிகளால் ஆனவையாக இருக்கும்.
அவற்றுடன் கள்ளிச்செடி, கற்றாழையும் இருக்கும். மிகவும் பக்காவாக
வேலிகளைப் போட்டிருப்பார்கள். தாவிச்செல்லவும் முடியாது. ஒதுங்கவும்
முடியாது. பிரித்துக்கொண்டு நுழையவும் முடியாது. எக்கசக்கமாக
இருக்கும். மாலைவேளைகளில் என்றால் 'ஊய்க்காலி' மாடுகள்
எனப்படும் 'ஊர்க்காலி' வரும். கால்நடைகளைக் 'காலி' என்றும்
அழைக்கும் வழக்கம் உண்டு. 'கன்றுகாலி' என்று சொல்கிறோமல்லவா?
இட்டரைப் பாதையை அடைத்துக்கொண்டு பெருங்கூட்டமாக வரும்.
இதுவும் ஒரு எக்கச்சக்க நிலைதான்.
புதைந்துபோயிருக்கும் கற்களைப் புரட்டும்போது பாம்பு,
தேள், பூரான் என்று கந்தர் ஷஷ்டி கவசத்தில் லிஸ்ட் போட்டுள்ள
விஷ ஜந்துக்கள் வெளிவரும்.
அருவியூர் அகழ்வின்போது, 'அஞ்சலையாண்டான்' என்ற
தடாகத்திற்குப் போகும் வழியில் ஒரு பெரிய கல்லைப் புரட்டும்போது
அதனடியிலிருந்து மிகப்பெரிய நட்டுவாக்காளி வந்தது. கிட்டத்தட்ட
ஏழெட்டு அங்குல நீளத்துக்கும் அதிகம். அவற்றையெல்லாம் பார்ப்பது
அரிது என்றார்கள். அது இருக்கும் இடத்தில் ஏதாவது புதையல்
இருக்கும் என்றார்கள்.
அந்தக் கல்லைப் புரட்டிப்பார்த்தபின்னர்அது ஒரு கல்வெட்டு
என்றும் 'அருணைகண்டவிண்ணகர்' என்னும் விஷ்ணு கோயிலின்
நிலத்திற்கு அடையாளக்கல் என்றும் தெரிந்தது. சிவபுரி என்னும்
கோயிலில் ஒரு கல்வெட்டில் 'அருணைகண்ட விண்ணகரெம்பெருமானார்'
என்ற பெயர் வருகிறது.
அந்தக் கோயில் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. ஆனால்
அக்கோயிலின் நிலத்துக்குரிய அடையாளக்கல் கிடைத்தது. அந்த
இடத்திற்கும் சில கீலோமீட்டர்கள் தூரத்தில் அப்பால் இரண்டு
விஷ்ணு சிலைகள் - இருந்த திருக்கோலமும் நின்ற திருக்கோலமும்.
அவை இரண்டும் பக்கத்துப்பக்கத்தில் ஜோடியாக இருந்தன.
ஒரு புன்செய் நிலத்தில் அம்போ என்று இருந்தன.
இதை எழுதும்போது இரட்டைப்புலவர்கள் பாடிய,

கேட்டவரம் அளிக்கும் கீர்த்திமிகு தெய்வங்காள்
கூட்டோடு குடியெங்கே போனீர்கள்? - பாட்டாய் கேள்!
செல்காலமெல்லாம் செலுத்தினோம்; அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண்!

என்னும் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது
எந்தக் கோயிலின் கருவறைச்சிலைகளோ?
அருணைகண்டவிண்ணகரின் அருணைகண்டபெருமாளாகக்
கூட இருக்கலாம்.
யார் கண்டது?

பாருங்கள், கண்டுபிடிப்புக்கள் ஒன்றையொன்று corroborate
செய்துவிடுகின்றன.

நட்டுவாக்காலி இருக்கும் இடத்தில் புதையல் இருக்கும் என்ற
சொல்லும் உண்மைதான்.
அந்த நட்டுவாக்காளி இருந்த கல் ஓர் அகழ்வாராச்சிப்
புதையல்தான்.

The Last Crusade என்னும் படத்தில் Sean Connery ஒரு
பெரிய ஆராய்ச்சியாளர். அவர் ஏசுநாதர் கடைசியாகப் பயன்படுத்திய
Chalice என்னும் கோப்பையைத் தேடுவதில் தன்னுடைய வாழ்நாளைக்
கழித்தவர். ஹிட்லரும் அதனைத் தேடிக்கொண்டிருப்பார். தம்முடைய
மகன் Harrison Ford-உடன் கானரி கண்டுபிடித்துவிடுவார்.
தந்தையும் மகனும் பரஸ்பரம் அதிகத்தொடர்போ அன்போ
செலுத்திக்கொள்ளாதவர்கள்.
கடைசியில் நாஸிக்களால் சுடப்பட்டு படுகாயத்தோடு
கானரி விழுந்துவிடுவார். அவரைக் காப்பாற்றத் தம் உயிரையும்
பணையம் வைத்து அந்தக் கோப்பையைக் கண்டுபிடித்து அதன்மூலம்
தம் தந்தையின் உயிரைக்காப்பாற்றிவிடுவார், ஃபோர்ட்.
அதைக் கண்டுபிடித்த பின்னர் அது ஒரு பூமி வெடிப்புக்குள்
விழுந்துவிடும். அதை எட்டிப்பிடிக்க முயன்ற ஃபோர்ட், வெடிப்பினுள்ளே
விழும் நிலையில் அவருடைய கையைக் கானரி பிடித்துக்கொள்வார்.
அந்தக் கோப்பையை எடுக்க மயிரிழையே இருக்கும்போது அதனை
விட்டுவிடுமாறு மகனிடம் கானரி சொல்லிவிடுவார்.
தந்தைக்கு மகனும் மகனுக்குத் தந்தையும் கிடைத்துவிட்டபோது
எந்தப் பொக்கிஷம்தான் அதைவிடப் பெரிது?
எதற்குச் சொல்லவருகிறேன் என்றால், புதையல் என்பது
அந்தந்த ஆட்களைப் பொறுத்த விஷயம். ரொம்பவும் subjective-ஆன
விஷயம்.
அதுபோலத்தான் அந்த அருணைகண்டவிண்ணகரத்தின்
கல்.

அன்புடன்

ஜெயபாரதி


>>
>>(ஏறக்குறைய ஒரு இலட்சம் கல்வெட்டுக்கள்தொல்லியல் துறையால்
>>படியெடுக்கப்பட்டு
>>பிரசுரிக்கப்படாமல்
>இருக்கின்றன. அவற்றில் புதைந்து கிடக்கும்
>>செய்திகள் எத்தனையோ ? Who cares
>?)
>>
>>ஐயா
>>தங்களின் உழைப்பு உதாரணத்திற்குரியது.
>>தங்களின் வாழ்க்கை
>வணக்கத்திற்குரியது.
>>
>>வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
>>
>>மிக்க
>அன்புடன்
>>கோகுல்.
>>
>>=================>
>
>
>