From arull@t... Sat May 22 18:56:28 2004
Return-Path:
X-Sender: arull@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 33236 invoked from network); 23 May 2004 01:56:28 -0000
Received: from unknown (66.218.66.216)by m8.grp.scd.yahoo.com with QMQP; 23 May 2004 01:56:28 -0000
Received: from unknown (HELO ipop2.tm.net.my) (202.188.0.162)by mta1.grp.scd.yahoo.com with SMTP; 23 May 2004 01:56:28 -0000
Received: from smtp.tm.net.my (av5.secure.tmnet [172.20.0.22])by ipop2.tm.net.my(iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 8 2003))with ESMTP id <0HY5003Z88A7WF@i...> for agathiyar@yahoogroups.com;Sun, 23 May 2004 09:32:31 +0800 (SGT)
Received: from microsof (bth-200-17.tm.net.my [219.92.200.17])by av5.tm.net.my (iPlanet Messaging Server 5.2 (built Feb 21 2002))with SMTP id <0HY5007V58A1LO@a...> for agathiyar@yahoogroups.com;Sun, 23 May 2004 09:32:31 +0800 (SGT)
Date: Sun, 23 May 2004 09:20:39 +0800
To: agathiyar@yahoogroups.com
Message-id: <000001c44064$69f52fc0$11c85cdb@microsof>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4133.2400
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4133.2400
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: Arull
Subject: pAvanAsam 8
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Profile: sathiv

Blankதிருச்சிற்றம்பலம்
பொது

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்

5 ஆம் திருமுறை

பாவநாசத் திருக்குறுந்தொகை

நன்று நோற்கில்என் பட்டினி யாகில்என்
குன்றம் ஏறிஇருந்தவம் செய்யில் என்
சென்று நீரிற் குளித்துத் திரியில்என்
என்றும் ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே.

தெளிவுரை: நோன்பு முதலான விரதங்கள் ஆற்றி
உபவாசம் இருந்தால் என்ன? மலையின் உச்சியில் ஏறி
அமர்ந்து ஏகாந்தமாக அரிய தவத்தை மேற்கொண்டால்
என்ன? புனித தலங்கள் சென்று தீர்த்தங்களில் நீராடி
வழிபட்டால் என்ன? சிவ நாமத்தை ஓதி உரைத்தால்
அல்லாது மேன்மை இல்லை.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.