From captain mgr@h... Tue May 25 09:17:54 2004
Return-Path:
X-Sender: captain mgr@h...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 26838 invoked from network); 25 May 2004 16:17:53 -0000
Received: from unknown (66.218.66.172)by m24.grp.scd.yahoo.com with QMQP; 25 May 2004 16:17:53 -0000
Received: from unknown (HELO n6.grp.scd.yahoo.com) (66.218.66.90)by mta4.grp.scd.yahoo.com with SMTP; 25 May 2004 16:17:52 -0000
Received: from [66.218.67.134] by n6.grp.scd.yahoo.com with NNFMP; 25 May 2004 16:17:28 -0000
Date: Tue, 25 May 2004 16:17:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1440
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.90
From: "sgindfamily"
X-Originating-IP: 202.156.2.162
Subject: ithu eppadi irukku (157) yaanai
X-Yahoo-Group-Post: member; u=140618253
X-Yahoo-Profile: sgindfamily

இது எப்படி இருக்கு (157) யானை
==============================

கருத்த உடல்.
கல்லால் ஆன, குட்டி யானை.
கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது.
ஓர் ஆள் உயரத்திற்கும் மேல் இன்னும் சற்று உயரம்.
அவற்றின் கண்கள் மூடி இருக்கின்றன.
பர்மா நடனமணிகளின் கண்களைப் போன்ற நீண்ட கண் இமை.
நூற்றுக்கணக்கான சீன, இந்திய பக்தர்கள் சூழ்ந்துள்ளனர்.

ஆமாம்.
அவர் வினாயகப் பெருமான் தான்.
இந்திய கைவினைஞர்கள் செதுக்கிய தெய்வச் சிலையல்ல அது.
பர்மியர்கள் செதுக்கிய அற்புதக் கடவுள். சிங்கப்பூர் சீனர்கள் வாங்கிவந்துள்ளனர்.
ஆனால், தமிழ் இந்துத் தொண்டர்கள்தான் பூசாரிகளாகப் பணியாற்றுகின்றனர்.

அந்த அற்புத வினாயகர், கடற்கரைக்கு மிக அருகில் அமர்ந்து அந்த அலைகளின்
ஓசையில் மெய்மறந்திருப்பது போல் தோன்றுகிறது.
அவரைப் பார்க்கப் பார்க்க நம் உள்ளத்திலும் அந்த அலைகளைப் போல பலவித
இன்பங்கள் மோதுகின்றன.

அதன் அருகில், உள்ளுரில் செய்யப்பட்ட மற்ற இந்து தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

இது ஒரு பெரும் அதிசயமா ? இன்னும் இருக்கிறது.

இசுலாம் மக்களின் 'கோவில்' ஒன்றும் பக்கத்திலேயே இருக்கிறது.
இசுலாமியர்களின் மதகுரு (கிராமத்) ஒருவரின் உடல் அங்கு அடக்கம்
செய்யப்பட்டுள்ளதாம்.
அதனை சீனர், மலாய்க்காரர், இந்துக்களும் வணங்குகின்றனர்.

சீனர்களின் 'கோவில்' ஒன்றும் பக்கத்திலேயா அமைந்துள்ளது.

இக்கோவில்களை சுவரோ, வேலியோ எதுவும் பிரிக்கவில்லை.
ஒரு தெய்வத்தை வணங்கும் எவரும் மற்ற இரண்டு தெய்வங்களை வணங்காமல் வீடு
திரும்புவதில்லை.

உலகமுழுதும் இப்படி இருக்கக்கூடாதா ?

============
மாகோ-சிங்கை