From jaybee555@VSOn-aB20DC5Cq0myMqKsuSgr9UEQ4KnDLpQt3v ePwIWNUMSZ6rf3n8NkEXaYEKw5p4OW2zyZbV FM.yahoo.invalid Thu Jun 28 21:35:42 2007
Return-Path: X-Sender: jaybee555@VSOn-aB20DC5Cq0myMqKsuSgr9UEQ4KnDLpQt3v ePwIWNUMSZ6rf3n8NkEXaYEKw5p4OW2zyZbV FM.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 12240 invoked from network); 29 Jun 2007 04:35:42 -0000
Received: from unknown (66.218.66.68) by m37.grp.scd.yahoo.com with QMQP; 29 Jun 2007 04:35:42 -0000
Received: from unknown (HELO n5b.bullet.sp1.yahoo.com) (69.147.64.186) by mta11.grp.scd.yahoo.com with SMTP; 29 Jun 2007 04:35:41 -0000
Received: from [216.252.122.218] by n5.bullet.sp1.yahoo.com with NNFMP; 29 Jun 2007 04:35:37 -0000
Received: from [209.73.164.86] by t3.bullet.sp1.yahoo.com with NNFMP; 29 Jun 2007 04:35:37 -0000
Received: from [66.218.66.80] by t8.bullet.scd.yahoo.com with NNFMP; 29 Jun 2007 04:35:37 -0000
Date: Fri, 29 Jun 2007 04:35:36 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 69.147.64.186
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 60.50.13.28
From: "jaybee555" Subject: Oru Paththaam Pasalik Kadhai -
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=vzHY5PQcPF9anTvhTGPgX7NW9J---iiTqxif-G0Ci8U9Medw
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42761
அன்பர்களே,
இது ஒரு பத்தாம்பசலிக் கதை.
ஒரு பத்தாம்பசலி ஆசாமி எழுதும் பத்தாம்பசலிக்
கதை.
உண்மையில் நடந்த சம்பவம்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே மிகவும்
பிரபலமானவர் திருமை நாயக்கர்தான்.
அந்தப் பரம்பரையில் அடுத்த பிரபலமான பெயர்
ராணி மங்கம்மா.
திருமலை நாயக்கர் ஒரு யதேச்சாதிகாரி.
விஜயநகரப் பேரரசு ஒரு காலகட்டத்தில் வடக்கே
கிருஷ்ணாநதி, தெற்கே குமரி முனை, சில சமயங்களில்
யாழ்ப்பாணம், கிழக்கிலும் மேற்கிலும் கடல் முதலிய
எல்லைகளுக்குள் பரவியிருந்தது.
விஜயநகரப் பேரரசருக்குக் கீழ் நான்கு நாயக்கர்கள்,
நூற்றுக்களக்கான அமரநாயக்கர்கள், பாளையக்காரர்கள்
நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர்.
தலைக்கோட்டைப் போருக்குப் பின்னர் அது சுருங்க
ஆரம்பித்தது.
ஹம்பி என்னும் விஜயநகரத்தை விட்டுவிட்டு சந்திரகிரி,
பின்னர் வேலூர் என்று தலைநகரம் மாறியது. விஜயநகரத்தை
கோல்கொண்டா, பீஜாப்பூர் சுல்த்தான்கள் தாக்கி, அதன்
பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர்.
வேலூரிலும் சுற்ற்யுள்ள சிறிய பிரதேசத்திலும் விஜய
நகரப் பேரரசின் அரசு இயங்கிக்கொண்டிருந்தது. அங்குதான்
ராயர் மன்னர் இருந்தார். அவரைவிட பலமிகுந்தவர்கலாக
அவருக்குக் கீழிருந்த நாயக்கர்கள் விளங்கினர்.
