From jaybee555@CeasNCpNbGoOqwyCAuSeDka4g7OEegFNZyZnFLUW8XJu4TNKg8NgSPKpsLgQjwLDgXP3wkVRnSaK.yahoo.invalid Sat Jun 30 22:45:20 2007
Return-Path: X-Sender: jaybee555@CeasNCpNbGoOqwyCAuSeDka4g7OEegFNZyZnFLUW8XJu4TNKg8NgSPKpsLgQjwLDgXP3wkVRnSaK.yahoo.invalid
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 99406 invoked from network); 1 Jul 2007 05:45:20 -0000
Received: from unknown (66.218.66.70) by m54.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2007 05:45:20 -0000
Received: from unknown (HELO n19d.bullet.scd.yahoo.com) (66.218.67.244) by mta12.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2007 05:45:20 -0000
Received: from [66.218.69.3] by n19.bullet.scd.yahoo.com with NNFMP; 01 Jul 2007 05:43:31 -0000
Received: from [66.218.66.77] by t3.bullet.scd.yahoo.com with NNFMP; 01 Jul 2007 05:43:31 -0000
Date: Sun, 01 Jul 2007 05:43:30 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Yahoo-Newman-Property: groups-compose
X-Originating-IP: 66.218.67.244
X-eGroups-Msg-Info: 1:6:0:0
X-Yahoo-Post-IP: 60.48.93.154
From: "jaybee555" Subject: About That Paththaam Pasalik Kadhai
X-Yahoo-Group-Post: member; u=26960409; y=qTeyvgsNJjJrITnlRS9WxA3flHBEJZAr NilUR5HMlczMUoD
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 42776
அன்பர்களே,
அந்தப் பத்தாம் பசலிக் கதை திடீரென்று எழுதப்
பட்டதல்ல.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அதை எழுதவேண்டும்
என்று நினைத்தது.
ரங்க கிருஷ்ண முத்துவீரப்பருக்கும் முன்னிருந்த
அலங்கோல நிலையையும் அது எப்படி ஏற்படுத்தப்பட்டது
என்பதையும் விரிவாக எழுத அப்போது நினைத்திருந்தேன்.
அப்போதுதான் முத்துவீரப்பருடைய சிறப்பை நன்கு
அறிந்துகொள்ளமுடியும்.
இணையத்திலும்கூட இதை எழுதவெண்டும் என்று
நினைத்தது.
ஒருமுறை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆனால் திருச்சி
என்பதற்குப் பதில் மதுரை என்று போட்டு உலப்பியிருந்தேன்.
பின்னர் ஒழுங்காகத் திருத்தி எழுதினேன்.
தமிழில் எழுதவில்லை.
இன்னும் எத்தனையோ விஷயங்களை எழுதவேண்டும்
என்று நினைத்தேன். ஆனால் எழுதமுடியவில்லை.
ஆகையால்தான் சுருக்கமாகவேனும் முத்துவீரப்பரைப்
பற்றி எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன்.
தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் வரலாறு என்பது
தேதிகளும் அரசர்களும் போர்களும் வெற்றி-தோல்விகளும்தான்.
ஆனால் வரலாற்று மாந்தர்கள், அவர்களின் சாதனைகள்,
போராட்டங்கள், அவர்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய
தாக்கங்கள், மக்களுடைய ஏற்றத்தாழ்வுகள், கஷ்டநஷ்டங்கள்,
அரசர்களுடைய மனோவியல் போன்ற பல விஷயங்கள்
இருக்கின்றன.
Sociological, Geopolitical, Strategy,
Management போன்ற பல விஷயங்களை அழுத்தம்கொடுத்து
எழுதியிருப்பேன்.
'நாயக்கர் கட்டளை'யைத் தேடி எடுத்துப்பாருங்கள்.
'நவராத்திரி நாயகி', 'விஜயதசமி', 'ராமப்பய்யன் அம்மானை'
'சேதுநாட்டுப் போர்' போன்றவற்றைத் தேடி எடுத்துப்பாருங்கள்.
முக்கியமாக Against Odds என்னும் போரட்டங்களை
முன்வைக்கவேண்டியுள்ளது.
ஏதோ அந்தக் காலத்தில் எல்லாருமே எல்லாவற்றையும்
காற்றில் பறக்கவிட்டுவிட்டதுபோல பெரும்பான்மையினர்
நினைப்பதுண்டு.
ஆனால் அப்படியல்ல.
பலர் இருந்திருக்கிறார்கள்.
They tried.
Really tried.
ஊமையன் சண்டையை எழுதிவந்துகொண்டிருக்கிறேன்
அல்லவா? அதையும் மற்றவர்கள் எழுதுவதிலிருந்து வித்தியாச
மானதாகத்தான் படைத்துக்கொண்டிருக்கிறேன்.
பலரால் சொல்லப்படாத விஷயங்களைச் சொல்வதும்
காட்டாததன்மைகளைச் சுட்டிக் காட்டிவைப்பதும் குறிக்கோள்.
நான் இணையத்தில் எழுதியுள்ள பல வரலாற்று விஷயங்களை
அற்புதமான நாவல்களாக விரித்து எழுதலாம்.
அத்தகைய கோணம், கண்ணோட்டம் ஆகியவை நான்
எழுதியவற்றில் அடங்கியிருக்கின்றன.
பத்தாம்பசலி விஷயங்களை இப்படி உயிரோட்டமும்
Dynamism-மும் Possibilities-ஸும் இருக்கும்வகையில் எழுதுவது
சாதாரணமான காரியமல்ல.
சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளில் எழுதினால்தான் -
எழுதிப் பரிசு பெற்றால்தான் திறமைசாலி என்பது அர்த்தமல்ல.
இதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும்.
இது இன்னும் கஷ்டம்