From jaybee555@WdJjIFJAXCKJCWfIzmQOUAeBNKjcVufDlm-SFPvq35A00rDXY6Aiuj7XbOZZ1GzkWR5ZrgA8mCSxiB61.yahoo.invalid Sat Jun 30 02:52:36 2007
Return-Path: X-Sender: jaybee555@WdJjIFJAXCKJCWfIzmQOUAeBNKjcVufDlm-SFPvq35A00rDXY6Aiuj7XbOZZ1GzkWR5ZrgA8mCSxiB61.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 41153 invoked from network); 30 Jun 2007 09:52:36 -0000
Received: from unknown (66.218.67.34) by m56.grp.scd.yahoo.com with QMQP; 30 Jun 2007 09:52:36 -0000
Received: from unknown (HELO n28b.bullet.sp1.yahoo.com) (209.131.38.247) by mta8.grp.scd.yahoo.com with SMTP; 30 Jun 2007 09:52:36 -0000
Received: from [216.252.122.217] by n28.bullet.sp1.yahoo.com with NNFMP; 30 Jun 2007 09:52:22 -0000
Received: from [66.218.69.3] by t2.bullet.sp1.yahoo.com with NNFMP; 30 Jun 2007 09:52:22 -0000
Received: from [66.218.66.92] by t3.bullet.scd.yahoo.com with NNFMP; 30 Jun 2007 09:52:22 -0000
Date: Sat, 30 Jun 2007 09:52:22 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 209.131.38.247
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 60.50.14.174
From: "jaybee555" Subject: Further Analysis of the Paththaam Pasali Story
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=DWkDptBkenRJ qWq7NPoguoI5om7xRwCZ-AD8Fpe-jeNoCnQ
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42769
ஏற்கனவே எழுதப்பட்ட விஷயங்கள் தமிழில்
இருந்தபடியால் இந்த இழையைத் தமிழிலேயே தொடர்வோம்.
பின்னர் அதை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம்.
Dear Jaybee:
It is a terrific story. No one would have thought of a young upstart to
sow the seed of dismantling of a great Mogul empire.I had always wondered
why Aurengezeb didn't go beyond certain point in the south!!
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி அந்த அளவோடு ஔரங்கஸீப்
தன்னுடைய பேரரசின் விரிவாக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
இன்னும் கொஞ்சம் அனலைஸ் செய்வோமே.......
ஔரங்கஸீப் தம்முடைய தந்தையின் நான்காம் மகன்.
பட்டத்துக்கு உரியவர் அல்லர். தம்முடைய தந்தையைச்
சிறைப்படுத்திவிட்டு, சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு
பதவிக்கு வந்தவர்.
1658-இல் இரண்டாம் முறையாக முடிசூட்டிக்கொண்டார்.
அவருடைய ஆட்சியின் முற்பகுதியில் சீக்கியர்,
ரஜபுத்திரர், மராத்திய சிவாஜி ஆகியோருடன் போரிட்டுக்
கொண்டிருந்தார்.
1680-ஆம் ஆண்டில் சிவாஜி இறந்துபோனார்.
தக்காணம் என்று குறிப்பிடப்படும் - இன்றைய மத்தியப்
பிரதேஷ், தென் குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா,
தமிழகம் ஆகியவற்றில் குழப்பநிலை இருந்தது.
மராத்தியர், கோல்கொண்டா, பீஜாப்பூர், தமிழக நாயக்க
மன்னர்களும் மைசூர் மன்னனும் சுதந்திரமாக இருந்தனர்.
தானே நேரில் சென்று எல்லாரையும் அடக்கி,
தக்காணத்தைக் கைப்பற்றி, ஆஃப்கானிஸ்தானிலிருந்து
அஸ்ஸாம், காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை எந்தக்
காலத்திலும் யாரும் சாதிக்காத அளவுக்கு இந்தியாவின்
பேரரசனாக விளங்கவேண்டும் என்று ஔரங்கஸீப் நினைத்தார்.
அப்போது அவர் ரஜபுத்திரர்களுடன் போரிட்டுக்
கொண்டிருந்தார். அவர்களுடன் அவசரமாக சமாதான
உடன்படிக்கை செய்துகொண்டார்.
1681-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தக்காணத்துக்குப்
புறப்பட்டார்.
(1682-இல் முத்துவீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்தார்).
ஆங்காங்கு அவருடைய பரிவாரங்களுடன் தங்கி
அங்கு தேவையான போர்களைப் புரிந்தவாறு 1685-இல்
ஷோலாப்பூரில் பாடியிறங்கினார்.
பாடியிறங்குதல் என்பது தங்கள் இடங்களிலிருந்து
புறப்பட்டு இன்னோர் இடத்தில் போர் புரியச்செல்லும்போது
வழியில் தங்கும் செயலைக் குறிக்கும்.
ஓரிடத்தைத் தாக்குவதற்காக குறிப்பிட்டதோர் இடத்தில்
வந்து தங்குவதையும் பாடியிறக்குதல் என்பார்கள்.
ஏதோ தோளில் தாங்கிய ஈட்டியைக் கீழே வைத்துவிட்டு,
'அக்கடா' என்று உட்கார்ந்து இளைப்பாறுவது போன்ற
எளிய செய்கையல்ல.
சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
அது தண்ணீர் வசதியுடன் பாதுகாப்பான சமதளமாக
இருக்கவேண்டும். அங்கு இடத்தைச் செப்பனிட்டு, நடுவில்
அவர்களுடைய உணவுப்பொருள்கள், தளவாடங்கள், பொக்கிஷம்
ஆகியவற்றைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, அந்தப் படையின்
தலைவனாக இருக்கும் அரசன்/இளவரசன்/தண்டநாயகனின்
கூடாரமும் அதைச்சுற்றி மற்றவர்கள் கூடாரங்களும் அமைத்து
கடைகண்ணி, சந்தைகள் போன்றவுடன் விளங்கவேண்டும்.
சுற்றிலும் மரத்தால் ஆன சுவர்களை எழுப்பியிருப்பார்கள்.
அவற்றின் வெளியே அகழிகளை வெட்டிவைப்பார்கள்.
அந்தப்புரம், நடனமாதர் போன்றவர்களும் மந்திரி
பிரதானிகளும் இருக்க, தூதுவர்கள், ஒற்றர்கள் போன்றோருடன்
விளங்கும், அந்தப் பாடி.
ஐந்து லட்சம் பேர் கொண்ட ஔரங்கஸீபின் உடன்கூட்டமும்
பரிவாரமும் தங்கும் இடங்கள் பெரும் நகரங்கள் போல் விளங்கின.
ஷோலாப்பூரிலிருந்துகொண்டு மராத்தியரை அடக்க
முயன்றும் அதில் வெற்றி கிடைக்கவில்லை.
கோல்க்கொண்டாவும் பீஜாப்பூரும் அறுநூறு ஆண்டுகளுக்கு
முன்னர் தோன்றிய பாமனிப் பேரரசு அழியும்போது உடைந்து
சிதறிய ஐந்து நாடுகளில் இரண்டு.
அவை சுதந்திரமாக இருந்துகொண்டு விஜயநகரப் பேரரசின்
பல பகுதிகளைப் பிடித்துக்கொண்டு பெரிதாக விளங்கின.
கோல்கொண்டா செஞ்சிவரைக்கும் பிடித்துக்கொண்டது.
பீஜாப்பூரின் சார்பில் அதன் தளபதி எக்கோஜி தஞ்சையைப்
பிடித்திருந்தான்.
மைசூர் நாடும் தமிழகத்தின் சில பகுதிகளைக்
கைப்பற்றியிருந்தது.
ஔரங்கஸீபின் கவனம் கோல்கொண்டா, பீஜாப்பூர்
மீது திரும்பியது.
1686-இல் பீஜாப்பூரைக் கைப்பற்றி அதன் சுல்த்தானை
ஆயுள்கைதியாக ஒரு கோட்டையில் சிறைவைத்தார்.
பீஜாப்பூர் ஓர் அழகிய நகரம். அங்கிருந்த சுல்த்தான்கள்
பெரும் கலாரசிகர்கள். ஓவியங்களும் சிற்பங்களுமாகச்
சேகரித்து வைத்திருந்தனர்.
இவற்றையெல்லாம் வெறுத்த ஔரங்கஸீப் பீஜாப்பூரை
அழித்தார்.
அடுத்து கோல்க்கொண்டா.
அந்த நாடு ஔரங்கஸீபின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தது.
ஆகவே ஔரங்கஸீப் அங்கிருந்த கோட்டைத் தளபதி
ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்தார். அவன் கோட்டையின் முக்கிய
வாயிலைத் திறந்துவிட்டான்.
கோல்க்கொண்டாவும் விழுந்தது.
அத்துடன் கோல்க்கொண்டா, பீஜாப்பூர் ஆகியவற்றின்
பிரதேசங்களும் ஔரங்கஸீபின் கைக்குள் வந்தன.
அதன் பின்னர் 1686-க்கும் 1689-க்கும் இடைப்பட்ட
காலத்தில் ஔரங்கஸீபின் செருப்பு ஊர்வலம் திருச்சிக்கு
வந்திருக்கும்.
ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு
வந்தது 1882-இல். அப்போது அவருக்கு வயது 15.
நான்கு ஆண்டுகளில் அவர் தமது ஆட்சியை ஸ்திரப்
படுத்திக்கொண்டார்.
அவர் இறந்தது 1689-இல்.
ஏழாண்டுகளே ஆட்சியில் இருந்தார்.
1686-ஆம் ஆண்டில் அவர் பல நிர்மாணவேலைகளைத்
தம் நாட்டில் செய்துகொண்டிருந்தார்.
அவருடைய ஆட்சிக்காலத்துக்குள் 1686-இலிருந்து
1689-க்குள் ஔரங்கஸீப் வர்ஸஸ் ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப
நாயக்கர் confrontation நடைபெற்றிருக்கிறது.
ஔரங்கஸீபின் மிலிட்டரி நடவடிக்கைகளின் கால நிரலும்
முத்துவீரப்ப நாயக்கரின் ஆட்சிக் கால நிரலும் ஒத்துவருகின்றன.