From naga ganesan@h... Thu May 13 07:07:28 2004
Return-Path:
X-Sender: naga ganesan@h...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 31222 invoked from network); 13 May 2004 14:07:27 -0000
Received: from unknown (66.218.66.172)by m20.grp.scd.yahoo.com with QMQP; 13 May 2004 14:07:27 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 13 May 2004 14:07:26 -0000
Received: from [66.218.66.115] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 13 May 2004 14:06:44 -0000
Date: Thu, 13 May 2004 14:06:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To: <20040507041600.62186.qmail@w...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5412
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.76
From: "naa ganesan"
X-Originating-IP: 66.141.0.236
Subject: Re: Somadeva's Niithi work
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naa ganesan

--- In agathiyar@yahoogroups.com, banukumar rajendran
wrote:
> ஐயா,
>
> அந்த வலைப்பதிவில்...
> <<> scholar has universal appeal and rises above caste and
> creed. It is wholly devoted to welfare of a state.>>>>
>
> இக்கருத்து குறளுக்கும் பொருந்தும்.
>

அன்பின் பானுகுமார்,

விரிவாக, ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் எழுதியிருக்கிறார்கள்.
அவர் கட்டுரைகள், தொகுதி 7 வாசித்துப்பாருங்கள்.

"ஜைனரும் தமிழ் இலக்கியமும்" என்ற கட்டுரையை
ஆழ்ந்து வாசித்தேன்.

" வைதிக சமயங்களுக்கு ஊன்றுகோலாக இருந்த அந்தணர்களுக்கும்
சைனர்களுக்கும் கொள்கையில் பல வேறுபாடுகள் உண்டு.
அவற்றுள் இரண்டு வேறுபாடுகளைச் சிறப்பாகக் கூறலாம்.
முதலாவது, உயிர்க்கொலை நிகழ்ந்த வேத வேள்வியைச்
சைனர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. "அவி சொரிந்து
ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று"
என்றனர் வள்ளுவர். அதனை நிந்தனையும் செய்தார்கள் என்பது
ஞானசம்பந்தர் திருவாக்குகளால் அறியலாம். இரண்டாவது,
பிறப்பினால் மக்களுக்குள் வேற்றுமையில்லை என்றனர்,
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில்
வேற்றுமையான்" என்று வள்ளுவர் கூறினர்."

"இதனால் சாதியின் கடூரமான தன்மை நிலை தளர்ந்துவிட்டது"
என்பார் வையாபுரியார். இதனை மேலதிகமாக தமிழர்க்கு
அறிவைப் பின்னர் புகட்டினோர் பலர் - இராமனுசர், குணங்குடியார்,
வள்ளலார், பெரியார், பாரதியார், ....

----

தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியராய் விளங்கிய வையாபுரியார்
தமிழின் 5 சிரோரத்நங்களில் 4 சமணர் கொடை என்பார்.
கன்னடமும் கால்கொள்ள சமணர் பங்கு பெரிது.

" தமிழ் மொழியில் இலக்கிய சிரோரத்னங்களாக உள்ளன
ஐந்து நூல்கள். அவை சிந்தாமணி, கம்பராமாயணம்,
பெருங்கதை, சிலப்பதிகாரம், திருக்குறள் என்பவை. அவற்றுள்
நான்கு நூல்களின் பெருமையைக் குறித்து ஒரு புலவர்,

திருத்தக்க மாமுனி சிந்தாமணி கம்பர்
விருத்தக் கவித்திறமும் வேண்டேம் - உருத்தக்க
கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் குறளணுகேம்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?

என்று கூறினர். இந்நான்கு நூல்களையும் கற்று அனுபவியாது
விட்டால் ஒருவன் குருடனுக்குச் சமானம் ஆனவனென்றும்,
அவனுக்குச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும்
அல்லது உதிக்காமற் போனாலும் ஒன்றுதான் என்றும்
இச்செய்யுள் கருதுகிறது. மேற்கூறிய ஐந்து நூல்களுள்
கம்பராமாயணம் ஒன்று தவிர ஏனைய நான்கும் சைனர்கள்
நமக்குத் தந்த இலக்கியச் செல்வங்களாம்."

தமிழில் ஏட்டுச் சுவடிகளை அச்சிட வேண்டும் என்று
அரிய நூல்களை முதலில் தந்தவர் யாழ் சைவ அறிஞர்
ஸ்ரீமத் ஆறுமுக நாவலரவர்கள். அவரது பணிகள்
உவேசா அவர்களை இதில் மேலும் ஈடுபட ஊக்கியது.
எஸ் பொன்னுத்துரை கட்டுரை ஒன்றில் நாவலர்
இளங்கோ காவியத்தைச் (வையாபுரி போலவே) சமணம் என்றதை
வாசித்தேன். நாவலர் நூல்களைப் படித்தவர்கள்
அவர் சிலம்பு பற்றி எழுதும் கருத்துக்களை
அறியத் தரமுடியுமா?

