From jaybee@t... Mon May 24 04:37:16 2004
Return-Path:
X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 65281 invoked from network); 24 May 2004 11:37:15 -0000
Received: from unknown (66.218.66.172)by m4.grp.scd.yahoo.com with QMQP; 24 May 2004 11:37:15 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.162)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 24 May 2004 11:37:15 -0000
Received: from smtp.tm.net.my ([172.22.0.23])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.2 HotFix 1.21 (built Sep 82003)) with ESMTP id <0HY700H8RTO1YR@i...> foragathiyar@yahoogroups.com; Mon, 24 May 2004 19:09:37 +0800 (SGT)
Received: from user (sp-103-1.tm.net.my [210.186.103.1])by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 1.6 (built Oct 182002)) with SMTP id <0HY700676TNT9N@i...> foragathiyar@yahoogroups.com; Mon, 24 May 2004 19:09:37 +0800 (SGT)
Date: Mon, 24 May 2004 19:12:28 +0800
In-reply-to:
X-Sender: jaybee@p...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20040524191228.0075ac70@p...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <40AF1D5D.000001.02332@PERSONAL-42BOC0>
X-eGroups-Remote-IP: 202.188.0.162
From: JayBee
Subject: Re: [agathiyar] Re: agattiyam
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555

At 11:16 AM 5/22/2004 +0000, you wrote:
>--- In agathiyar@yahoogroups.com, "dotthusg" wrote:
>> ஓம்.
அன்புடைய ஐயா வணக்கம்.
>> நெல்லை மாவட்டம் தாம்பிரவருணி ஆற்றின் கரையினில்
>>அமைந்திருக்கும்
அம்பாசமுத்திரம் நகரின் மையத்தில்
>> அகத்தியரின் கோயில் இருக்கின்றது.அருள்மிகு லோப
முத்திரையுடன்
>>அகத்தியர் அருள்பாலிக்கின்றார். அங்கு
>> நெசவு செய்வோர் கக்களையர் என்று அழைக்கப்
படுவர்.
>
>கைக்கோளர் என்பது மருவியிருக்கிறது. செங்குந்தம் படைகளில் ஏந்தலால்.


'கக்யாளர்' என்றும் 'கைக்கிளவர்' என்றும்கூட சொல்லாட்சி
உண்டு. 'செங்குன்றர்' அல்லது 'செங்குந்தர்' என்றும் குறிப்பிடப்படுவர்.
ஆனால் 'கைக்கோளர்' என்பதே சரியானசொல். 'தெரிஞ்ச கைக்கோளப்
பெரும்படை' என்பது சோழர்களின் படைப்பிரிவுகளில் இருந்தது.
செங்குந்தம் அல்லது செங்குன்றம் என்பது ஒரு வகை ஈட்டி.
மிகவும் நீளமாக இருக்கும்.
Pikesmen, Spearmen என்றெல்லாம் அழைக்கப்பட்ட படைப்பிரிவாக
இது இருந்திருக்கவேண்டும்.
Greek Phalanx என்னும் கிரேக்க அணிவகுப்பின் முன்னணியில்
இப்படையே இருக்கும். கேடயங்களை முன்னால் இருத்தியவாறு ஈட்டிகளை
நீட்டிக்கொண்டு முன்னேறும்.
Assyrian படையிலும் இவ்வணி இருந்தது. அவர்களின் புடைப்புச்
சிற்பங்களில் காணலாம்.
சீனர்களின் Pike நீளமாக இருந்ததுடன் அதன் ஒரு முனையில்
குறுவாள், குத்தீட்டி, கட்டாரி ஆகியவை கலந்த கலவையாக ஓர்
ஆயுதத்தலை பொருத்தப்பட்டிருக்கும்.
பிற்காலத்தில் இருபத்தைந்து அடி நீளம்வரைக்கும் ஈட்டியின்
நீளம் இருந்தது.
பொதுவாக அணியில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்திலிருந்து பத்து
வரிசைகள் இருந்தன.
ஒவ்வொரு வரிசையில் உள்ள வீரர்களும் அணியின் முன்பக்கம்
குறிப்பிட்ட தூரத்தில் ஈட்டிகளின் முனைகள் இருக்குமாறு நீட்டிப்
பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு வரிசையிலும் ஐந்நூறு வீரர்கள் இருந்து,
அதே மாதிரி ஐந்து வரிசைகள் இருந்தால் அணியின் முன்புறமாக
இரண்டாயிரத்து ஐந்நூறு ஈட்டிகளின் முனைகள் இருக்கும்.
ஈட்டி நீளமாக இருப்பதால் ஒரு முறை அல்லது இரண்டு முறையே
குத்துவதற்குப் பயன்படும். அதன்பின்னர் சிறிய குத்தீட்டி, கழு, கைக்குந்தம்,
வேல், சூலம், திரிசூலம், போன்றவை பயன்படும்.
எதிரி அணிகள் நெருங்கியபின்னர் குறுவாட்கள் கொண்டு
போரிடுவார்கள்.
ஈட்டிப்படையினரின் பயன்குறைவாக இருப்பதுபோல் தோன்றும்.
ஏனெனில் அவர்கள் காலாட்கள்தாம்.
ஆனால் அந்தப் பிரிவு, எதிரிகளின் அணியைப் பிளப்பதற்கும்,
பின்னால் தள்ளுவதற்கும், எதிரியின் குதிரைப்படையின் பாய்ச்சலைத்
தடுப்பதற்கும் பயன்பட்டது.
'வாள் தாங்கிய கைக்கோளர்' என்றும் கல்வெட்டுக்களில் காணப்
படுகிறது. அந்தப் பிரிவினருடையது வாட்பிரிவாக இருந்திருக்கும்.
சாதாரணமாக 'அடல்வாள்' என்னும் நீளம்அதிகமில்லாத
வாள் வைத்திருந்தார்கள். இரு படைகள் பொருதும்போது வீரர்களிடையே
நெருக்கமும் நெருக்கடியும் மிகுந்து விளங்கும். அந்த மாதிரி சூழ்நிலைகளில்
நீளமான வாட்களை இஷ்டப்பட்ட மாதிரி வீசமுடியாது. அதற்குக் குறுகிய
வாள்தான் நல்லது. நம்முடைய 'அடல்வாள்' நடுவில் வளைந்திருந்தது.
ஒரு முழத்திலிருந்து ஒன்றரை முழ நீளமே இருந்தது. கூர்மையும்
பதமும் மிகுந்தது. அதனை வீசும் விதத்தில் வீசினால் சீவித்தள்ளிவிடும்.
நீளமான வாட்களுக்கு உரிய பயனும் இடமும் வேறு. அவையும்
பயன்பட்டன.


