From jaybee555@vF2mpHDXh04se8YhXSL1mBEf7Fcvx8Q5Zbr7ARVy3JpykR4UDPupLpTs6IonTg4TD kFaYpAvbDCTg.yahoo.invalid Fri Jun 29 03:33:20 2007
Return-Path:
X-Sender: jaybee555@vF2mpHDXh04se8YhXSL1mBEf7Fcvx8Q5Zbr7ARVy3JpykR4UDPupLpTs6IonTg4TD kFaYpAvbDCTg.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 79902 invoked from network); 29 Jun 2007 10:33:19 -0000
Received: from unknown (66.218.66.68) by m48.grp.scd.yahoo.com with QMQP; 29 Jun 2007 10:33:19 -0000
Received: from unknown (HELO n19a.bullet.sp1.yahoo.com) (69.147.64.130) by mta11.grp.scd.yahoo.com with SMTP; 29 Jun 2007 10:33:19 -0000
Received: from [216.252.122.218] by n19.bullet.sp1.yahoo.com with NNFMP; 29 Jun 2007 10:32:17 -0000
Received: from [66.218.69.3] by t3.bullet.sp1.yahoo.com with NNFMP; 29 Jun 2007 10:32:17 -0000
Received: from [66.218.66.79] by t3.bullet.scd.yahoo.com with NNFMP; 29 Jun 2007 10:32:17 -0000
Date: Fri, 29 Jun 2007 10:32:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 69.147.64.130
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 60.50.13.28
From: "jaybee555"
Subject: Analysis of the Paththaam Pasali Story
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=KY7ikV3QRxKJTWt8c7t8R3kDlUKA5-z13AZTiyE7ef44DC-s
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42765


அன்பர்களே,

இப்போது அந்தப் பத்தாம் பசலிக்கதையைக் கொஞ்சம்
டைஸெக்ட் செய்து அனலைஸ் செய்து ரீஸர்ச் செய்து
பார்ப்போமே.
அதற்காகத்தானே அந்தக் கதையை இங்கே எழுதியது.
சுஜாதா சொன்னதுபோல இது ஏதும் அகத்தியர் விடும்
கரடியல்ல.
உண்மையிலேயே நடந்த வரலாற்றுச் சம்பவம்.

ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு
வந்தது 1882-இல். அப்போது அவருக்கு வயது 15.
நான்கு ஆண்டுகளில் அவர் தமது ஆட்சியை ஸ்திரப்
படுத்திக்கொண்டார்.
அவர் இறந்தது 1689-இல்.
ஏழாண்டுகளே ஆட்சியில் இருந்தார்.
அவர் பதவிக்கு வரும்போது நாடு அலங்கோலமாக
இருந்தது. திருச்சியைத் தவிர ஏதும் கைவசமில்லை. நாட்டின்
பல பகுதிகள் கைமாறி இருந்தன. பக்கத்தில் இருந்த வலுமிக்க
நாடுகள் - மைசூர், தஞ்சை ஆகியவை நாட்டைக் கூறுபோட்டுக்
கொண்டு சூறையாடிக்கொண்டிருந்தன.
மூன்றாவதாக மதுரை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய
சேது நாடு; அதன் அதிபதி கிழவன் சேதுபதி.
அவர் தம்முடைய நாட்டின் பரப்பை விரிவாக்கிக்
கொண்டதோடு மதுரைக்கும் கப்பம் கட்டுவதில்லை.
அனுப்பிவைத்த படைகளையும் தோற்கடித்து தளபதியையும்
கொன்றுவிட்டார்.
தஞ்சை மன்னன் மராட்டிய எக்கோஜி, சிவாஜியின் தம்பி.
பெரும் கொடுங்கோலன். கொள்ளைக்காரன். துரோகி.
நயவஞ்சகன்.
மைசூர் மன்னன் இன்னொரு கொடுங்கோலன். மதுரை
மக்களிடமிருந்து கப்பம், வரி வசூலிக்கமுடியவில்லை
என்றதும் கத்திகளை நட்டு வைத்து மக்களை அவற்றின்
மீது தூக்கி எறியச் செய்தவன். வயது, ஆண்பெண் என்ற
வித்தியாசம் பார்க்கக்கூடாது என்று அவன் கொடுத்த
உத்தரவை அப்படியே நிறைவேற்றினார்கள், மைசூர்க்காரர்கள்.
அவனுடைய போராளிகள் மதுரை நாட்டில் பல இடங்களில்
நெருப்புவைத்து கொள்ளையடித்தார்கள். இது அவனுடைய
உத்தரவுப்படி நடந்த காரியம்.
இவர்களையெல்லாம் இந்துத்துவாக்காரர்கள் பெரிய
ஹீரோக்களாகச் சித்தரிப்பார்கள். ஏனெனில் இவர்கள்
இந்து மன்னர்கள். ஆனால் இந்த அரக்கர்கள் கொன்றதெல்லாம்
இந்துக்களைத்தான் என்பதை மறந்துவிடுவார்கள். மைசூர்
மன்னன் இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டவன். அவன்
மதுரை நாட்டிலிருந்த சிவன் கோயில்களையும் விஷ்ணு
கோயில்களையும் கொள்ளையடித்தான். அங்கு இருந்த
பொக்கிஷத்தையெல்லாம் கைப்பற்றிக்கொண்டான். கோயிலைச்
சேர்ந்தவர்கள் தப்பியோடிப் போய் மலைகளில் ஒளிந்து
கொண்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் முத்துவீரப்பர்
பட்டத்துக்கு வந்தார்.
1686-ஆம் ஆண்டில் அவர் பல நிர்மாணவேலைகளை
தம் நாட்டில் செய்துகொண்டிருந்தார்.
கொடிய எத்ரிகளையும் அடங்காத பாளையக்காரர்களையும்
அடக்குவதற்கு முத்துவீரப்பரும் கொடியமுறைகளைத்தான்
கையாண்டிருக்கவேண்டும்.
1686-க்கும் 1689-க்கும் இடைப்பட்ட காலத்தில்
ஔரங்கஸீபின் செருப்பு ஊர்வலம் நடைபெற்றது.

அன்புடன்

ஜெயபாரதி

===================