From dotthusg@y... Mon May 17 19:42:25 2004
Return-Path: X-Sender: dotthusg@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 70889 invoked from network); 18 May 2004 02:42:25 -0000
Received: from unknown (66.218.66.166)by m22.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2004 02:42:25 -0000
Received: from unknown (HELO smtp101.mail.sc5.yahoo.com) (216.136.174.139)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2004 02:42:25 -0000
Received: from unknown (HELO personal-42boc0) (dotthusg@2... with login)by smtp101.mail.sc5.yahoo.com with SMTP; 18 May 2004 02:42:23 -0000
MIME-Version: 1.0
Message-Id: <40A97886.000001.02136@PERSONAL-42BOC0>
Date: Tue, 18 May 2004 10:44:22 +0800
X-Mailer: IncrediMail (2501361)
References: <20040518023314.52025.qmail@w...>
To: X-FID: FLAVOR00-NONE-0000-0000-000000000000
X-Priority: 3
X-eGroups-Remote-IP: 216.136.174.139
From: "dotthusg" Subject: Re: [agathiyar] Paavam 2
X-Yahoo-Group-Post: member; u=171318375
X-Yahoo-Profile: dotthusg
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
ஓம்.வணக்கம் , திரு பானுகுமார் ராஜேந்திரன்,
நல்ல வரைவும் விளக்கமும், தொடர்க,வாழ்க.
அன்புடன்வெ.சுப்பிரமணியன்
-------Original Message-------
வருணிக்க வார்த்தைகளுக்குப் பலம் போதாது என்பதுதான்
அனேகாந்த வாதத்தின் அடிப்படை.
இப்போது அனேகாந்தம், சப்தபங்கி மற்றும் ஸ்யாத் வாதம் அறிவோம்.
( மன்னிக்கவும்! அன்பர்களே!. இங்கே விளக்க போவது ஜைனக் கோட்பாடு.
தயவுசெய்து தாங்கள் சார்ந்த சமயத்தை அளவுக்கோலாக வைத்து இதைப்
பார்க்கவேண்டாம். என் குறைமதியைக் கொண்டு முழுமதியை ஆராய
நினைக்கிறேன். முடிந்தவரை பழகுத் தமிழில் விளக்க முற்பட்டுள்ளேன்).
உதாரணமாக, முக்கனிகளை எடுத்துக் கொள்வோம்:
வாழைப்பழம் "இனிப்பாக" இருக்கின்றது.
மாம்பழம் "இனிப்பாக" இருக்கின்றது.
பலாப்பழம் "இனிப்பாக" இருக்கின்றது.
இங்கு " இனிப்பு" என்ற ஒரே சொல்லால் மூன்று பழங்களின் சுவையை
வருணிக்கின்றோம். "இனிப்பு" என்பது ஒரே சொல். ஆனால் இந்த மூன்று
பழங்களின் "இனிப்பு" சுவையிலும் வேறுபாடு இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு
பழத்திற்கும் வெவ்வேறு சுவை, அல்லது மூன்று இனிப்பும் ஒரே இனிப்பு இல்லை.
அதிலும், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வோம். திண்டுக்கல்லில் கிடைக்கும்
சிறுமலைப் பழமும் வாழைப்பழமே, ஈரோடில் கிடைக்கும் ரஸ்தாளி பழமும்
வாழைப்பழமே. ஆனால், இரண்டின் சுவையும் வேறானவை. இடத்தால் பொருள்
ஒன்றாக இருந்தாலும் சுவை வேறுபடுகிறது.
மேலும், காலத்தால் சுவை வெவ்வேறாக இருப்பதை உணருகின்றோம். சற்றுக்
காயாக இருக்கும் பழத்தின் சுவை வேறுபடும். "அதே" வாழைப்பழம் அதே
"இனிப்பு"- ஆனால் "காய்" தன்மையோடு "இயல்பாக" இருப்பதால் சுவை
வேறுபடுகிறது.
ஆதலால்,
திரவியம்=பொருள்= substance
ஷேத்ரம் =இடம் = Place
காலம் =காலம் = Time
பாவம் =இயல்பு = Characteristic intrinsically
ஒரு பொருளை இந்த நான்கு பார்வைகளில் பார்க்கும் போது குணம் வெவ்வேறாக
இருப்பதை உணருகின்றோம். வேறுபாடு இருந்தாலும், பழம் வாழைப்பழம்தானே.
அடிப்படை ஒன்றே. ஆனால் வார்த்தைகள் பொருளால், இடத்தால், காலத்தால்,
இயல்பால் வேறுபடும்.
இதனால் "இனிப்பு"த் தன்மையை எடுத்துச் சொல்ல பலம் வாய்ந்ததாகயில்லை.
இவற்றை அனுவத்தாலேயே முழுமையாய் உணர முடியும். இருந்தாலும் வார்த்தைகளால்
சொல்ல வேண்டிய கடமையிருப்பதால் "ஸ்யாத்வாத"த்தால் இந்த இனிப்பைச்
சொல்ல முற்படும் முயற்சியையே ஜைன சித்தாந்தம் "ஸ்யாத்வாதம்" ,
"சப்தபங்கி"# என்று அழைகின்றது. (#"சப்தபங்கி" க்கும் மாதானுபங்கிக்கும்
தொடர்புண்டு (;-)).
சியாத் வாதம் என்பது வார்த்தைகளின் நியதி, தன்மை. இந்த தன்மை எல்லா
வருணனைகளிலும் அடிப்படையாகச் செல்லும் நூலிழை. சப்தபங்கி என்பது ஒவ்வொரு
பொருளின் குணவிஷேங்களை சொல்லும் அப்பட்டமான சொற்கள். இழையில்
சேர்ந்து நிற்கும் வார்த்தை மலர்கள்.
அனேகாந்தம் என்பது இந்த இழையைத் தேர்ந்தெடுக்கும், மலர்களைத்
தேர்ந்தெடுக்கும், எந்த இழையையும் பயனற்றது, பொருளற்றது என்று ஒதுக்காத,
எந்த மலரையும் மணமற்றது என்று ஒதுக்காத பரந்த மனபக்குவம்.
[Non-text portions of this message have been removed]