From jaybee555@ucRsZ-f4VxQ7YPAHBMEbuPngeLInEOtyr-NgXXoPaK1qgkTVbSaUsQuFwNNiqpD1XnI1 KOZ6CfP7Di3.yahoo.invalid Sat Jun 23 22:24:04 2007
Return-Path: X-Sender: jaybee555@ucRsZ-f4VxQ7YPAHBMEbuPngeLInEOtyr-NgXXoPaK1qgkTVbSaUsQuFwNNiqpD1XnI1 KOZ6CfP7Di3.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 19563 invoked from network); 24 Jun 2007 05:24:04 -0000
Received: from unknown (66.218.66.72) by m51.grp.scd.yahoo.com with QMQP; 24 Jun 2007 05:24:04 -0000
Received: from unknown (HELO n12c.bullet.sp1.yahoo.com) (69.147.64.111) by mta14.grp.scd.yahoo.com with SMTP; 24 Jun 2007 05:24:04 -0000
Received: from [216.252.122.216] by n12.bullet.sp1.yahoo.com with NNFMP; 24 Jun 2007 05:22:52 -0000
Received: from [66.218.69.1] by t1.bullet.sp1.yahoo.com with NNFMP; 24 Jun 2007 05:22:52 -0000
Received: from [66.218.67.199] by t1.bullet.scd.yahoo.com with NNFMP; 24 Jun 2007 05:22:52 -0000
Date: Sun, 24 Jun 2007 05:22:51 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 69.147.64.111
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 60.48.241.206
From: "jaybee555" Subject: A Question On Parakrama Pandya's Domains
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=3cdoXa-PqFjcUq42f20nOXV3X885eELLeynfpWv5 AQet9LR
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42724
அன்பர்களே,
பராக்கிர பாண்டியர் கட்டுரையை விஸ்வாக்காம்ப்லெக்ஸில்
படித்த அன்பர் ஷங்கர் அதில் இருந்த மேப் பற்றி கேட்டார்.
பாண்டி மண்டலத்தில் ஐம்பதில் ஒரு பங்குதான் பராக்கிரம
பாண்டியரின் நாடு என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டார். ஆனால்
மேப்பில் உள்ள பிரதேசம் பெரிதாயிருக்கிறதாகச் சொன்னார்.
மேப் ஒன்றுதான் ட்ரேஸிங். மற்றதெல்லாம் Free-hand.
பாண்டிமண்டலம் சரியாக அமைந்துவிட்டது. ஒருவேளை
கையை ஸப்கான்ஷியஸ் கண்ட்ரோல் செய்ததோ என்னவோ.
பாண்டியர்களின் ஆட்சிப் பிரதெசங்களை மிகவும் சிறியதாக
வரையவிடவில்லை.
துருக்கர்படையெடுப்பு ஆட்சிக்குப் பின்னர் பாண்டியர்கள்
ஆங்காங்கு இருந்துவந்தனர். ஆனால் முன்னர் குறுநில
மன்னர்களாக இருந்தவர்கள், புதிதாகக் குறுநில மன்னர்களாக
ஆனவர்கள் முதலியவர்களும் அங்கெல்லாம் இருந்தனர்.
அவர்களில் பலர் வலிமை மிக்கவர்கள். விஜயநகரத்தினரின்
பிரதிநிதிகளாகிய அமரநாயக்கர்கள் என்னும் நாட்டுத்
தலைவர்களும் இருந்தனர்.
நெல்லைப் பாண்டியர்ளுடைய நாடு இப்போதுள்ள
நெல்லை மாவட்டம் முழுவதிலும் ஆரம்பத்தில் இருந்தது.
பின்னர் அமரநாயக்கர்களைப் பாளயக்காரர்களாக
ஆக்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் தலைமையான நாயக்கர்களை
விஜயநகரத்து அரசு நியமித்தது. அவ்வாறு மதுரை, செஞ்சி,
தஞ்சை, இக்கேரி ஆகிய இடங்களில் அவர்கள் இருந்தனர்.
அமரநாயக்கர்களும் குறுநில மன்னர்களும் பாண்டியர்களின்
பிரதேசங்களில் பல பகுதிகளை எடுத்துக்கொண்டனர்.
அந்தக் காலத்தில் முடியுடை மன்னர்களுக்கென்று
Standing Army பெரியதாக ஏதும் இராது. Feudal Levies என்ற
முறையில் குறுநில மன்னர்கள், நாட்டுத் தலைவர்கள்
ஆகியோரிடமிருந்து படைகள் பெறுவார்கள். குறுநில
மன்னர்களில் பலர் படைபலம் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
அந்த நிலையில் மன்னர்கள் ஒன்றும் செய்ய இயலாத நிலைமை
விளங்கியது. எங்காவது போர் என்றால் யாராவது ஒரு குறுநில
மன்னருக்குத் தண்டு கொடுத்து அவர்களை அனுப்புவார்கள்.
அவர்கள் இன்னும் சில குறுநில மன்னர்களைச் சேர்த்துக்
கொண்டு போருக்குச் செல்வார்கள்.
மேலும் விஜயநகரத்திலிருந்து தெலுங்கர்கள் அலை
அலையாக தமிழகத்துக்கு வந்தனர். குடியேறினர். பல அமர
நாயக்கர்களும், அனைத்து நாயக்கர்களும், பாளையக்காரர்களும் தெலுங்கர்கள்.
பதினான்காம் பதினைந்தாம் பாண்டியர் பிரதேசங்களில்
பெரும்பகுதி அப்பிக்கொள்ளப்பட்டுவிட்டன.
அப்போது நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதி
பாண்டியர்களின் பிரதேசமாக விளங்கியது.
அதையும் பஞ்ச பாண்டியர் - ஐவர் ஆண்டுவந்தனர்.
ஒரு பாண்டியரின் பிரதேசம் சிறியதாக இருக்கும்.
மதுரையின் முதல் நாயக்கராகிய விஸ்வநாத நாயக்கர்
பஞ்ச பாண்டியர்களுடன் போரிட்டார். பின்னர் அவர்களில்
ஒருவருடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட்டு வென்று
பாண்டியர்களைத் தம் கீழ்க்கொண்டுவந்தார்.
பின்னர் அநத பிரதேசமும் சுருங்கிவிட்டது.
பதினாறாம் நூற்றாண்டில் இன்னும் சுருங்க ஆரம்பித்தது.
அப்போதெல்லாம் பாண்டியர்களின் பிரதேசங்கள்
நெல்லை மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் வடக்கு மையம்
ஆகிய வட்டாரங்களில் இருந்தன.
எட்டையாபுரம், பாஞ்சாலம்குரிச்சி போன்ற பாளையங்கள்
பாண்டியர்களின் பிரதேசங்களில் பெரும்பகுதியைப் பிடித்துக்
கொண்டன.
பதினேழாம் நூற்றாண்டில் தென்காசி கரிவலம்வந்த
நல்லூர் போன்ற இடங்களில் சிறு சிறு பிரதேசங்களில்
அவர்கள் ஆட்சி புரிந்தனர்.
அங்கேயேதான் அவர்களின் வம்சத்தினர் வாழ்கின்றனர்.
இப்போதும், இன்றும்.