From muguntharaj@y... Mon May 03 02:02:42 2004
Return-Path:
X-Sender: muguntharaj@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 14078 invoked from network); 3 May 2004 09:02:42 -0000
Received: from unknown (66.218.66.167)by m22.grp.scd.yahoo.com with QMQP; 3 May 2004 09:02:42 -0000
Received: from unknown (HELO storm.vqbn.com) (202.73.32.49)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 3 May 2004 09:02:42 -0000
Received: (qmail 22128 invoked by uid 512); 3 May 2004 09:02:39 -0000
Received: from muguntharaj@y... by storm by uid 509 with qmail-scanner-1.20 (trophie: 6.810-1005/883/63687. sophie: 3.04/2.18/3.79. fileformat: ???. Clear:RC:1(203.121.60.194):. Processed in 0.250546 secs); 03 May 2004 09:02:39 -0000
Received: from unknown (HELO yahoo.com) (mugunth@r...@203.121.60.194)by 0 with SMTP; 3 May 2004 09:02:39 -0000
Message-ID: <40960AA7.7030906@y...>
Date: Mon, 03 May 2004 17:02:31 +0800
User-Agent: Mozilla Thunderbird 0.5 (Windows/20040207)
X-Accept-Language: en-us, en
MIME-Version: 1.0
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamilinix@yahoogroups.com, RaayarKaapiKlub@yahoogroups.com
Content-Type: text/plain; charset=windows-1252; format=flowed
Content-Transfer-Encoding: 8bit
X-eGroups-Remote-IP: 202.73.32.49
From: Mugunth
Subject: Another ThamiZha! project started !
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj

அன்புடையீர்,
வின் ஜிப் என்ற செயலியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதைக்கொண்டு கோப்புக்களைக்குறுக்கலாம் மற்றும் குறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் கோப்புக்களை மீட்கலாம்

ஆனால் இந்த வின்ஜிப் என்ற செயலி மூடிய நிரல் செயலி மற்றும் அது இலவசமாக கிடைப்பதும் இல்லை
{இதன் விலை ஒரு பயனர் லைசன்ஸ் => 29 அமெரிக்க டாலர் ). பார்க்க; http://www.winzip.com/

வின்ஜிப்புக்கு மிகச்சிறந்த மாற்றாக பரி நிரல் உலகில் ஒரு செயலி உண்டு. அதுதான் 7-ஜிப் !

இது ஒரு பரி நிரல். மற்ற பரிநிரல்கள் போல் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம் , மற்றவர்களுக்கு
கொடுக்கலாம் மற்றும் மாற்றியும் அமைக்கலாம்.

பார்க்க இதன் வலைத்தளத்தை; http://www.7-zip.org/

7-zip , 41 மொழிகளில் தற்பொழுது கிடைப்பதாக அதன் வலைத்தளத்தில் தகவல் இருந்தது. ஆனால்
தமிழ் அதில் இல்லை. இது தெரிந்த பின்னும் தமிழா குழு சும்மா இருப்போமா?

நம் இளஞ்செழியனும், பாண்டினும் 7-ஜிப்பை தமிழாக்குவதற்கு களத்தில் குதித்துவிட்டனர். அதில் ஓரளவு
வெற்றியும் அடைந்துவிட்டனர்.
இப்பொழுது தமிழ் மொழிக்கோப்பை தனியாக 7-ஜிப்ல நிறுவி தமிழில் இச்செயலியை பாவிக்கலாம்.
விரைவில் தமிழ்க்கோப்புடனே 7-ஜிப் வெளிவர அந்த செயலியின் உருவாக்குனருக்கு தமிழ்க் கோப்பு
அனுப்பப் பட்டுள்ளது.

அது சம்மந்தமாக நண்பர் இளஞ்செழியன் அனுப்பிய மடலைக் கீழே காணலாம்.....

=================
- mail encoded in tscii -

அன்புடையீர், வணக்கம்.

7-zip என்ற காப்பகப்படுத்தும் (archiving) பரிமென்பொருள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.
அது இப்பொழுது தமிழிலும் கிடைக்கும் சாத்தியம் உள்ளது! சற்றுமுன்புதான் தமிழ்ப்படுத்தினேன்.
7-ஜிப்பின் சொந்தக்காரரான திரு இகோர் பாவ்லோவிற்கு எனது படைப்பை அனுப்பியுள்ளேன்.

சுட்டிகள்:
1) http://www.7-zip.org/ (7-ஜிப் வலைத்தளம்)
2) http://www.developer.thamizha.com/7zip/7-zip.jpg (தமிழ்படுத்தப்பட்ட
7-ஜிப்பின் 'screenshot')

இவ்வேளையில், இப்பரிமென்பொருளைப் பற்றி தன் கட்டுரையின் வழி எனக்கு அறிவித்த திரு
டைனோவிற்கு நன்றிகள்.

அன்பன்,
இ.வே.

பி.கு. 1) நண்பர் முருகபாண்டியன் பாரதியும் 7-ஜிப்பை தமிழாக்கியுள்ளதாக சற்றுமுன்புதான் எனக்கு
மின்னஞ்சல் வழி அறிவித்தார்! இருவரும் கலந்தாலோசித்து, உள்ள தவறுகளைத் இணைந்து திருத்தியபின்
மென்பொருள் வெளியிடப்படும்.
2) extract ... இதற்கு 'வெளிக்கொணர்' என்ற வார்த்தையை விட நல்ல ஒரு தமிழ் வார்த்தை
யாருக்காவது தெரியுமா?