From jaybee@t... Sun May 02 08:13:52 2004
Return-Path: X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 87669 invoked from network); 2 May 2004 15:13:52 -0000
Received: from unknown (66.218.66.167)by m25.grp.scd.yahoo.com with QMQP; 2 May 2004 15:13:52 -0000
Received: from unknown (HELO ipop1.tm.net.my) (202.188.0.162)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 2 May 2004 15:13:51 -0000
Received: from localhost-hme0 ([172.22.0.23])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HX300K0YEB2JR@i...> foragathiyar@yahoogroups.com; Sun, 02 May 2004 23:13:50 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-80.tm.net.my [202.188.72.80])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 182002)) with SMTP id <0HX300K7MEAWSB@i...> foragathiyar@yahoogroups.com; Sun, 02 May 2004 23:13:50 +0800 (SGT)
Date: Sun, 02 May 2004 23:09:52 +0800
In-reply-to: <40945ECA.000014.01980@PERSONAL-42BOC0>
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040502230952.007247c0@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20040501220439.007612a4@p...>
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee Subject: Re: [agathiyar] AaRRil iRanggum Alzagar
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
அன்புள்ள ஐயா,
Graphic description என்று சொல்லும்படியாக எழுதியிருக்கிறீர்கள்.
பதினெட்டாம்படி கறுப்பர் பற்றி எழுதுங்கள். நீங்கள் முன்பு
விருமாண்டி பற்றி எழுதியது சிறப்பாகஇருந்தது. முற்றிலும் புதுத் தகவல்கள்.
மதுரை வட்டாரத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் உங்களிடமிருந்து
எத்தனையோ விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
அன்புடன்
ஜெயபாரதி
At 10:36 AM 5/2/04 +0800, you wrote:
>ஓம். அன்புடன் ஐயா! வணக்கம்.
>
>திருமாலிருஞ்சோலைஸ்ரீ கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்துடன் ஸ்ரீவில்லிப் புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலையேற்று
>தங்கக் குதிரையில்வகை எழுந்தருளல் என்றவிழா வருகின்ற
>04-05-04 செவ்வாய்க் கிழமை நடைபெறவிருக்கின்றது.
>
>பக்தியின் பல்வேறு வெளிப்பாட்டினை ஒரே இடத்தில் ஒரு சேரக் காணக்கூடிய வைபவம் "அழகர் பெருமானின்
>வைகை இறக்கம்."
>
>வைணவமும் சைவமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பாங்கு.
>மதுரை மக்களின் மைத்துனராம் கள்ளழகருக்கு கள்ளநாடுமுழுவதும் உறவுப்பட்டாளம்.பண்டிதர்களும்பாமரரும் இணைந்து
>வீடு நிறைந்து ஊரே அல்லோலகல்லோலப்படும் வேடிக்ககை. அழகரின் பல்லக்கு ஒவ்வொரு மண்டகப்படியிலும்
>இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தந்து பரிபாலித்து அவசர அவசரமாக கோடிபக்தர்களுக்கு அருள்பாலிக்கும்
>வேகத்தில் பறந்துகொண்டிருப்பார்.