அந்த நாயக்கர் பரம்பரைகளில் ஒன்றுதான் மதுரை நாயக்கர்
பரம்பரை. அதில் தோன்றிய திருமலை நாயக்கர் தன்னாட்சி
நிறுவிக்கொள்ளவேண்டும் என்று எண்ணி அடிக்கடி பீஜாப்பூரையும்
கோல்கொண்டாவையும் தூண்டி விட்டுக்கொண்டும் தாமும்
தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தார்.
திருமலை நாயக்கர் இட்ட தீயில் விஜயநகரம் வேகமாக
எரிந்து சாம்பலாகிவிட்டது. கடைசி ராயர்களில் ஒருவர்
மைசூர்க் காடுகளி பைத்தியம் பிடித்து அலைந்துகொண்டிருந்தார்.
அவருடன் போரிட்டு அவரைத் துரத்திவிட்ட ஸ்ரீரங்கராயன்
சுயபலமில்லாமல் ஓடிப்போனான்.
மதுரை சுயாட்சியுடன் திகழ்ந்தது.
ஆனால் இப்போதுவேறு மேலதிகார மிரட்டல்கள்
ஏற்பட்டன.
கோல்கொண்டா பீஜாப்பூர் ஆகியவை தமிழகத்தை
ஏற்கனவே விழுங்கிக்கொண்டிருந்தன.
மதுரையில் திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத
நாயக்கன் செய்த பல தவறுகளாலும், அடாவடித்தனங்களாலும்,
புரிந்த பல போர்களாலும் மதுரை இன்னும் வலுவிழந்தது.
மதுரையிலிருந்து திருச்சிக்குத் தம் தலைநகரை மாற்றிக்
கொண்டதோடு மதுரையிலிருந்த திருமலை நாயக்கர்
மகாலையும் இடித்து அதிலிருந்து பல பகுதிகளை எடுத்து
திருச்சிக்குக் கொண்டுபோய் அங்கு பெரிய அரண்மனையை
கட்டிக்கொண்டார்.
அவர் ஆட்சிக்காலத்திலேயே மதுரையின் பல பகுதிகளை
அவருடைய எதிரிகள் கைப்பற்றிக்கொண்டுவிட்டனர்.
போதாததற்கு அவருடைய தம்பி அழகிரி நாயக்கனும்
நாட்டின் ஒரு பகுதியைக் கைக்கொண்டு சிரமங்களைக்
கொடுத்தான்.
நடுவில் பதவிப் போராட்டங்கள்; உள்நாட்டுப் போர்.
அதற்குள் கோல்கொண்டாவையும் பீஜாப்பூரையும்
முகலாயர்கள் பிடித்துக்கொண்டனர்.
சொக்கநாத நாயக்கரும் பைத்தியம் என்று பட்டம்கட்டப்
பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும் அவர் பெயரளவுக்குத்தான்
மன்னர்.
அவருக்கு நீண்ட காலம் பிள்ளையில்லாமலிருந்து
முதுமைப் பருவத்தில் பிள்ளை பிறந்தது.
விரைவில் சொக்கநாத நாயக்கர் இறந்துவிட்டார்.
அவருடைய பட்டத்தரசி ராணி மங்கம்மா.
அந்தக் கால வழக்கப்படி மங்காம்மாவைச் சொக்கநாத
நாயக்கருடன் உடன்கட்டை ஏறச்செய்ய பெருமுயற்சி எடுத்துக்
கொண்டனர். ஆனால் அரச பதவிக்கு உரிய ஆண் வாரிசை வளர்க்க
வண்டிய பொறுப்பு இருக்கிறது என்று காரணம் காட்டி ராணி மங்கம்மா
மறுத்துவிட்டார்.
அத்துடன் இளவரசனாகிய ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப
நாயக்கரின் ராஜப் பிரதிநிதியாக தாமே மதுரை நாட்டை
ஆண்டுவந்தார்.
ராஜதந்திரத்துடனும் அவ்வப்போது படை பலத்தாலும்
ராணி மங்கமா நாட்டைப் பாதுகாத்துவந்தார்.