From anbudan ananth@y... Sun May 02 10:42:12 2004
Return-Path: X-Sender: anbudan ananth@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 95321 invoked from network); 2 May 2004 17:42:11 -0000
Received: from unknown (66.218.66.216)by m15.grp.scd.yahoo.com with QMQP; 2 May 2004 17:42:11 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78)by mta1.grp.scd.yahoo.com with SMTP; 2 May 2004 17:42:11 -0000
Received: from [66.218.67.189] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 02 May 2004 17:42:09 -0000
Date: Sun, 02 May 2004 17:42:09 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6214
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.78
From: "V.S. Ananthanarayanan" X-Originating-IP: 65.93.164.19
Subject: Re: S I V A P U R A N A M LINES 61 TO80 ( some informations pl.)
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
There seems to be some problem with the font in my previous posting. I am
therefore re-posting it again. Sorry for taking up the space again.
ananth
அன்புள்ள ஐயா: நீங்கள் எழுதியது:
> பிரதோஷ வழிபாட்டிற்கென உபவாசத்துடன் சிங்கையில் கெய்லாங் சிவன் கோயிலுக்கு சென்றிருந்தபோது ஒரு
> இலவசக் கையேடு நனைந்து என்கையில் கிடைத்தது. தமிழ் நூல் 'திருவாசகத் தேனமுது' என்று தலைப்பிட்டு
> உரையுடன் கூடிய சிவபுராணம் அது என்று கண்டு அதனை உடனடியாக ஒரு செய்தித்தாளில் சுற்றி
உலர்த்துவதற்காக
> வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். உலர்ந்தபின்னர் பார்த்தேன். தையல் மட்டும் பிரிந்திருந்ததன்றி பக்கங்கள்
> குறையவில்லை.
"தண்ணீரில் நனைந்து என்கண்ணீரைப் பெருக்கியஅந்தப் பனுவலில்.." என்ற உங்கள் வரிகள் எங்கள் கண்களை
நனைக்கின்றன.
பிரதோச நன்னாளாகிய இன்று (மே 2, 2004) உங்களுடனும் பிறருடனும் திருவாசகம் பற்றிய ஒருசெய்தி
யைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வசிக்கும் ஹாமில்டன் (கனடா) நகர்ப் பல்கலைக் கழகத்தில்
சமயத்துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் திரு. சிவராமன் என்பவர் ஒரு அரும்பெரும் சி
வநேயரும் தமிழிலும் வடமொழியிலும் வல்லவருமாகத் திகழ்ந்தார். சைவசித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் அவர்
எழுதியுள்ள நூல்கள் உலகெங்கும் பெயர்பெற்றவை. அவரிடம் முனைவர் பட்டம் பெறும் மாணவர்கள் பெரும்பாலும்
திருவாசகம் தொடர்பான ஆய்வுகளையே புரிந்தார்கள். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிஅவர்களின்
பெயரில் நிறுவிய இந்திய-கனடா உறவு நிலையத்தின் பேராசிரியப் பதவியைப் பல்லாண்டுகள் வகித்த திரு. சி
வராமன் அந்நிறுவனம் வழியாக எங்கள் பல்கலைக் கழக நூலகத்தில் ஆயிரக்கணக்கில் இந்திய சமய, இலக்கிய,
இலக்கண நூல்களைச் சேகரித்துள்ளார். அந்நூலகத்திலிருந்த பற்பல தமிழ் நூல்களைக் கடன்வாங்கிப் படித்துவரும்
நான் அவரது இந்த அரும்பணியை நினைத்தி நினைத்து நாளும் உருகுவேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சி
வபதமடைந்த அப்பெரியவர் திருவாசகத்தில் அளவுகடந்த பற்றுக்கொண்டவர். தமது இறுதிக் காலத்தில்
தள்ளுவண்டியில் அவர் அமர்ந்திருக்க நான் அவர்கீழே அமர்ந்து அவர் கேட்டவாறு திருவாசகம் சிவபுராணத்தை
உரைக்க அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது இன்றும் என் கண்முன் நிற்கிறது. பாராயணம்
முடிந்ததும் அவர் என்னிடம் சொன்னது: 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்ற இடத்தில்
பொருள் என்பது meaning என்பதைக் குறிப்பதல்ல; அது பாட்டின் உட்பொருளாக விளங்கும் சிவபெருமானைக்
குறிப்பது. அப்பொருளை உணர்ந்துகொண்டோர்க்குச் சிவபதம் (தம் உண்மைநிலை உணர்ந்த தன்மை) கிட்டும்
என்பதே இறுதியில் மணிவாசகர் சொல்வது". என்ன அருமையான விளக்கம்! சிவபுராணத்தை நாம்
படிக்கும்போது இன்னொன்றையும் காணலாம். ஆரம்பத்தில் 'நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி இறைவனின் தி
ருவடிகளைப் பல அடிகளில் சொன்னதை ஒட்டி, இறுதியில், அவ்விறைவனே உண்மைப்பொருளென
உணர்ந்தோர் 'செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவன் *அடி*க்கீழ்.." என்று முடித்தவிதத்தையும் எண்ணி வியந்தி
ருக்கிறேன்.
