From dotthusg@y... Sun May 02 14:47:52 2004
Return-Path:
X-Sender: dotthusg@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 8865 invoked from network); 2 May 2004 21:47:52 -0000
Received: from unknown (66.218.66.172)by m22.grp.scd.yahoo.com with QMQP; 2 May 2004 21:47:52 -0000
Received: from unknown (HELO smtp106.mail.sc5.yahoo.com) (66.163.169.226)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 2 May 2004 21:47:52 -0000
Received: from unknown (HELO personal-42boc0) (dotthusg@2... with login)by smtp106.mail.sc5.yahoo.com with SMTP; 2 May 2004 17:38:24 -0000
MIME-Version: 1.0
Message-Id: <40953293.000022.00156@PERSONAL-42BOC0>
Date: Mon, 3 May 2004 01:40:35 +0800
X-Mailer: IncrediMail (2501361)
References:
To:
X-FID: FLAVOR00-NONE-0000-0000-000000000000
X-Priority: 3
X-eGroups-Remote-IP: 66.163.169.226
From: "dotthusg"
Subject: Re: [agathiyar] Re: S I V A P U R A N A M ( MUULAMUM URAIYUM) COMPLETE.
X-Yahoo-Group-Post: member; u=171318375
X-Yahoo-Profile: dotthusg
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable

ஓம். அனந்த் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஓம்
சிந்தை மகிழச் சிவப்புரா ணம்தன்னை
"சிவப் புராணம்'' பிழை.என்கையெழுத்தில் விளைந்த பிழை. மூலத்திலும் உரையினிலும்
"சிவபுராணம்" என்றுதான் உள்ளது.

'விலங்கு மனத்தால்.'
என்பதற்கு 'உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே' என்று பொருள்
இட்டுள்ளீர்கள். அத் தொடருக்கு, 'ஆறறி
வற்ற மிருகத்தையொத்த மனத்தை உடையேன் ஆதலால்' என்று நான்
இதுகாறும் பொருள் கொண்டிருந்தேன். 'வி
லகு மனத்தால்' என்றிருந்தால் நீங்கள் இட்டிருக்கும் பொருள் ஒக்கும்
எனத் தோன்றுகிறது.
உங்களின் கருத்து மிகவும் ஏற்புடைத்து. பிற பெருந்தகையினர் எவ்வாறு பொருள் கொண்டுள்ளனர் என்பதையும்
ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஈண்டு உரைஎழுதிய சிவநெறிச்செல்வர், திரு


-------Original Message-------

From: agathiyar@yahoogroups.com
Date: 05/03/04 00:19:31
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] Re: S I V A P U R A N A M ( MUULAMUM URAIYUM) COMPLETE.

ஐயா: மூலத்தையும் உரையும் முழுதுமாகத் தொகுத்து இட்டதற்கு மிக்க
நன்றி. ஓரிரு ஐயங்கள்: 'சிவபுராணம்
தன்னை..' என்ற இடத்தில் 'சிவப்புராணம்' என்று உங்கள் பதிப்பில்
உள்ளதா? 'விலங்கு மனத்தால்.'
என்பதற்கு 'உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே' என்று பொருள்
இட்டுள்ளீர்கள். அத் தொடருக்கு, 'ஆறறி
வற்ற மிருகத்தையொத்த மனத்தை உடையேன் ஆதலால்' என்று நான்
இதுகாறும் பொருள் கொண்டிருந்தேன். 'வி
லகு மனத்தால்' என்றிருந்தால் நீங்கள் இட்டிருக்கும் பொருள் ஒக்கும்
எனத் தோன்றுகிறது. எனது அறி
யாமையைப் பொருட்படுத்தாது இதுபற்றி விளக்கம் தந்தால் நன்றி
சொல்வேன். உங்கள் அருந்தொண்டுக்கு
மீண்டும், மீண்டும் நன்றி. பிரதோஷ தினமும், (நேற்று
மணம்செய்துகொண்ட) மதுரை மீனாக்ஷியும்
சுந்தரேசருமாகத் திருத்தேரில் வீதியுலா வரும் நாளுமாகிய இன்று
நீங்கள் இட்டுள்ள சிவபுராணத்தைப்
பொருளோடு படிக்க வாய்ப்புக்கிட்டியதை 'அவன் அருளாலே அவன்தாள்
வணங்கும்' வாய்ப்பாக எண்ணி மகிழ்கி
றேன்.
