From jaybee555@CRHSIL1n6ODVwXQZ3pVHBPfmRdp15 5Ubd30tqVVAVnr1N7f viVTwdwlGMwFsUmsmYmTTEEU6Ruwo7gNKs.yahoo.invalid Tue Jun 26 17:10:28 2007
Return-Path:
X-Sender: jaybee555@CRHSIL1n6ODVwXQZ3pVHBPfmRdp15 5Ubd30tqVVAVnr1N7f viVTwdwlGMwFsUmsmYmTTEEU6Ruwo7gNKs.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 29306 invoked from network); 27 Jun 2007 00:10:28 -0000
Received: from unknown (66.218.67.36) by m57.grp.scd.yahoo.com with QMQP; 27 Jun 2007 00:10:28 -0000
Received: from unknown (HELO n11d.bullet.scd.yahoo.com) (66.218.67.60) by mta10.grp.scd.yahoo.com with SMTP; 27 Jun 2007 00:10:28 -0000
Received: from [66.218.69.5] by n22.bullet.scd.yahoo.com with NNFMP; 27 Jun 2007 00:10:15 -0000
Received: from [66.218.67.201] by t5.bullet.scd.yahoo.com with NNFMP; 27 Jun 2007 00:10:15 -0000
Date: Wed, 27 Jun 2007 00:10:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 66.218.67.60
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 218.111.6.21
From: "jaybee555"
Subject: Nine Billion Names of God -#2
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=3paaTibvagC drZrZTsLoQI4-Jxl1FnmT3qCg2AqNfECahHo
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42741


அன்பர்களே,

"அனுப்புவதைப் பொட்டுப் பொட்டெண்டு அனுப்பிப்
போடுங்கோ", என்று முதல் மடலில் ஒருவர்.
ஆகையால் இந்த மடலிலும் இதைத் தொடர்ந்துவரும்
அடுத்த மடலிலும் கதையைக் காணலாம்.
படியுங்கள்................

"நாங்கள் இறைவனின் பெயர்கள் என்னென்னவெல்லாம்
இருக்கமுடியும் என்ற தேடலில் ஈடுபட்டிருக்கிறோம்".

இதற்கென நாங்கள் ஒரு நெடுங்கணக்கைAlphabet)
ஏற்படுத்தியிருக்கிறோம். அந்த நெடுங்கணக்கில் ஒன்பது
எழுத்துக்கள் இருக்கின்றன.

இந்த ஒன்பது எழுத்துக்களை மாற்றி மாற்றிப்
போடுவதன்மூலம் அந்தப் பெயர்களை நாம் எழுதிக்
கொள்ளமுடியும். இதையேதான் நாங்கள் கடந்த முன்னூறு
ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். எழுத்துக்களை மாற்றி
மாற்றிப் போட்டு எழுதிக்கொண்டே வருகிறோம். இதே
வேகத்தில் எழுதிக்கொண்டே போனால் இன்னும் பதினையாயிரம்
ஆண்டுகளில் முடித்துவிடுவோம்.

"இந்தத் திட்டத்தால் பயன் என்ன?" என்று வாக்னர்
கேட்டார்.

"இறைவனுடைய நாமங்கள் அந்த எழுத்துக் கோர்வை
களுக்குள் விளங்ககூடும். அல்லா, யெஹோவா, புத்தா, சிவா,
விஷ்ணு என்று பல பெயர்கள் இருக்கின்றன. அவை போக
நாமாவளி என்னும் பெயர் கோவைகளும் இருக்கின்றன. அவை
நூறு, ஆயிரம், லட்சம் என்ற வகையில் அமைந்துள்ளன.
ஆனால் இறைவனின் பெயர்கள் இன்னும் அதிகமானவை.
அவற்றையெல்லாம் கண்டறிய வேண்டித்தான் இந்தத்
திட்டம்.
Systematic Permutation and Combination
முறையின் மூலமாக நாங்கள் இதைச் செய்துவருகிறோம்.

"அதாவது 'அஅஅஅஅஅஅஅஅ' என்னும் கூட்டிலிருந்து
'ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்' வரைக்கும் காம்பினேஷன் கொடுக்கப்போகிறீர்களாக்கும்?"
என்று வாக்னர் கேட்டார்.

"அப்படியேதான். ஆனால் அந்த 'அஅஅஅஅஅஅஅஅ',
'ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்' இவற்றையெல்லாம் நீக்கிவிடவேண்டும். அதுபோலவே
'ஙஞச்டப்றகஜக்' என்ற மாதிரியான காம்பினேஷன்கள் எல்லாமே
நீக்கப்பட்டுவிடவேண்டும். எந்த ஒரு எழுத்தும் மூன்று தடவை ஒன்றை
அடுத்து ஒன்றாக வரக்கூடாது".
"ஒரேழுத்துப் பெயர்களுக்கு ஒன்றும் செய்யவேண்டியதில்லை.
ஈரெழுத்திலிருந்து ஒன்பது எழுத்துப் பெயர்கள் வரைக்கும் இந்த
Permutaion Combination-ஐப் பயன்படுத்துவோம்".

"மனிதர்களுக்குத்தான் இது கஷ்டமான வேலை. ஆனால்
உங்கள் automatic sequence computer-ருக்கு இது சுலபம்.
அதை ஒழுங்காக நம் தேவைக்கெற்றவாறு ப்ரோகிராம் செய்து
விட்டோமானால் அதுவே ஒவ்வொரு பெயரையும் எழுதிக்கொண்டு
பிரிண்ட் செய்துகொடுத்துவிடும். எங்களுக்குப் பதினைந்தாயிரம்
ஆண்டுகள் பிடிக்கக்கூடிய வேலையை அது ஆயிரம் நாட்களில் செய்துமுடிக்கக்கூடும்.