>
>ஆங்கிலத்தில் சிவராஜபிள்ளையும்,
>துடிசை கிழார் (அ. சிதம்பரனார், துடியலூர், கோவை)
அகத்தியர் வரலாறு
>கழகப் பதிப்பாகவும் வெளியிட்டார்கள். கமில் சுவெலபில்லின் நூல்களில்
>எல்லாம்
அகத்தியம் பற்றி விரிவாக உள்ளது.


ஆம்.
ஆனால் வலையுலகில் எங்கும் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


>
>மகாயான சூத்திரங்களில் ஒன்று கண்டவியூக சூத்திரம். அதில் பொதியில் (போதல)
>மலையில்
அவலோகிதர் வாழ்வதாக உள்ளது.


நீங்கள் குறிப்பிடும் அந்த 'போதல'('Potala',Potalaka) எங்கு இருக்கிறது?




முதலில் ரா. ராகவையங்கார்
>தமிழ் வரலாறு (அண்ணாமலைப் பல்கலை) நூலில் இதை
எழுதுகிறார்.
>(அப்போது அண்ணாமலையில் அச்சகம் அமையவில்லை. தன் நண்பர்
>விபுலானந்தரின் யாழ்நூல்,
ரா.ரா தமிழ்வரலாறு, ... இவற்றை
>சித்பவானந்தரின் தபோவன அச்சகம்
பதிப்பித்தது.)
>
>
>அன்புடன்,
>நா. கணேசன்


பல ஆண்டுகளுக்கு முன்னர் அகத்தியர்கள் குறித்து ஆய்வு
நூலொன்று வந்தது. அதில் இருபத்தேழு அகத்தியர்களைப் பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன.
பாவம். கேள்வி எழுப்பியவர் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.
அவருக்காக ஆங்கிலத்திலும் எழுதினால் நல்லது.

அன்புடன்

ஜெயபாரதி

>
>
>
>> திருவிழாவின் எட்டாம் நாள் திருநாள் மிகவும்
>> சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு
வீட்டினிலிருந்தும் அரிசி கொண்டுவந்து கோயிலின்
>முன்னர்
>> பொங்கலிட்டு(வெறும் வெள்ளைச் சாதம்
மட்டுமே- சர்க்கரை சேர்ப்பதில்லை.)
>>கோயிலின் ஒரு அறையில் மொத்தமாகக் குவித்து அம்பாரமாகக்
கொட்டி
>>வழிபாடியற்றிக் கதவினைச் சாத்திவிட்டு ஒரு நாள்விட்டு
>> மறுநாள் கதவினைத்திறந்து
பார்த்தால் அம்பாரச் சோற்றினில் ஒருநீண்ட
>>பிரம்பின் அடிவிழுந்த கோடு
>> தென்படும். அதனை
அகத்தியர் அங்கீகரித்துள்ளார் என்பது ஐதீகம். அந்த அம்பாரம்
>மக்களிடையே பங்கிட்டுப்
>>
பகிர்ந்தளிக்கப்படும். அந்த சாதம் அப்படியே காயவைத்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகி
>ன்றது.வழ்வின்
>>
செழுமையும் குடும்ப ஆரொக்கியமும் அந்தப் பிரசாத்தத்தின் பயன்பாடு.
>> அன்புடன்
>> வெ.
சுப்பிரமணியன்,
>
>
>------------------------ Yahoo! Groups Sponsor
---------------------~-->
>
>