எஸ்.பொ. செவ்வி:
http://www.thisaigal.com/oct/uniinterview.html
(இக்கட்டுரை வலைக்கண்ணை எளிதில் கூகுளின் ஏதுவால்
கண்டேன். தமிழன்பர்கள் தங்கள் கட்டுரைகளைப்
பலருக்கும் பயன்படும் முகமாக யூனிகோடு எழுதுருவில்
வைக்கவேண்டும்.)

அன்புடன்,
நா. கணேசன்


> <<<மிகப் பழங்காலத்தில் சமணம், பௌத்தம், லோகாயதம்,
> எல்லாம் "ஹிந்துயிசம்" என்று பெருத்த வேறுபாடு இல்லை.>>>
>
> ஜைன வரலாற்றை நோக்குங்கால், பகவான் நேமிநாதர் கடைக்காலத்தில் தான்
> பெரிய இருவேறு பிரிவுகளாக, சிரமண மதங்களாகவும், வைதீக
> மதங்களாகவும் பிரிந்தன. அதற்கு முன்பு வரை ஒரே தரிசனமாகவே இருந்தன.
> ஒன்றை சம்யக் திரிஷ்டி என்றும் மற்றொன்றை மித்யா திரிஷ்டி* என்றும்
> அழைக்கப்பட்டது.
> அதனால், பொதுவான கருத்துக்கள் எல்லா மதத்திலும் இருப்பது புதிது அல்ல.
>
>
> இரா.பானுகுமார்,
> சென்னை.
>
>
> --- naa_ganesan wrote:
> >
> > முனைவர் ஜ்யோத்ஸ்னா காமத்தின் ஒரு வலைப்பதிவு:
> >
> http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=699
> >
> > படித்துப் பாருங்கள், சிந்தனையைத் தூண்டும்.
> > சோமதேவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணர்.
> > யஸஸ்திலக காவியம் என்பதைச் சகம் 889ல்
> > (அதாவது கி.பி. 959) இயற்றியதாக அவரே சொல்கிறார்.
> > இதில் யசோதரனின் பட்டமகிஷி அமிர்தமதி.
> > தமிழிலும் அமிர்தமதி (அல்லது அமிர்தபதி) என்று
> > ஒரு காவியம் இருந்திருக்கிறது. இதனை
> > யாப்பருங்கல உரையில், "சிந்தாமணி, சூளாமணி,
> > குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதிஎன்றிவற்றின் முதற்
> > பாட்டு வண்ணத்தான் வருவன" என்ற வாக்கியத்தால்
> > உணரலாகும். அமிர்தபதிக் காப்பியம் கிடைக்குமா?
> > தமிழறியும் பெருமாள் கதை அமிர்தமதியின் கதையை
> > அடியொற்றி எழுந்ததாகச் சொல்வர்.
> >
> > சோமதேவர், உரைகாரர் நேமிநாதர் சமணர்கள்.
> > ஆனால், நீதிவாக்கிய அமிர்தம் அர்த்த சாஸ்த்திரம்
> > கருத்துக்களை உள்ளடக்கியது என்கிறார் திருமதி. காமத்.
> > மிகப் பழங்காலத்தில் சமணம், பௌத்தம், லோகாயதம்,
> > எல்லாம் "ஹிந்துயிசம்" என்று பெருத்த வேறுபாடு இல்லை.
> > சமணர்கள் ராமாயணம், பாரதம் இவற்றைத் தம் போக்கில்
> > நூல்களாக்கியுள்ளனர். நம் வள்ளுவப் பெருந்தகை
> > சமணப்பற்றாளர் என்பதை அ. சக்கரவர்த்தி நயினார்,
> > ஐ. மகாதேவன், மயிலை. சீனி. வேங்கடசாமி எனப் பலர்
> > எழுதிய கருத்துக்களை எழுதியிருக்கிறேன். மனுவின்
> > சில கருத்துக்களோடு ஒத்தும் சிலவற்றோடு முரணியும்
> > பொதுமறையை யாத்துள்ளார் என்று கொள்ளலாம்.
> > இதனை உட்கொண்டு, திருவள்ளுவமாலை,
> > "முப்பாற்குப் பாரதம் சீராம கதைமனுப் பண்டைமறை
> > நேர்வன மற்றில்லை நிகர்".
> >
> > சோமதேவர் நூலில் பல கருத்துக்கள் உண்டு, அவை
> > அவர் சமணர் என்பதற்குத் தடையில்லை. ஒரு நல்ல உதாரணம்.
> >
> > அன்புடன்,
> > நா. கணேசன்
>
>
>