From kkumar1@p... Wed May 19 20:12:26 2004
Return-Path: X-Sender: kkumar1@p...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 17981 invoked from network); 20 May 2004 03:12:26 -0000
Received: from unknown (66.218.66.217)by m24.grp.scd.yahoo.com with QMQP; 20 May 2004 03:12:26 -0000
Received: from unknown (HELO n34.grp.scd.yahoo.com) (66.218.66.102)by mta2.grp.scd.yahoo.com with SMTP; 20 May 2004 03:12:24 -0000
Received: from [66.218.66.141] by n34.grp.scd.yahoo.com with NNFMP; 20 May 2004 03:11:44 -0000
Date: Thu, 20 May 2004 03:11:43 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2478
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.102
From: "N. Kumar Kumarappan" X-Originating-IP: 38.23.1.70
Subject: Thamizha 1.0! - CD Release in San Francisco
X-Yahoo-Group-Post: member; u=148998941
X-Yahoo-Profile: kkumarfremontusa
அன்புடையீர்:
தமிழா! தொண்டர் குழுவின் அயராத உழைப்பினாலும் மலேசியத்
தமிழ் நண்பர்களின் விடாத முயற்சியினாலும் வெளியான
"தமிழா! 1.0" மென்பொருட்கள் நிறைந்த குறுந்தட்டை சான்
பிரான்ஸிஸ்கோவில் சான் பிரான்ஸிஸ்கோ வாழ் தமிழர்கள்
வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம். இக் குறுந்தட்டை சான்
பிரான்ஸிஸ்கோ Consul General
உயர் திரு H.H.S.விஸ்வனாதன் அவர்கள் வெளியிட கலிபோர்னியா
தமிழ்க் கழகத்தின் தலைவி திருமதி. வெற்றிச்செல்வி
இராஜமாணிக்கம் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந் நிகழ்சி
கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் பள்ளி ஆண்டுவிழாவன மே
22ம் தேதி விழாவில் நடக்க இருக்கின்றது. இவ் வெளியீட்டின்
பின், அவ்விழாவிலேயே ஆர்வமுள்ள தமிழ்க் கணினி
ஆர்வலர்களும் அவர் தம் குழந்தைகளும் இக்குறுந்தகட்டை
பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்படும்.
இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி உயர்திரு கலாம் அவர்கள் video
conference மூலம் கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின்
குழந்தைகளுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஜனாதிபதியும் இடைக் கால ஏற்பைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்திய அரசியல் நிலை காரணமாக அவரால் இம்முறை
video conference மூலமாக குழந்தைகளுடன் கலந்துரையாட
முடியாது என்று இரு நாட்களுக்கு முன்தான் செய்தி வந்தது. இதை
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குழந்தைகளுக்கும், இந்த
ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த எங்களுக்கும் இது பெரும்
ஏமாற்றம் தான். ஆயினும் விழாவும் குறுந்தட்டு
வெளியீட்டு நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடக்க உள்ளது.
இக் குறுந்தட்டு வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்துள்ளது,
இலங்கையில் நடந்துள்ளது, இங்கு அமெரிக்காவில்
நடக்கின்றது. ஆயினும் தமிழகத்திலிருந்து ஒரு செய்தியையும்
காணோமே. அங்குதானே இது முக்கியமாக
நடக்க வேண்டும். தமிழகத்து நண்பர்களே, இது நடக்க வழி
செய்யுங்கள்.
அன்புடன்
குமார்
--------------------------------
ஏப்ரல் 21ம் தேதி திரு முகுந்தராஜ் எழுதிய மடலின் ஒரு
பகுதி:
"தற்பொழுது தமிழா! மென்பொருட்களை குறுந்தட்டு வடிவில் மலேசி
யாவின் 'தமிழ் அறவாரியம்' என்ற அமைப்பின் மூலம் வெளியி
ட்டுள்ள நிலையில். உலகெங்கும் உள்ள நன்பர்கள் அவர்கள்
பகுதியில் இத்தகைய நிகழ்ச்சி மற்றும் குறுந்தட்டு வெளியீட்டை
செய்து கணித்தமிழைப் பரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழா! குறுந்தட்டுவேண்டுவோர் தனி அஞ்சல் எழுதுங்கள்.
இந்தியாவில் உள்ளவர்கள் கோவையிலுள்ள
நண்பர் 'தமிழ்பயனி' சிவாவுடன் தொடர்புகொள்ளவும். அவரின்
மின்னஞ்சல்; siva@t...
இணையம் வழியாக அவரின் அங்காடி பகுதியிலும் தமிழா
குறுந்தகட்டை வாங்க முடியும்;
http://www.tamilpayani.com/angadi/catalog/index.php