அன்புடன், அனந்தன்
--- In agathiyar@yahoogroups.com,wrote:> Subject: S I V A P U R A N A
M
> உ
> சிவமயம்
> திருவாசகம்
> சிவ புராணம்.
> சிவபெருமானது பழையனவாகிய பெருமைகளைக் கூறுவது
> கலிவெண்பா
> திருச்சிற்றம்பலம்.
> நமச்சிவாய வாஅழ்க; நாதன்தாள் வாழ்க!
> இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
> கோகழி ஆண்டகுருமணிதன் தாள்வாழ்க!
> ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
> ஏகன் அநேகன்
> இறைவன் அடிவாழ்க!...............................
.
> .....(5)
> திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! அதன் வடிவாக
> விளங்கும் இறைவன் திருவடி வாழ்க!
> இமைக்கும் நேரமும்கூட என் மனத்தினின்றும்
> நீங்காதவனின் திருவடி வாழ்க!
> திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை
> ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க!
> ஆகம வடிவாகி நின்று இனிமையைத்
> தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க!
> ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது
> திருவடிவாழ்க!
>
> வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க;
> பிறப்பறுக்கும்*1 பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க;
> புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க;
> கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க;
> சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க;.
.(10)
>
> மனஓட்டத்தைத் தொலைத்து, என்னை அடிமை
> கொண்ட முழுமுதற்கடவுளது திருவடி மேம்படுக!
> பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக்கழல்
> அணிந்த திருவடிகள் மேம்படுக!
> தன்னை வணங்காத அயலவர்க்கு எட்டாதவனாய்
> இருப்பவனது தாமரை மலர் போலும்
> திருவடிகள் மேம்படுக!
> கைகூப்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற
> இறைவன் திருவடிகள் மேம்படுக!
> கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரப்
> பண்ணுகின்ற சிறப்புடையவனது திருவடி மேம்படுக!
> *1 பிஞ்ஞகன் -பிறை, கங்கை,அரவம் முதலிய தலைக்கோலங்களை
உடையவன்,
> ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி;
> தேசன் அடிபோற்றி, சிவன்சே வடிபோற்றி;
> நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி;
> மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி;
> சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி;......
.15
> ஈசனது திருவடிக்கு வணக்கம்; எம் தந்தையின்
> திருவடிக்கு வணக்கம்.
> ஒளியுருவை உடையவனது
> திருவடிக்கு வணக்கம்.
> நிறைந்த மங்களம் உடையவனது
> திருவடிக்கு வணக்கம்.
> அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற
> மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்.
> நிலையாமை உடைய பிறவியை ஒழிக்கின்ற
> அரசனது திருவடிக்கு வணக்கம்.
> சிறப்புப் (அழகு)பொருந்திய
> திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளியுள்ள
> நம் கடவுளின் திருவடிக்கு வணக்கம்.
>
> ஆராதஇன்பம் அருளும் மலை போற்றி;
> சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
> அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
> சிந்தை மகிழச் சிவப்புரா ணம்தன்னை
> முந்தை வினைமுழுதும் *2மோய உரைப்பன் யான்;.......20
>
> தெவிட்டாத (வெறுக்காத) இன்பத்தைக்
> கொடுக்கின்ற மலை போலும்
> கருணை உடையவனுக்கு வணக்கம்.
> சிவபெருமானாகிய அவன், என் மனதில்
> நிலைபெறிருந்ததனால்
> அவனுடைய திருவருளாலே அவனுடை
> திருவடியை வணங்கிச்
> சிந்தை (மனம்) மகிழும்படி சிவனது
> அநாதி முறைமையான பழைமையை
> முற்பிறப்பில் செய்யப்பெற்ற வினைகளுள்
> முகந்து கொண்ட வினை முழுமையும்
> *3நீங்க யான் சொல்லுவேன்.
> *2 மோய- மோசனம் என்னும் வடசொல்லின் திரிபு.
> *3'ஓய' என்று கொண்டு 'கெட' என்றும்
> பொருள் கொள்வதுண்டு.
>
> கண்நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி,
> எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி,
> விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,
> எண் இறந்து எல்லை இலாதானே, நின்பெருஞ்சீர்
> பொல்லாவினையேன் புகழுமாறு ஒன்றறியேன்;..........(25)
>
>
> நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான்,
> தன் அருட்கண் காட்ட, அதனால் அவன்
> திருமுன்பு வந்தடைந்து,
> நினைத்தற்கு அரிய அழகுவாய்ந்த அவனது
> திருவடியை வணங்கியபின்,
> வானமாகி நிறைந்தும், மண்ணாகி நிறைந்தும்,
> மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற
> ஒளிப்பிழம்பாகி,
> மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே!