வேக்னர் தம்மையே மறந்தார். கீழே பல அடிகளுக்குக்
கீழே மான்ஹாட்டனின் சாலைகளில் கேட்டும் வாகன இரைச்சல்
களையும் மறந்தார்.
ஏதோ எங்கோ உலகின் மிக உயரத்தில் பனிமூடிய
இடத்தில் சீவர ஆடை மொட்டைத்தலையர்கள், இரவு பகலாக
ஆள் மாற்றி ஆள் பூர்ஜ இலைகளிலும் பட்டைகளிலும் ஓலைகளிலும்
பட்டுத்துணிகளிலும் குனிந்த தலை நிமிராமல் இறைவனுடைய
திருநாமங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மனக்கண்களில்
அந்தக் காட்சி தெரிந்தது.
"நாங்கள் கணினியை மாற்றி அமைத்துவிடமுடியும்.
ஆனால் அதை நிறுவுவதற்கும் காபந்து பண்ணுவதற்கும்
ஓட்டுவதற்கும் என்ன செய்வது? அதை திபேத்திற்கு அனுப்புவதும்
முடியாதே?"

"அதைப் பற்றியெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
உங்கள் கணினியின் பகுதிகள் சிறியவைதாம். அவற்றைச் சிறு
விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடலாம். அதனால்தான் நாங்கள்
உங்களுடைய கணினியைத் தேர்ந்தெடுத்தோம்".

வாக்னரின் புருவங்கள் உயர்ந்தன.

எந்த அளவுக்கு இவர்கள் நிகழ்கால அறிவியல்துறையையும்
அறிந்து, எதிர்கால காம்ப்பியுட்டேஷன் போன்றவற்றையும்
தெளிவாக சிந்தித்து வைத்திருக்கிறார்கள்!

லாமா தொடர்ந்தார்:
"நீங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள். அங்கிருந்து
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்".
"மூன்று மாதங்களுக்கு உங்களுடைய இரண்டு கணினி
எஞ்சினியர்களை அனுப்பிவைக்கவேண்டும். அந்தத் திட்டத்தை
நல்ல முறையில் நடத்துவதற்கு அவர்கள் தேவை".

"அதெல்லாம் செய்துவிடுவோம். இரண்டே இரண்டு
விஷயங்கள்தாம் பாக்கி.........", என்று இழுத்தார், வாக்னர்.

"நீங்கள் அமர்ந்திருக்கும் ஜன்னலின் எதிர்புறத்துள்ள
பாங்கில் எங்கள் மடத்தின் அக்கவுண்ட் இருக்கிறது.
அந்த அக்கவுண்டில் உள்ள தொகை கொண்ட ஸ்டேட்மெண்ட்
இதோ இருக்கிறது. வேண்டுமானால் பேங்குக்கே டெலிஃபோன்
செய்து கேட்பதானாலும் கேட்கலாம்", என்றார் லாமா.

செக் புத்தகத்தை எடுத்து செக் எழுதிக்கொடுத்தார்.
வாக்னர் செக்கை வாங்கினார்.

மீண்டும் அதிர்ச்சியால் வாக்னரின் புருவங்கள் உயர்ந்.....
இல்லை உயரவில்லை.
பழகிப்போய்விட்டது.

"இமயமலையின் உச்சியில் எங்கேயோ இருக்கும்
மொட்டைத்தலை சன்னியாசிகளிடம் ஏது இவ்வளவு பணம்?",
என்று வாக்னர் கேட்கவும் இல்லை.
"ஏதாவது ரசவாத வித்தையைச் செய்து பனிக்கட்டிகளை
யெல்லாம் தங்கமாக்கி பம்பாய் மார்க்கெட்டில் விற்றிருப்பார்கள்",
என்று தாமாகவே நினைத்துக்கொண்டார்.

"இந்தத் தொகையை நான் எதிர்பார்க்கவில்லை.
இருக்கட்டும். இரண்டாவது கேள்வி.... மின் சப்லைக்கு என்ன
செய்வீர்கள்?"
"எங்களிடம் ஜெனரேட்டர்கள் இருகின்றன. நாங்கள்
கையால் சுழற்றவேண்டிய Prayer Wheels ஜபச் சக்கரங்களை
மோட்டார்களுடன் இணைத்து அவற்றின்மூலம் சுழற்றிக்
கொண்டிருக்கிறோம். அதற்காக அந்த ஜெனரேட்டர்கள்".

"Wah-re-Wah! What scientific advancement!" என்று
அந்த 'டெல்லீட்டூமெட்ராஸ்' சர்தார்ஜி மாதிரி வாக்னர் சொல்ல
வில்லை.
பழகிப்போய்விட்டது.

சக், ஜார்ஜ் ஆகிய இரண்டு எஞ்சினியர்களும் திபேத்துக்கு
வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கினர்.
வெகு விரவில் கணினி தயார்நிலைக்கு வந்தது.
Project Shangri-La என்னும் அந்தத் திட்டம் செயலாக்கம்
பெற ஆரம்பித்தது.

அன்புடன்

ஜெயபாரதி

=====================