From anbudan ananth@y... Thu Apr 29 19:38:15 2004
Return-Path:
X-Sender: anbudan ananth@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 70758 invoked from network); 30 Apr 2004 02:38:12 -0000
Received: from unknown (66.218.66.218)by m18.grp.scd.yahoo.com with QMQP; 30 Apr 2004 02:38:12 -0000
Received: from unknown (HELO n29.grp.scd.yahoo.com) (66.218.66.85)by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 Apr 2004 02:38:12 -0000
Received: from [66.218.66.143] by n29.grp.scd.yahoo.com with NNFMP; 30 Apr 2004 02:37:58 -0000
Date: Fri, 30 Apr 2004 02:37:57 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To: <408F8BF5.000003.01856@PERSONAL-42BOC0>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1700
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.85
From: "V.S. Ananthanarayanan"
X-Originating-IP: 65.93.163.239
Subject: Re: S I V A P U R A N A M LINES 61 TO80
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth

அன்புள்ள திரு. சுப்பிரமணியன்:
சிவன் பேரில் நாட்டமுடைய எவரையும் ஈர்த்து ஆட்கொள்ளும் தன்மையதான மணிவாசகரின் 'சி
வபுராணத்தை' மிக மிக அருமையான வகையில், மூலமும் பொருளுமாக இட்டுவருவதற்கு எல்லோர் சார்பிலும்
உங்களுக்கு நன்றி.
இத்துணைப் பெரிய தொடர் இடுகையில் ஓரிரண்டு இடங்களில் மட்டுமே தட்டச்சுத் தொல்லை
தலைகாட்டியிருக்கிறது:
1. தலைப்பில்: "சிவபெருமானது பழை*ய*னவாகிய பெருமைகளைக் கூறுவது"
2. வரி 11: ஈசன் அடிப்போற்றி =ஈசன் அடிபோற்றி
4. வரி 47: தேன்ஊரி = தேன் ஊறி
உங்கள் பொருள் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. தனித்தனியாகச் சுட்டத் தற்போது நேரமில்லை.
வரி 20: உரைப்பன் யான்: இப்படிக் கூறுவதோடு, இந்த இரண்டு சொற்களும் புணர்ந்தவகையில், 'உரைப்பனி
யான்' என்றும் ஓசை நயத்திற்காகக் கூறுவார்.
வரி 71: "*துன்னிருளே தோன்றாப் பெருமையனே. உயிர்கள் போல் ஆணவமலத்தால் அணுகப் பெறாத
பெருமைஉடையவனே என்றும் பொருள் சொல்லப்பெறுகிறது.."
இந்த இடத்தில் சொல்லும் குணங்களெல்லாம் முரண் களாக இருப்பதால் சோதி-இருள் என்ற முரண் தரும்
பொருளே பொருத்தமெனத் தோன்றுகிறது.
அனந்த்

--- In agathiyar@yahoogroups.com, "dotthusg" wrote:
> (சிவபுராணம்தொடர்ச்சி வரி 61 முதல் 80 வரை)
> நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்........60.
> தாயிற் சிறந்த தயாவான தத்துவனே,
>
> *6 துன்னிருளே தோன்றாப் பெருமையனே. உயிர்கள் போல் ஆணவமலத்தால் அணுகப் பெறாத
பெருமைஉடையவனே
> என்றும் பொருள் சொல்லப்பெறுகிறது..

> ஆற்றின்ப வெள்ளமே, அத்தாமிக் காய்நின்ற
> தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்
> (வளரும்)
> ஓம். சுப்பிரமணியன்
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> [Non-text portions of this message have been removed]