From jaybee@t... Sat May 15 05:07:22 2004
Return-Path: X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 66465 invoked from network); 15 May 2004 12:07:22 -0000
Received: from unknown (66.218.66.167)by m23.grp.scd.yahoo.com with QMQP; 15 May 2004 12:07:22 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.162)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 15 May 2004 12:07:21 -0000
Received: from smtp.tm.net.my ([172.22.0.23])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HXR002208ARPK@i...> foragathiyar@yahoogroups.com; Sat, 15 May 2004 20:06:27 +0800 (SGT)
Received: from l8k6j3 (pjc-72-43.tm.net.my [202.188.72.43])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 182002)) with SMTP id <0HXR005KB8AI0P@i...> foragathiyar@yahoogroups.com; Sat, 15 May 2004 20:06:27 +0800 (SGT)
Date: Sat, 15 May 2004 19:34:16 +0800
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040515193416.00731a8c@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee Subject: Re: Naanaadesi - Re: Rasavaadham....Rasamaana Vaadham - Re:[agathiyar] Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
>
>>--- In agathiyar@yahoogroups.com, JayBee wrote:
>>>
>நாகர்கோயில் கோட்டாற்றில் இருக்கும் விநாயகருக்கும்
>>> 'தேசி விநாயகர்' என்ற பெயருண்டு.
>நாகர்கோயிலைச் சேர்ந்த கவிமணி
>>> தேசிகவிநாயகம் பிள்ளைக்கு அந்த விநாயகரின் பெயரைத்தான்
>
>>> வைத்திருக்கிறார்கள்.
>>> சிங்கம்புணரிக்கு அருகாமையில் திண்டுக்கல் காரைக்குடி
>>>
>சாலையோரத்தில் ஒரு பெரிய அரசமரத்தின்கீழ் ஒரு தேசிவிநாயகர்
>>> இருக்கிறர்.
>>>
>சிங்கம்புணரியிலேயே ஒரு தேசிவிநாயகர் இருக்கிறார்.
>>
>At 11:05 AM 5/14/04 +0000, N.Ganesan wrote:
>>வணிகர்கள் பற்றிய
>கல்வெட்டுக்களில்
>>நானாதேசி என்ற பட்டம் வருகிறது.
>>வணிகச் சாத்துகள் தாவளம் அமைக்கும்
>>இடங்களில்
>தேசி விநாயகர் பிரதிட்டை
>>செய்தார்களா?
>>
>>அன்புடன்,
>>நா. கணேசன்
>
>
>At 07:53 AM 5/15/04 +0800, JayBee wrote:
> 'நானாதேசி' என்பது ஒரு வணிகக்குழு. அதற்குத்
>'திசை ஆயிரத்தைந்நூற்றுவர்' என்ற பெயரும் உண்டு.
> அருவியூருக்கு 'நானாதேசிப்பெருந்தெரு' என்ற
>பெயரும் உண்டு.
> இன்னும் விபரம் இருக்கிறது. சற்று நேரத்தில் எழுதுகிறேன்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழு பெரியது.
அது Guild of Merchants என்று மேலைநாடுகளில் அழைக்கப்பட்ட
வணிகக்குழுக்களைப் போன்றது. ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தினர் மட்டுமே இருக்கமுடியும்.
'கொடும்பாளூர் மணிக்கிராமத்தார்' என்னும் வணிகக்குழுவும்
இருந்தது.
'அஞ்சுவண்ணத்தார்' என்று இன்னொரு அமைப்பும் இருந்தது.
அவர்கள் சோனகர் எனப்படும் அராபியர்என்று கருதப்படுகிறார்கள்.
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் குழுவினரின் கல்வெட்டு
தென் சுமாத்ராவில் உள்ள பலெம்பாங்(Palembang) என்னும் நகரின்
அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பலெம்பாங் நகரம்தான்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவிஜயம் என்னும் பெயருடன்
விளங்கிய பெருநகரம். அதுதான் ஸ்ரீவிஜயப் பேரரசின் தலைநகரம்.
ஸ்ரீவிஜயப்பேரரசு என்பது இக்காலத்து மலாயா, தென்தாய்லந்து,
சுமாத்ரா, ஜாவாவின் ஒரு பகுதி முதலியவையும் இன்னும் அவற்றின்
அருகிலுள்ள ஆயிரக்கணக்கான தீவுகளும் அடங்கிய பெரிய பிரதேசம்.
கொடும்பாளூர் மணிக்கிராமத்தாரின் கல்வெட்டு ஒன்று
தென் தாய்லந்தின் தாக்குவாப்பா என்னும்இடத்தில் கண்டுபிடிக்கப்
பட்டிருக்கிறது. அவனிநாரணம் என்னும் தடாகம் ஒன்றை அங்கிருந்த
அவணிநாரணப் பெருமாள் கோயிலில் வெட்டியிருப்பதைக் குறிக்கும்
கல்வெட்டு அது. தாக்குவாப்பா என்னும் ஊர் பழங்காலத்தில் தக்கோலம்
என்ற பெயரில் விளங்கியது.
இந்த ஊர்கள் இரண்டுமே ராஜேந்திர சோழதேவரின்
கடற்படையெடுப்புக்கு ஆளாகியவை.
இக்கல்வெட்டுக்கள் இரண்டுமே தமிழ் மொழியில் இருக்கின்றன.
திசையாயிரத்தைந்நூற்றுவர் குழுவினருக்கு நானாதேசிகள்
என்ற பெயரும் உண்டு.
இரண்டு பெயர்களிலும் 'திசை' சம்பந்தப்பட்டிருப்பது புலப்படும்.
அருவியூருக்குக் 'குலசேகரன்பட்டினம்' என்றும் 'நானாதேசிப்
பெருந்தெரு' என்றும் பெயர்கள் உண்டு.
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் தமிழகத்தின் வேறு சில இடங்களிலும்
மையங்கள் வைத்திருந்தனர். அவர்களின் தெய்வங்களில் ஒன்று
'ஐம்பொழில் நாச்சியார்' எனப்படுவது. ஐம்பொழில் என்பது ஹைதராபாத்
அருகே இருக்கும் ஐயவோளே Aihole என்னும் சாளுக்கியர்களின்
முக்கிய இடமாகும்.
பிரான்மலை அவர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
அங்கு சொக்கநாதர் கோயில் என்னும் கோயில் இருக்கிறது. அங்கு
அவர்கள் கூடி வணிகப்பொருள்களின்மீது இடப்படும் வரியை
நிர்ணயிக்கும் கல்வெட்டு ஒன்று அங்கிருக்கிறது.
மிக நீளமான கல்வெட்டு அது.
அதைப் படியெடுக்க நான்கு நாட்கள் ஆகின.
அவர்களுக்கென்று பிரசஸ்தி எனப்படும் மெய்க்கீர்த்தி
வைத்திருந்தார்கள்.
முக்கியமான் கல்வெட்டுத்தான். அதன் ஆரம்பப்பகுதி
சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அடுத்தாற்போல தமிழில் தொடரும்.
இவர்கள் இருந்த சில ஊர்களில் மட்டுமே தேசிவிநாயகர்
இருக்கிறார்.
இன்னும் இருந்திருக்கக்கூடும். பெயர் மறைந்துபோயிருக்கலாம்.
வேறு பெயரில் இப்போது இருக்கக்கூடும்.