From dotthusg@y... Sun May 02 09:07:48 2004
Return-Path:
X-Sender: dotthusg@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 81676 invoked from network); 2 May 2004 16:07:47 -0000
Received: from unknown (66.218.66.166)by m5.grp.scd.yahoo.com with QMQP; 2 May 2004 16:07:47 -0000
Received: from unknown (HELO smtp100.mail.sc5.yahoo.com) (216.136.174.138)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 2 May 2004 16:07:47 -0000
Received: from unknown (HELO personal-42boc0) (dotthusg@2... with login)by smtp100.mail.sc5.yahoo.com with SMTP; 2 May 2004 16:06:51 -0000
MIME-Version: 1.0
Message-Id: <40951D1C.000005.00156@PERSONAL-42BOC0>
Date: Mon, 3 May 2004 00:09:00 +0800
X-Mailer: IncrediMail (2501361)
References:
To:
X-FID: FLAVOR00-NONE-0000-0000-000000000000
X-Priority: 3
X-eGroups-Remote-IP: 216.136.174.138
From: "dotthusg"
Subject: Re: [agathiyar] Re: Vinayakar akaval( Nakkira Devar)
X-Yahoo-Group-Post: member; u=171318375
X-Yahoo-Profile: dotthusg
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable

ஓம்.அன்புடன் சிவா அவர்களுக்கு வணக்கம். இருவரும் தனித்தனியே அருளிச்செய்திருக்கின்றார்கள். எது முந்தியது
என்பதெல்லாம் அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள்தான் கூறமுடியும்.
இரண்டுமே ராஜயோகத்தை வலியுறுத்துபவை.

நக்கிரதேவர் என்று பெயரில் அறுபத்துமூவரில் ஒரு நாயனாரும் உளர்.

நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்னும் கோட்பாட்டில் முன் நிற்பது படைத்தவனே என்று அறிந்தும்
தருமி கொண்டுவந்த ஓலைச்செய்யுளில் சொற்குற்றம் இல்லை. பொருள்குற்றம் உள்ளது எனவாதாடி,"நீரே முழுமுதல்
கடவுளாயினும் ஆகுக; நெற்றியில் மட்டுமின்றி உடம்பெங்கும் கண்களையுடத்தாயிருந்தாலும் இயற்கையில்
பெண்களின் கூந்தலுக்கு மணம் இல்லை" என்று பேசிய தமிழ்சங்கத் தலைவரும் ஒரு நக்கீரர்.

வினாயகர் அகவல் அருளியவர் இவ்விருவரில் ஒருவரா? அன்றி மற்றொருவரா என்பது ஜே .பீ. ஐயா போன்ற
முதல் வரிசை அன்பர்களும் முனைவர்களும் மட்டுமே அறுதியிட்டுச்சொல்லமுடியும்.

திருக்குறள் அருளிய வள்ளுவப் பெருந்தகையார் என்பதும் இன்னமும் பேசப்பட்டுவருகின்றது.

"காலம் போம்; வார்த்தை நிற்கும்!" என்பது பழமொழி. எழுதியவர் மறைந்தாலும் பொன்னுடம்பிலும்
புகழுடம்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தட்டச்சுப் பிழை காண இரண்டு வெவ்வேறு பதிப்புகளை ஒப்பிட்டு அதன்பின்னரே தட்டெழுதியுள்ளேன். இரண்டு
பதிப்புகளிலும் பிழைகள் தென்பட்டன.

திரு ஜெ.பீ. ஐயா, திரு நா. கணேசன் திரு பசுபதி ஐயா, திரு .ராஜரங்கன், திரு ஹரிகிருஷ்ணன் ,
திரு.எல்.ஏ. விஸ்வநாதன், திரு அனந்தநாராயணன், ஆர்.எஸ் மணி போன்றவர்களும்,இதரப்பெரியோர்களும்
அன்பர்களும் தெரிவிப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் மடலை அகத்தியத்தில் இட்டுவிட்டேன்.

நீங்கள் கூறியசெய்தியைப் போன்றே( காஞ்சி முனிவரின் சொல் போன்றே)
வாரியார் சுவாமிகளும் கூறியிருகின்றார். சிறுபிள்ளையாயிருக்கும் போதேகுழந்தைகளுக்கு
அவ்வைபிராட்டியின் "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பலவிசைபாட" பாடம் முழுமையும்
பாராமல் கூறப்பழகிக் கொள்ளவேண்டும்.குழந்தைகளுக்குப் புரியாத அக்கருவூலத்தை அவர்கள் காலம் வரும்போது
எடுத்து அனுபவிப்பர்" என்பார்.
வணக்கம்.
வெ.சுப்பிரமணியன்,
ஓம்

-------Original Message-------

From: agathiyar@yahoogroups.com
Date: 05/02/04 23:05:48
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Re: Vinayakar akaval( Nakkira Devar)

மிக்க நன்றி ஐயா, விநாயகர் அகவலை பதிவு செய்தமைக்கு.

விநாயகர் அகவல் எழுதியது அவ்வையார் என்று நினைத்திருந்தேன். அது நக்கீரர் எழுதியதா? அல்லது
இருவருமே தனித்தனி விநாயகர் அகவல்எழுதியிருக்கிறார்களா?

btw, தெய்வத்தின் குரல் புத்தகத்தில் (பாகம் 2?) மாகா பெரியவர் அவர்கள் அவ்வையார் எழுதிய வி
நாயகர் அகவலை மிகவும் சிறப்பித்து கூறியிருந்தார். அதில் பல யோக சூட்சும கருத்துகள் பொதிந்து
இருப்பதாகவும் அது இப்போது விளங்காவிட்டாலும் கூட அதை குருட்டு மனனம் செய்து தினமும் உள்ளம் ஒன்றி
பாடி வந்தால் அதன் கருத்துக்கள் நாளடைவில் விளங்கும் என்று தெரிவித்திருந்தார்.

அன்புடன்,
சிவா.

[Non-text portions of this message have been removed]