> உன்னுடைய மிக்க சிறப்பைக்
> கொடிய வினையை உடையவனாகிய யான்,
> புகழ்கின்றவிதம் சிறிதும் அறிகிலேன்.
>
> புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
> பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
> கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
> வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
> செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்..........30
>
> புல்லாகியும் பூடாகியும், புழுவாகியும்,மரமாகியும்,
> பலவிலங்குகள் ஆகியும், பறவையாகியும்,பாம்பாகியும்,
> கல்லாகியும்,மனிதராகியும், பேயாகியும்,
> பூதகணங்களாகியும்,
> வலிய அசுரராகியும், முனிவராகியும்,தேவராகியும்
> இயங்குகின்ற இந்த அசையாப் பொருள், அசையும்
> பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே...
>
>
> எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்;எம்பெருமான்,
> மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்றுவீடுற்றேன்,
> உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
> மெய்யா,விமலா,விடைப்பாக,வேதங்கள்
> 'ஐயா!' என ஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே,....35
>
> எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான்
> மெலிவடைந்தேன்,எம்பெருமானே!
> உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக்
> கண்டு, இப்பொழுது வீடு பேறு பெற்றேன்,
> நான் உய்யும்படி என் மனத்தில்
> பிரணவ உருவாய் நின்ற
> மெய்யனே! மாசற்றவனே!
> இடப வாகனனே!1 மறைகள்
> ஐயனே! என்று துதிக்க, உயர்ந்து ஆழ்ந்து,
> பரந்த நுண்பொருளானவனே!
> (எங்கும் வியாகபமாய் நிற்பவனே)
>
> வெய்யாய், தணியாய்,இயமான னாம்விமலா,
> பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
> மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்சுடரே,
> எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே,
> அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே..........40
>
> வெம்மையானவனே தண்மையானவனே,
> ஆன்மாவாய் நின்ற குற்றமற்றவனே!
> நிலையாத பொருள்கள் யாவும் என்னைவிட்டு
> ஒழியக், குருவாய் எழுந்தருளி,
> மெய்யுணர்வு வடிவமாய் விளங்குகின்ற
> உண்மை ஒளியே!
> எவ்வித அறிவும் இல்லாத எனக்கு
> இன்பத்தைத் தந்த இறைவனே!
> அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற
> நல்ல ஞானமயமானவனே!
>
>
> ஆக்கம் அளவுஇறுதி இல்லாய், அனைத்துலகும்
> ஆக்குவாய், காப்பாய்,அழிப்பாய், அருள்தருவாய்;
> போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பின்;
> நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே,
> மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே,................45
>
> தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே!
> எல்லா உலகங்களையும்
> படைப்பாய், நிலைபெறச் செய்வாய்,
> ஒடுக்குவாய் அருள்செய்வாய்!
> பிறவியிற் செலுத்துவாய், அடியேனை
> உன்தொண்டில் புகச் செய்வாய்!
> மலரின் மணம் போல, நுட்பமாய் இருப்பவனே!
> தொலைவில் இருப்பவனே,
> அண்மையில் இருப்பவனே!
> சொல்லும், மனமும் கடந்து நின்ற
> வேதப்பொருளாய் உள்ளோனே!
> கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச்
> சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
> பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்,
> நிறங்கள்ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
> மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்
> தன்னை ..............50
>
> கறந்த பாலும் சர்க்கரையும், நெய்யும் கூடினது போல
> சிறந்த அன்பரது மனத்துள் இன்பம் மிகுந்து நின்று
> எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே!
> *4 ஐந்து நிறங்களை உடையவனே!
> தேவர்கள் துதிக்க, அவர்களுக்கு
> ஒளிந்திருந்தவனே! எம்பெருமானே!
> வலிய வினையை உடையவனாகிய என்னை..
> *4 நிறங்கள் ஐந்து . இறைவன் ஐந்து பூதங்களிலும்
நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள்
> உண்டு. அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும்,
நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும்
> வானுக்குப் புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும்.
> ''பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிகப்பு வன்கால்
கருமை, வளர்வான் தூமம்''என்பது உண்மை
> விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும், ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நிறம் உடையதாய்
> இருப்பதையும் இதுகுறிக்கும் என்பர்.
> ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்; அகோரம்-கருநிறம்;
வாமம்-குங்குமம் அல்லது செந்நி
றம்;
> சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம்.
>
> மறைந்திட மூடிய மாய இருளை
> அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
> புறந்தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
> மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
> மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,.....55
>
> மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய
> (இருள் மாய) ஆணவம் கெடுதற் பொருட்டு,
> புண்ணியம், பாவம் என்கின்ற, அறுதற்கு
> அருமையாகிய கயிற்றினால் கட்டப்பெற்று,
> வெளியே தோலால் மூடி, எவ்விடத்தும் புழுக்கள்
> நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,
> மலம் ஒழுகுகின்ற *5 ஒன்பதுவாயிலை
> உடைய உடம்பாகிய குடிசை,
> குலையும்படி, ஐந்து புலன்களும் வஞ்சனை
> பண்ணுதலால்,
> .*5. செவி இரண்டு, கண் இரண்டு,நாசி இரண்டு, வாய்,
கருவாய், எருவாய்
>
> விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
> கலந்தஅன்பு ஆகிக் கசிந்துஉள் உருகும்
> நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி,
> நிலந்தன்மேல் வந்தருளி நீழ்கழல்கள் காஅட்டி
> நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்........60.
>
> உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே,
> மாசற்றவனே! உன் பொருட்டுப்
> பொருந்தின அன்பை உடையேனாய்,
> மனம் கசிந்து உருகுகின்ற
> நன்மை இல்லாத சிறியேனுக்குக் கருணை புரிந்து
> பூமியின் மேலே எழுந்தருளி,
> நீண்ட திருவடிகளைக் காட்டி,
> நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத்,
>
>
> தாயிற் சிறந்த தயாவான தத்துவனே,
> மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே,
> தேசனே, தேனார் அமுதே, சிவபுரனே,
> பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே,
> நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சம்கெடப்.........65
>
> தாயினும் மேலாகிய தயையை உடையவனாய்
> நின்ற உண்மைப்பொருளே!
> களங்கமற்ற, சோதியாகிய மரத்தில்
> பூத்த பூப்போன்ற சுடரே!
> குருமூர்த்தியே!(ஒளியாய் இருப்பவனே!)
> தேனும், அரிய அமுதமும் போல இனியவனே!
> பாசமாகிய தொடர்பை அறுத்துக்
> காக்கின்ற ஆசிரியனே!
> அன்போடு கூடிய அருளைச் செய்து,
> என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழியப்..
>
> பேராது நின்ற பெருங்கருணைப் பேர்ஆறே
> ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே,
> ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே,
> நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே,
> இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே,.70
>
> பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய ஆறே!
> தெவிட்டாத அமிர்தமே!
> எல்லையில்லாத பெருமானே!
> ஆராயதார் மனத்தில் மறைகின்ற
> (உன்னை உணராதவர்க்குத் தோன்றாமலே
> இருக்கின்ற) ஒளியை உடையவனே!
> என் மனத்தை நீர்போல் உருகச்செய்து,
> என் அரிய உயிராய் நின்றவனே!
> சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே!
> அன்பர் பொருட்டு அவற்றை உடையவனே!
>
> அன்பருக்கு அன்பனே,யாவையுமாய் அல்லையுமாம்
> சோதியனே, துன்இருளே,தோன்றாப் பெருமையனே
> ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே,
> ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே,
> கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார்
> தங்கருத்தின் ......................75
>
> அன்பர்களிடத்து அன்புள்ளவனே, கலப்பினால்
> எல்லாப் பொருள்களும் ஆகித்,
> தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற
> பேரொளியை உடையவனே !
> (சக்தியாய் நிற்பவனே! ஒளி-சக்தி;
> சிவஞான சித்தியார்)
> செறிந்த (நிறைந்த) இருளானவனே!
> புறத்தே வெளிப்படாத
> பெருமையுடையவனே!*6
> முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி,
> அவையல்லாதும் இருப்பவனே!
> இழுத்து (வலிய வந்து உலகியல் வாழ்வைத்
> தடுத்து) என்னை ஆட்கொண்டருளிய
> எனக்கு ஞானத்தந்தையான பெருமானே!
> மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து
> அறிபவர் மனத்தினாலும்.
>
> *6 துன்னிருளே தோன்றாப் பெருமையனே. உயிர்கள் போல்
ஆணவமலத்தால் அணுகப் பெறாத
பெருமைஉடையவனே
> என்றும் பொருள் சொல்லப்பெறுகிறது..
> நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே,
> போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே,
> காக்கும்எம் காவலனே, காண்பரிய பேர்ஒளியே,
> ஆற்றின்ப வெள்ளமே, அத்தாமிக் காய்நின்ற
> தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்
> உணர்வாய்,......(80)
>
> எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே!
> ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத,
> இயல்பாகவே நுட்பமாகிய அறிவே!
> போதலும் வருதலும்(இறப்பும் பிறப்பும்), நிற்றலும்
> (இன்ப துன்ப நுகர்ச்சிகளும்)
> இல்லாத புண்னியனே!(அறவடிவினனே!)
> எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே!
> காண்டற்கரிய(உயிர்கள் உன்னுடைய நிலையை
> முழுவதும் காண்பதற்கு இயலாத) பெரிய ஒளியே!
> மகாநதி போன்ற இன்பப் பெருக்கே!
> (பேரின்பத்திற்குக் காரணமானவனே!)
> அப்பனே! மேலோனே!*7 நிலைபெற்ற
> தோற்றத்தை (தோற்றம்-காட்சி) உடைய,
> விளங்குகின்ற ஒளியாகியும்,
> சொல்லப் பெறாத நுட்பமாகிய அறிவாகியும்...
> *7மிக்கு ஆய்நின்ற -மிகுந்து வளர்ந்து நின்ற என்ரும்
பொருள்சொல்வர்.
>
> மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
> தேற்றனே, தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
> ஊற்றான உண்ணார் அமுதே உடையானே,
> வேற்று விகார விடக்குஉடம்பின் உள்க்கிடப்ப
> ஆற்றேன்எம் ஐயா! அரனே!ஓ என்றென்று...85.
>
> மாறுபடுதலை உடைய உலகத்தில்,வெவ்வேறு
> பொருளாய்க் காணப்பெற்று வந்து
> அறிவாய் விளங்கும்
> தெளிவானவனே! தெளிவின் தெளிவே!என் மனத்துள்
> ஊற்றுப் போன்ற, பருகுதற்கு அரிய
> அமிர்தமே! தலைவனே!
> வெவ்வேறு விகாரங்களை உடைய
> ஊனால் ஆகிய உடம்பின்
> உள்ளே தங்கிக் கிடக்கப்
> பொறுக்கமாட்டேன் எம் ஐயனே! சிவனே!
> ஓலம் என்றுமுறையிட்டு...
>
> போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
> மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே,
> கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
> நள்இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே,
> தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே,...90
>
> வணங்கி, நின் திருப்புகழை ஓதியிருந்து,
> அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள்,
> மறுபடியும் இவ்வுலகில் வந்து
> வினைப்பிறவியை அடையாமல்,
> வஞ்சகத்தை உடைய ஐம்புலன்களுக்கு இடமான
> உடம்பாகிய கட்டினை அறுக்க
> (அடியோடு நீக்க) வல்லானே!
> நடுஇரவில் (செறிந்த இருளில்) மிகுந்து
> (சூக்கும) நடனம் செய்கின்ற இறைவனே!
> திருத்தில்லையில் ஆடல் வல்லானே!
> தென் பாண்டி நாட்டை உடையவனே!
>
> அல்லற் பிறவி அறுப்பானே,'ஓ' வென்று
> சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
> சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்,
> செல்வர் சிவபுரத்தின்; உள்ளார் சிவனடிக்கீழ்ப்
> பல்லோரும் ஏத்தப் பணிந்து..........(95)
> ()()திருச்சிற்றம்பலம்()()
>
> துன்பப் பிறவியை அறுப்பவனே!
> ஓலம் என்று முறையிட்டுத்
> துதித்தற்கு அருமையானவனை, யான் அறிந்த அளவில்
> போற்றித் துதித்து,
> அவனது திருவடியின்மீது
> பாடிய பாட்டின் பொருளை
> அறிந்து துதிப்பவர்,
> சிவநகரத்தில் உள்ளவராய்ச், சிவபெருமன்
> திருவடிக்கீழ்ச் சென்று எல்லோரும் துதிக்க,
> வணங்கி நிலை பெறுவர்.
> ()()திருச்சிற்றம்பலம்.()()


-----------------------------------------------------------------------------
---
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
-----------------------------------------------------------------------------
---







Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT

[Non-text portions of this message have been removed]