From jaybee@t... Sat May 01 04:17:06 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 77460 invoked from network); 1 May 2004 11:17:06 -0000
Received: from unknown (66.218.66.216)by m17.grp.scd.yahoo.com with QMQP; 1 May 2004 11:17:06 -0000
Received: from unknown (HELO ipop4.tm.net.my) (202.188.0.162)by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 May 2004 11:17:05 -0000
Received: from av5 (av5.secure.tmnet [172.20.0.22])by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HX100CRD8N0OW@i...> foragathiyar@yahoogroups.com; Sat, 01 May 2004 19:16:12 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-42.tm.net.my [202.188.72.42])by av5.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HX1003KK8MUV9@a...> for agathiyar@yahoogroups.com;Sat, 01 May 2004 19:16:12 +0800 (SGT)
Date: Sat, 01 May 2004 18:55:36 +0800
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040501185536.00764664@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Old verses with codified hidden meanings
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555


அன்பர்களே,

பல பழைய நூல்களில் உள்ள பாடல்களுக்குப் பொருள்
இப்போது புரிவதில்லை.
சோதிடம், மாந்திரீகம், மருத்துவம், சித்தரியல் ஆகியவை
இந்த வகையில் முதலில் நிற்கின்றன.
அவற்றில் அரிய பல கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதை
உணரலாம். ஆனால் குழூஉக்குறி எனப்படும் சங்கேத மொழியில்
உள்ளவற்றை அறிதல் சிரமம்.
யாராவது விஷயம் தெரிந்த ஆளிருந்தால் கேட்டுக்கொள்ளலாம்.
இல்லையெனில் அதுபாட்டுக்குக் கிடப்பில் கிடக்கும்.

உதாரணத்துக்கு ஒரு பாடல்:

மதியுதிக்கக் கால்நாட்டி மாலுதிக்கக் கட்டி
விதிவெள்ளி தானுக்கு வேய்ந்து - பதிதனிலே
மந்திரி தானுதிக்க மாடங் குடிபுகுந்தால்
இந்திரன்போல் வாழ்ந்திருக்க லாம்

` இது சோதிடப்பாடல்.

இதை crack செய்து பார்ப்போம்.

இதில் 'உதிக்க' என்று வருவது லக்கினத்தைக் குறிக்கும்.
ஆகாயத்தில் நேர் கிழக்கிலிருந்து நேர் மேற்குவரைக்கும் ஒரு
விண்வெளிப்பாதையுண்டு. அதனை zodiacal path என்றும் 'ராசிமண்டல
வட்டம்' என்றும் சொல்வார்கள்.
பன்னிரு ராசிகளும் அந்தப் பாதையில் இருக்கும்.
ஒரு ராசிக்கு 30 பாகை என்ற வகையில் பன்னிரு ராசிகளுக்கும்
சேர்த்து மொத்தம் 360 பாகை இருக்கிறது.
எந்த ஒரு நேரத்திலும் நமக்கு மேலுள்ள ஆகாயத்தில்
6 ராசி-7 ராசிகள் இருக்கும். ஒன்று கிழக்கில் உதிக்க, மற்றொன்று
மேற்கில் மறைவதுமாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த ராசி கிழக்கே உதிக்கிறதோ,
அதுதான் 'லக்கினம்' எனப்படுவது.
ஒரு குழந்தை பிறக்கும் போது எந்த ராசி உதிக்கின்றதோ,
அதுதான் அந்தக் குழந்தையின் 'ஜன்மலக்கினம்' எனப்படுவது.
அதுதான் ராசிச்சக்கரத்தில் 'முதலாம் வீடு' எனப்படும்.
ஏதாவது காரியத்தைச்செய்யும்போது நாள், நட்சத்திரம், காலம்,
கரணம், யோகம், ஹோரை முதலியவற்றைப் பார்ப்பதுபோல நல்ல
லக்கினத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

ஒன்பது கிரகங்களும் இந்தப் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கின்றன.
எந்த ஒரு கிரகமும் ஏதாவது ஒரு ராசியில் இருந்துகொண்டுதானிருக்கும்.

ஒரு காரியத்தைத் தொடங்கும்போது நல்ல லக்கினத்தைத்
தேர்ந்தெடுப்பதுடன் அதற்கு இருக்கும் கிரக சம்பந்தத்தையும்
பார்ப்பார்கள்.
ஒவ்வொரு ராசிக்கும் உரிய கிரகம் உண்டு. மேடத்துக்குச் செவ்வாய்,
ரிஷபத்துக்குச் சுக்கிரன், இப்படி.
உதிக்கின்ற லக்கினம் எந்த கிரகத்துக்கு உரிய ராசி, அந்த
கிரகத்தின் நிலை என்ன; லக்கினத்தை எந்த கிரகம் பார்க்கிறது; எந்த
கிரகம் லக்கினத்தில் இருக்கிறது போன்றவையெல்லாம் கவனத்துக்குரியது.
லக்கினத்தில் உள்ள கிரகம் அதனுடன் சேர்ந்துதான் உதித்துக்
கொண்டிருக்கும் அல்லவா?

அதைத்தான் மேற்கூறிய பாடலில் பார்க்கிறோம்.

மதி என்பது சந்திரன்.
மதியுதிக்கக் கால்நாட்டி - சந்திரன் இருக்கும் லக்கினத்தில் தச்சு செய்து

மாலுதிக்கக் கட்டி - புதனிருக்கும் லக்கினத்தில் கட்டடவேலையை
ஆரம்பித்து
மால் - புதன்; புதனுக்குரிய அதிதெய்வம் விஷ்ணு

விதிவெள்ளி தானுதிக்க - சுக்கிரன் இருக்கும் லக்கினத்தில் கூரை
வேய்ந்து

பதிதனிலே மந்திரிதானுதிக்க மாடம் குடிபுகுந்தால் - குரு இருக்கும்
லக்கினமாகப் பார்த்து வீட்டில் குடி புகுந்தால்

இந்திரன்போல் வாழ்ந்திருக்கலாம்.

இதுதான் அந்தப் பாடலுக்குப் பொருள்.
இது கொஞ்சம் சுளுவான பாட்டு. இல்லீங்களா?

அன்புடன்

ஜெயபாரதி