>அழகர் நகன்றவுடன் ஒவ்வொரு மண்டகப்படியிலும் பிரசாதம் வழங்கப்படும்.ஒரு செம்பினில் பச்சைத் துணிகட்டி
>அதனுள் நாட்டுச் சர்க்கரையும் உடல் நலம் பேண சுக்குப்பொடியும் போட வைத்திருக்கின்றான் சொக்குப் பொடி
>போட்ட அழகன். அழகர் இறங்கிய மண்டகப்படியில் கற்பூர நீராஞ்சனம் நிகழ்த்தும் போது திவ்யமங்கள
>ஜோதியாய் அனைவர் கைகளும் உயர்ந்து கற்பூர நீராஞ்சனம் செய்து மகிழ்வர். பின்னர் சர்க்கரையும்
>சுக்குப்பொடியும் கலந்த பிரசாதம் அருகிலுள்ளோருக்கு வினியோகிக்கப்படும். சித்திரையில் அழகரின்
>பக்தர்களின் அடிச்சூடு தணிக்க தோளில் தொ
>உடல் நலம் பாராது, சோம்பல்தவிர்த்து,இடைவிடாது தண்ணீர் பீச்சும் ஒரு குழு தம் பணியினைச் செய்து
>அளவிலா இன்பமுறும். வைகையில் இறங்குவதற்கு அபூர்வமான நேரகணிதம் செய்யப்பட்டிருக்கும். தென்வடலாக ஓடும்
>வைகையின் மேற்குக்கரையில் அழகர் இறங்கும் போது எதிர்கொண்டு அழைக்க அன்னை மீனாட்சியும்
>சுந்தரேஸ்வரரும் (சிவ குடும்பம்)முழுவதும் வந்திருந்து சிறப்பிப்பதால் பக்தர்கள் குழாம் பரமானந்தத்தில்
>திளைக்கும்.
>
> அழகர் மூர்த்தியின் மீதும் முன்னர் தண்ணீர் பீச்சுவதுண்டு. பின்னர் சில நடைமுறை நிர்வாகக்
>காரணங்களினால் ஒரே ஒரு மண்டகப்படியில் மட்டும் தான்(ராமா ராயர் மண்டகப்படி) அழகர் தங்குவதற்கு
>வரும்போது மட்டும் நிற்கும் அழகர் மூர்த்தியின் மீது தண்ணீர் பீய்ச்சும் உரிமை உயர் நீதிமன்றத்தினால்
>வழங்கப்பட்டிருக்கின்றது.
>
>திடலில் வட்ட வடிவமாய் நின்று கொண்டு ஆட்டுத்தோல் கொண்ட நீரை பிள்ளையாருக்கு வந்தது அரச மரத்துக்கும்
>தான்,என்பது போல உடன் நிற்கும் அர்சகருக்கும் ஆயிரம் பேர்ஆட்டுத்தோல் நீரினால் அறைந்து
>குளிப்பாட்டப்படுவார். அவர் மூச்சுவிடுவதே தெய்வச் செயலாகும்.
>
>தொடர்ந்து மண்டகப்படியில் இறங்கி ஏறிக்கொண்டே அழகர் மதுரை நகருக்குள் நுழயாது வைகையின்
>போக்கிலேயே வண்டியூர்வரை செல்வார். மத நல்லிணக்கம் கொண்டு "துலுக்கச்சி நாச்சியார் "
>மண்டக்கப்படியில் அழகர் வந்து இறங்குவார். அனைத்து சுவர்களிலும் "விபசார த்தடைச் சட்டத்தின் கீழ்
>கள்ளழகரைக் கைது செய்!" என்று பகுத்தறிவுப் பாசறை விளக்கமளித்து சுவரொட்டிகள் அழகுசெய்யும். ஒறு நாள்
>தங்கி மறுநாள் அழகர் வந்த வழியே திரும்புவார். ஆற்றின் வழியே செல்லாமல் சாலைவழியே ஆற்றுக்குக்
>இணையாக பவனி வருவார்.
>பழநியில் பங்குனி உத்திரத்தில் யார் வீட்டில் வேண்டுமானாலும் யாரும் தங்கிச் செல்லும் பண்பாடு ஒரு உயர்ந்த
>கோட்பாடு. விழாக் காலங்களில் விருந்தோம்பல் மிகவும் உயர்ந்த ஒரு தத்துவம். இருப்பவர் இல்லாதவர்.
>உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அறிந்தவர் அறியாதவர் என்றில்லாது அனைவரயும் அழைத்து
>உபசரிக்கும் மேலாம் தன்மை உயரிய மார்க்கம். அது போன்று மதுரை சித்திரா பௌர்ணமியில் ஜொலிக்கும்.