பேராசிரியர் திரு. சிவராமன் அவர்கள் காலமான பின் அவர் வீட்டிலிருந்த அரிய நூல் ஒன்று என்
கைக்கு எட்டியது. "பன்னிரு திருமுரைத் திரட்டு, அதாவது, அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம், தி
ருக்கோவையார் செய்யுள்திரட்டு, திருவைசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரத்திரட்டு, பிரபந்தமாலைத்தி
ரட்டு, பெரியபுராணச் செய்யுள்திரட்டு" என்ற நீண்ட தலைப்பைக்கொண்ட அந்த நூலின் தலைப்புப் (முதல்)
பக்கத்தில் காண்பது: "இஃது, இரங்கோன் சமரச ஞான சன்மார்க்க சபைத் தலைவரும் சிகந்திரபாக்கம்-சி
த்தாந்த ஞானபோத சங்க ஸ்தாபகரும், சித்தாந்தஞானநிஷ்டருமாகைய சோளங்கிபுரம் ஸ்ரீமத்-சிவ-அருணகிரி
முதலியார் அவர்களால் பாசுரங்களின் தளைகள் பிரித்துப் பரிசோதிக்கப்பட்டு, மேற்படியார் தமையனாரும்
பென்ஷன் சுபேதாரும் பெஞ்சுமாஜிஸ்ட்ரேட்டுமாகிய ஸ்ரீ-சிவசிதம்பரமுதலியாரவர்கள் நல்லாதரவால்- ம-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ
ப.அ. சோமசுந்தர செட்டியாரவர்களது சென்னை வித்தியா பாஸ்கர அச்சியந்திரசாலையில் பதிப்பி
க்கப்பட்டது. விசுவாசு வருஷம் பங்குனி மாதம், 1906". தமது முகவுரையில், 'இவ்வரிய திரட்டு இதுகாறும்
யாரானும் அச்சிற்பதிப்பித்து வெளியிடப்படவில்லை" என்று கூறுவதால் இதுவே முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்ட
நூலெனத் தோன்றுகிறது. முகவுரையில் மேலும் " ...அன்றியும், தமிழ் வேதமாகிய திருவாசகத்துக்கு "அறுபது
விஷய சூசனங்கள்" எம்மால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த விஷய சூசனங்களில் சிவபாராம்யங்களும், சி
வாதிக்யங்களும், சிவபத்துவங்களும் வேதப் பிரமாணங்களைக் கொண்டு நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
வேதப் பிரமாண வசனத்துக்கும் தெளிபொருள் விளக்கியிருப்பதால் நடுநிலை குன்றாது உண்மையறிய வி
ருப்பமுடையாரனைவருக்கும், முக்கியமாகச் சைவர்களுக்கும், இத்திரட்டு இன்றியமையாது வேண்டப்படும்"
என்றும், "திருவாசகத்துள் புதைந்துள்ள பொருள்திறம் நெடுநாள் பழகி முதிர்ந்த அனுபவமுடையார்க்கே
புலப்படுவதன்றி ஏனையோர்க்கு எட்டுணையும் (எள் துணையும்) புலப்படுமாறில்லையென்பதனை நன்குணர்ந்தேமாயி
னும் புறச்சமயிகள் தூற்றும் புன்மொழிகளைக்கேட்டு மனம்பொறாது அவர்களும் உண்மையறிந்து துதிக்குமாறு
ஏகதேசத்துள்ளும் ஏகதேசமாகச் சூசனம் எழுதி வெளிப்படுத்தினனாம்" என்றும் காண்கிறது. மிகவும் பழையதாகித்
தொட்டால் பொடியாகும் காகிதங்கள் கொண்ட இந்நூலை நான் பொக்கிஷமாக எண்ணிப் பாதுகாத்து வருகி
றேன். ஒளிப்படி (photo copy) செய்ய முயன்றால் கெடும் என்பதாலும் அளவு பெரிதாய் (சுமார் 400
பக்கங்கள்) இருப்பதால் scan செய்வது சிரமமாதலாலும் நூலைக் கூடியவரை பாதுகாப்பான இடத்தில்
வைத்துள்ளேன். அக்காலத்தில் நூல்களில் எப்படி 'பாட்டு முதற்குறிப்பு அகராதி, பிழைதிருத்தம்' ஆகி
யவற்றையும் சிரத்தையாகச் செய்துவந்தார்கள் என்பதை இக்காலப் பதிப்பாளர்கள் பார்த்தால் நல்லது!
நூலின் 2-ஆவது பகுதியான திருவாசக விஷய சூசனத்தில், 'நமச்சிவாய வாஅழ்க' என்றதொடருக்கு
ஒரு பக்கம் 'நாதன் தாள் வாழ்க' என்பதற்கு ஒருபக்க விளக்கம் என்றவாறு விரித்துப்பொருள் தரப்பட்டுள்ளது.
ஆனால் சிவபுராணம் முழுமைக்குமாக அவ்வாறு விளக்கம் தரப்படவில்லை. வேண்டுமென்றால் ஓரிரு இடங்களைத்
தட்டச்சு செய்ய முயல்கிறேன்.. (இதுவரை தட்டியதற்கே என் ஒருவிரலுக்கு ஒருமணிக்குமேல் நேரம்
தேவைப்பட்டது!:)
அனந்த்
--- In agathiyar@yahoogroups.com, "V.S. Ananthanarayanan"
wrote:
> அன்புள்ள ஐயா: நீங்கள் எழுதியது:
> > "பிரதோ' வழிபாட்டிற்கென உபவாசத்துடன் சிங்கையில் கெய்லாங் சிவன் கோயி
> லுக்கு சென்றிருந்தபோது ஒரு இலவசக் கையேடு நனைந்து என்கையில் கிடைத்தது.
தமி
> ழ் நூல் 'திருவாசகத் தேனமுது' என்று தலைப்பிட்டு உரையுடன் கூடிய சிவபுராணம்
அது