From jaybee@t... Sat May 01 06:01:41 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 6480 invoked from network); 1 May 2004 13:01:41 -0000
Received: from unknown (66.218.66.218)by m24.grp.scd.yahoo.com with QMQP; 1 May 2004 13:01:41 -0000
Received: from unknown (HELO ipop1.tm.net.my) (202.188.0.162)by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 May 2004 13:01:40 -0000
Received: from av4 ([172.20.0.21])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HX1001FFDFREY@i...> foragathiyar@yahoogroups.com; Sat, 01 May 2004 20:59:52 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-48.tm.net.my [202.188.72.48])by av4.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HX100LSIDFME2@a...> for agathiyar@yahoogroups.com;Sat, 01 May 2004 20:59:51 +0800 (SGT)
Date: Sat, 01 May 2004 20:55:56 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040501205556.0075f0d8@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20040501185536.00764664@p...>
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Re: [agathiyar] Re: Old verses with codified hidden meanings
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 11:58 AM 5/1/04 +0000, you wrote:
>ஐயா,
> அற்புதமான பாடல். இது பூலிப்பாணி சித்தர் பாடலோ? அவர் பல சோதிடப் பாடல்கள் பல

>பாடியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
>

இல்லை. இது 'வீமநாதம்' என்னும் மூலநூலின் வழிநூலாகிய
'சோதிட கிரக சிந்தாமணி' என்னும் நூலில் உள்ள பாடல்களில்
ஒன்று.


>
>
>உதாரணத்திற்கு தீட்சை வழங்க நேரம் கணிக்கும் போது ஆத்மகாரகனாகிய சூரியன் பலத்துடன், நல்ல
இடத்தி
>ல் அமர்ந்திருக்கும் நேரம் அல்லது பிரம்ம முகூர்த்தம் உதிதம் என்று கேள்விப் பட்டதுண்டு. மேலும்
இதற்கு
>நவாம்சம் நன்றாக இருப்பது அவசியம். வேலையில் சேர முகூர்த்தம் கணிக்கும் போது ராசிக்
கட்டத்தை
>ஆராய்ச்சி செய்வதுடன், முகூர்த்த காலத்தின் தசாம்ச சக்கரத்தையும் ஆரயவேண்டும் என்று சிலர்
கூறக்
>கேட்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் இதுவெல்லாம் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


'காலபேதநியதி' என்பது ஒன்று உண்டு. ஒருகாலகட்டத்தில்
செய்யப்படவேண்டிய கார்மானுஷ்டானங்களை இன்னொரு கால
கட்டத்தில் செய்யவேண்டிய அவசியமில்லமற்போகும்.
யுகதர்மமும் அப்படிப்பட்ட விதிக்குட்பட்டதுதான். கிருதயுகத்தில்
இருந்த அந்த அனுஷ்டானங்களில் ஒரு சிறிய பங்கே கலியுகத்தில்
செய்தால் போதும் என்று நூல்கள் கூறும்.
அவ்வகையில் இப்போது உள்ள காலதேசவர்த்தமானத்தில்
ஒருசிலவற்றை மட்டுமே கவனித்துக் கைக்கொள்வதே கொள்கையாக
இருக்கிறது.
பிரம்ம முகூர்த்தம், அபிஜித், கோதூளிபோன்ற நேரங்களும்
நவாம்சத்தின் வர்க்கோத்தமும் ஹோரை,பஞ்சபட்சி சாத்திரம்
போன்றவற்றையும் பார்த்தாலே போதும் என்று, நூலை நன்கு நுண்ணிதின்
உணர்ந்தோர் கூறுகின்றனர்.
மலேசியாவில் Malaysian Astrological Society -
Persatuan Ilmu Nujum Malaysia எனப்படும் சோதிடக்கழகத்தின்
தலைவர் ஒருவர் இருந்தார்.
அவர் ரேஸில் ஓடும் குதிரைகளின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு,
பிறந்த நேரத்தை வைத்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் ரேஸில்
ஒரு குறிப்பிட்ட குதிரை எப்படி ஓடும் என்ற விபரத்தைக் கூறினார்.
அவர் ஒரு professional. முன்கூட்டியே யாருக்கும் டிப்ஸ்
கொடுப்பதில்லை. ரேஸின் முடிவுகளை எழுதி ஒரு கவரில் வைத்து ஒட்டிக்
கொடுப்பார். ரேஸ் முடிந்த பின்னர் அதைத் திறந்து பார்த்தால் அவர் சொன்ன
குதிரைதான் ஜெயித்திருக்கும்.
அவர் தமக்கென்று ஒரு முறையை செம்மைப்படுத்திக்கொண்டு
வைத்திருந்தார்.


>
> என்னைப் போன்று அதிக அனுபவம் இல்லாதவர்கள் இதைப் பற்றியெல்லாம் பேசுவதைவிட, ஜேபி ஐயா,

>மற்றும் சோதிடம் நன்கு கற்றறிந்த அனுபவஸ்தர்கள் இதை எழுதினால் அனைவரும்
பயனடைவோம்.
>
>அன்புடன்,
> சிவா.


நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து நீங்கள் சோதிடத்தைக்
கற்றறிந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அப்படியிருக்கும்போது
நீங்களே தாராளமாக எழுதலாமே.

