From navlesa@y... Tue May 18 02:30:59 2004
Return-Path:
X-Sender: navlesa@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 61062 invoked from network); 18 May 2004 09:30:55 -0000
Received: from unknown (66.218.66.172)by m9.grp.scd.yahoo.com with QMQP; 18 May 2004 09:30:55 -0000
Received: from unknown (HELO n13.grp.scd.yahoo.com) (66.218.66.68)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 18 May 2004 09:30:58 -0000
Received: from [66.218.67.248] by n13.grp.scd.yahoo.com with NNFMP; 18 May 2004 09:30:36 -0000
Date: Tue, 18 May 2004 09:30:35 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1760
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.68
From: "navlesa"
X-Originating-IP: 202.54.51.2
Subject: SiththargaLum Siththum (was) Re: Rasavadham
X-Yahoo-Group-Post: member; u=158409856
X-Yahoo-Profile: navlesa


அன்புள்ள அபிராமி பட்டர்,

----------------------------------
>>>>
சுத்த சித்து என்பது அப்படியில்லை. ஒரு மாம்பழத்தை வரவழைக்கவேண்டும்
என்றால் அந்த மாம்பழத்தின் அணுக்கூட்டம் எப்படி இருக்கிறதோ அதே
போல் அணுக்களைச் சேர்த்து உருவாக்குவது. எல்லாம் வல்ல பேரறிவின்
தன்மையை அறிந்தவர்கள் தாம் சுத்தசித்தைச் செய்யமுடியும். தன்னைப் பேரறிவி
ன் அங்கமாகக் கண்டவர்களால் மட்டுமே இதைச் செய்யமுடியும். அகத்தியர், போகர்
போன்ற சித்தர்கள் இது போன்ற சித்துக்களையே செய்துகாட்டினார்கள். ஜே.பி ஐயா
சொன்னதுபோல் "Inner Alchemy" யைச் சரியாகச் செய்தவர்கள். இவர்களுக்கு
ரசவாதம் ஒன்றும் பெரியவிஷயம் இல்லையே.
--------------------------------------------

1. முதலில் இந்த இழையில் பேசவந்த போது உங்கள் ரசவாத பரிசோதைகளைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சில பொருட்களை ஆரம்பமாக கொண்டு
எப்படி அவைகளை ரசவாதம் மூலம் தங்கமாக மாற்றி விடலாம் (உங்கள் முயற்சியில் 10%
தங்கம் கிடைத்ததாகவும் தகவலுடன்) என்று எழுதியிருந்தீர்கள். அதற்குத் தான் நான் பி
ன்னூட்டு கொடுத்தேன்.

2. அகத்தியர், போகர் இவர்களும் சில ஆரம்பப் பொருள்களைக் கொண்டு எப்படி
தங்கமாக மாற்றலாம் என்றுதான் சொல்கிறார்கள். அது இன்றைய " வெறும்" வேதியியல்
கருந்துக்களின்படி இயலாத காரியம் என்றே நான் சொல்லவந்தது.

3.மற்றபடி மேற்கண்ட "சித்துக்கள்" எல்லாம் எனக்குத் தெரியாது என்று முதலிலேயே கூறி
விட்டேன். அமாம், இப்படி "அகச் சித்து" இருப்பவர்கள் ஒரு பொருளை
வரவழைக்க அதன் "அணுக்கூட்டம் எப்படி இருக்கிறதோ அதே போல் அணுக்களைச்
சேர்த்து உருவாக்குவது" அறிந்தவர்கள் தாமே? ஏன் அவர்களும் எதாவது மூலப் பொருளி
லிருந்தே ஆரம்பிக்கிறார்கள்? (எத்தகைய மூலப் பொருள்கள் என்று உங்களுக்கே தெரி
யும். நான் சொல்லப் போவதில்லை. வேண்டுபவர்கள் போகர் 700 படித்து அறிந்து
கொள்ளட்டும்)

அன்புடன்
அருள்