>இரவினில் மக்கள் வெள்ளத்தில் அழகர் எங்கிருக்கின்றார் என்பதைக் கண்டறிய ஒரு பீகன் விளக்கு கேஸ் லைட்டு
>பச்சைத் துணிநான்கு புறங்களிலும் போர்த்தியது அழகருக்கு முன்னர் சென்றுகொண்டே இருக்கும். வந்த திருக்கூட்டம்
>அழகர் புகழை ஆங்காங்கே சிறிய குழுக்களாக நின்றுகொண்டு பாடிப் பரவுவர்.மேள தாளங்கள் ஒவ்வொரு குழுவும்
>ஏற்பாடுசெய்து சொந்த கிராமங்களிலிருந்து அழைத்துவருவர். திருநாள் வருவதை முன்னிட்டு ஆண்டுதோரும்
>உண்டியலில் சேகரித்துவைத்துக் கொண்டபணத்தை மனமாறச் செலவுசெய்து களிப்பர். கூண்டுவண்டிகட்டி யானைபோன்று
>ஆங்காங்கே வண்டியும் ஜோடி மாடுகளும் நிற்கும். அழகருடன் வரும் டசன் கணக்கான பெரிய உண்டியல்பெட்டிகள்
>ஏலத்தில் எடுத்து மகிழ்வர். பரிசுச் சீட்டுப்போன்று அது. நிறையக் கிடைத்தவரும் உண்டு.
>
>என்னே கொடுமை! இத்தனை அமர்க்களமாய் திரும்பிச்செல்லும் அழகரை உள்ளேவிடாமல் தாயார் வெளியே
>இறங்கச் செய்துவிடுவார். ஆறுமாதங்கள் அவர் வெளியே தான். பக்தர்களில் சுமையினையும் ஏற்றுக்கொண்டு
>ஆறுமாத வனசாசத்திற்குப் பின்னர் அழகர் உள் செல்லுவார்.
>
>சித்திரா பவுர்ணமி விழாவுக்கென ஸ்ரீவில்லிப் புத்தூர் ஆண்டாள் சன்னதியிலிருந்து ஒரு வைஜயந்தி மாலையும்
>குடையும் கால் நடையாகவே ஒரு திருக் கூட்டம் கொண்டுவந்து அழகர்மலைக்கு திருச்சீர் வழங்கும்.
>
>கருப்பு காவல் தெய்வம். கள்ளழகரின் பக்தர்கள் அனைவரும் அழகரின் கருப்புகளே!
>
>அன்புடன்,
>வெ.சுப்பிரமணியன்.
>ஓம்
>
>-------Original Message-------
>
>From: agathiyar@yahoogroups.com
>Date: 05/01/04 22:09:54
>To: agathiyar@yahoogroups.com
>Subject: [agathiyar] AaRRil iRanggum Alzagar
>
>
>ஆற்றில் இறங்கும் கள்ளழகர்
>
> சித்திராபௌர்ணமி விசேஷம் என்றால் நம் கவனத்தைக்
>கவர்வது மதுரை மீனாட்சியம்மன் திருவிழா, தேரோட்டம், திருக்கல்யாணம்,
>பட்டாபிஷேகம், அழகர் ஆற்றில் இறங்குவது முதலியவை.
> இதை வைத்துத்தான் விஷயஞானம் இல்லாதவர்களைப் பார்த்து
>"நீயென்ன ஆத்தக் கண்டியா? அழகரச் சேவிச்சியா?" என்று கேட்கும்
>வழக்கம் ஏற்பட்டது.
> சித்திரை மாதம் நடைபெற்ற தெப்போற்சவத்தை தை மாதத்துக்கு
>மாற்றிவைத்து, தைமாதம் நடந்த திருவிழாவைச் சித்திரை மாதத்திற்குக்
>கொண்டுவந்து, சித்திரை மாதத்தில் அழகர் மலையிலிருந்து மதுரைக்கு