அன்புடன்

ஜெயபாரதி

>
>--- In agathiyar@yahoogroups.com, JayBee wrote:
>>
>>
அன்பர்களே,
>>
>> பல பழைய நூல்களில் உள்ள பாடல்களுக்குப் பொருள்
>> இப்போது
புரிவதில்லை.
>> சோதிடம், மாந்திரீகம், மருத்துவம்,சித்தரியல் ஆகியவை
>> இந்த வகையில்
முதலில் நிற்கின்றன.
>> அவற்றில் அரிய பல கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதை
>> உணரலாம். ஆனால்
குழூஉக்குறி எனப்படும் சங்கேத மொழியில்
>> உள்ளவற்றை அறிதல் சிரமம்.
>> யாராவது விஷயம்
தெரிந்த ஆளிருந்தால் கேட்டுக்கொள்ளலாம்.
>> இல்லையெனில் அதுபாட்டுக்குக் கிடப்பில் கிடக்கும்.
>>

>> உதாரணத்துக்கு ஒரு பாடல்:
>>
>> மதியுதிக்கக் கால்நாட்டி மாலுதிக்கக் கட்டி
>> விதிவெள்ளி
தானுக்கு வேய்ந்து - பதிதனிலே
>> மந்திரி தானுதிக்க மாடங் குடிபுகுந்தால்
>> இந்திரன்போல்
வாழ்ந்திருக்க லாம்
>>
>> ` இது சோதிடப்பாடல்.
>>
>> இதை crack செய்து பார்ப்போம்.
>>

>> இதில் 'உதிக்க' என்று வருவது லக்கினத்தைக் குறிக்கும்.
>> ஆகாயத்தில் நேர் கிழக்கிலிருந்து
நேர் மேற்குவரைக்கும் ஒரு
>> விண்வெளிப்பாதையுண்டு. அதனை zodiacal path என்றும் 'ராசிமண்டல

>> வட்டம்' என்றும் சொல்வார்கள்.
>> பன்னிரு ராசிகளும் அந்தப் பாதையில் இருக்கும்.
>> ஒரு
ராசிக்கு 30 பாகை என்ற வகையில் பன்னிரு ராசிகளுக்கும்
>> சேர்த்து மொத்தம் 360 பாகை
இருக்கிறது.
>> எந்த ஒரு நேரத்திலும் நமக்கு மேலுள்ள ஆகாயத்தில்
>> 6 ராசி-7 ராசிகள்
இருக்கும். ஒன்று கிழக்கில் உதிக்க, மற்றொன்று
>> மேற்கில் மறைவதுமாக இருக்கும்.
>> ஒரு
குறிப்பிட்ட நேரத்தில் எந்த ராசி கிழக்கே உதிக்கிறதோ,
>> அதுதான் 'லக்கினம்' எனப்படுவது.

>> ஒரு குழந்தை பிறக்கும் போது எந்த ராசி உதிக்கின்றதோ,
>> அதுதான் அந்தக் குழந்தையின்
'ஜன்மலக்கினம்' எனப்படுவது.
>> அதுதான் ராசிச்சக்கரத்தில் 'முதலாம் வீடு' எனப்படும்.
>>
ஏதாவது காரியத்தைச்செய்யும்போது நாள், நட்சத்திரம், காலம்,
>> கரணம், யோகம், ஹோரை
முதலியவற்றைப் பார்ப்பதுபோல நல்ல
>> லக்கினத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
>>
>>
ஒன்பது கிரகங்களும் இந்தப் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கின்றன.
>> எந்த ஒரு கிரகமும் ஏதாவது ஒரு
ராசியில் இருந்துகொண்டுதானிருக்கும்.
>>
>> ஒரு காரியத்தைத் தொடங்கும்போது நல்ல லக்கினத்தைத்

>> தேர்ந்தெடுப்பதுடன் அதற்கு இருக்கும் கிரக சம்பந்தத்தையும்
>> பார்ப்பார்கள்.
>> ஒவ்வொரு
ராசிக்கும் உரிய கிரகம் உண்டு. மேடத்துக்குச் செவ்வாய்,
>> ரிஷபத்துக்குச் சுக்கிரன், இப்படி.
>>
உதிக்கின்ற லக்கினம் எந்த கிரகத்துக்கு உரிய ராசி, அந்த
>> கிரகத்தின் நிலை என்ன; லக்கினத்தை
எந்த கிரகம் பார்க்கிறது; எந்த
>> கிரகம் லக்கினத்தில் இருக்கிறது போன்றவையெல்லாம்
கவனத்துக்குரியது.
>> லக்கினத்தில் உள்ள கிரகம் அதனுடன் சேர்ந்துதான் உதித்துக்
>> கொண்டிருக்கும்
அல்லவா?
>>
>> அதைத்தான் மேற்கூறிய பாடலில் பார்க்கிறோம்.
>>
>> மதி என்பது சந்திரன்.

>> மதியுதிக்கக் கால்நாட்டி - சந்திரன் இருக்கும் லக்கினத்தில் தச்சு செய்து
>>
>> மாலுதிக்கக் கட்டி
- புதனிருக்கும் லக்கினத்தில் கட்டடவேலையை
>> ஆரம்பித்து
>> மால் - புதன்; புதனுக்குரிய
அதிதெய்வம் விஷ்ணு
>>
>> விதிவெள்ளி தானுதிக்க - சுக்கிரன் இருக்கும் லக்கினத்தில் கூரை
>>
வேய்ந்து
>>
>> பதிதனிலே மந்திரிதானுதிக்க மாடம் குடிபுகுந்தால் - குரு இருக்கும்
>> லக்கினமாகப்
பார்த்து வீட்டில் குடி புகுந்தால்
>>
>> இந்திரன்போல் வாழ்ந்திருக்கலாம்.
>>
>> இதுதான் அந்தப்
பாடலுக்குப் பொருள்.
>> இது கொஞ்சம் சுளுவான பாட்டு. இல்லீங்களா?
>>
>> அன்புடன்
>>
>>
ஜெயபாரதி
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->